Page 52 of 401 FirstFirst ... 242505152535462102152 ... LastLast
Results 511 to 520 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #511
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    'உத்தமன்' ஸ்டில்கள் உத்தமம். சூப்பர். பாராட்டுக்கள். 'உத்தமன்' கனவுகள் காலமெல்லாம் வராமல் போகுமா! தங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் பதிவு. ஏற்றுக் கொள்ளவும்.

    "கனவுகளே கனவுகளே" பாடலில் தலைவரின் அட்டகாசமான போஸ்கள் தங்களுக்காக.

















    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like







    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #513
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்னொரு பெரிய கடுப்பு,
    எல்லா NT படங்களிலும் நல்ல பாடல்களை தூக்கி விடுவார்கள்.அதற்கு பதிலாய்.....(சோஜா,சோஜா)
    மரத்தை வைச்சவன்- எதிரொலி.(பதிலாய் உங்க நொள்ள(நல்ல உச்சரிப்பு) மனசுக்கொரு )
    கேட்டாயே ஒரு கேள்வி- இளைய தலைமுறை(பதிலாய் ஒரு அறை கொடுத்தால்)
    தென்றல் வரும், குயிலாக- பாலும் பழமும் படத்துக்காக பதிவு பெற்றவை.
    என்னை தொட்டு- பார் மகளே பார்(பதிலாய் மதுரா நகரில்)
    அடியம்மா ராசாத்தி -வசந்த மாளிகையில் தூக்க பட்டது-Peppy Song .
    பட்டிலும் மெல்லிய- ஞாயிறும் திங்களும் படம் வரவில்லை(தேவிகா ஜோடி).வேறு படத்தில் உபயோகித்திருக்கலாம்.

  5. #514
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய சென்னை பதிப்பு 'தினத்தந்தி' விளம்பரம்.

    Last edited by vasudevan31355; 29th June 2012 at 04:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #515
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய சென்னை பதிப்பு 'தினத்தந்தி' 'சொர்க்கம்' விளம்பரம்.

    Last edited by vasudevan31355; 29th June 2012 at 04:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #516
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'திரிசூலம்' மறு வெளியீட்டு 'இன்று முதல்' விளம்பரம்




    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #517
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like






    இன்று சென்னை 'தினத்தந்தி'யில் கர்ணன் 16-ஆவது ஹவுஸ்புல் வார விளம்பரம், 'சொர்க்கம்' ஜூலை 6 முதல் பவனி வரப் போகும் விளம்பரம் மற்றும் 'திரிசூலம்' இன்றுமுதல் விளம்பரம் ஆக மொத்தம் தலைவரின் மூன்று படங்களின் விளம்பரங்கள் வந்துள்ளன. சரித்திரம் திரும்புகிறது. அன்றும், இன்றும், என்றும் நம் நடிகர் திலகம் திரையுலகை ஆட்சி செய்வதை இது நிரூபிக்கிறது.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th June 2012 at 05:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #518
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதை இப்போதும் நிருபித்துக் பாசமலர்கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆரும், சிவாஜியும். நாளிதழ் டிசைன்களில் பூவிதழ் சிரிப்போடு நிறைந்து நிற்கும் இவ்விருவரது படங்களை பார்த்தவுடனேயே பரவசப்படுகிறார்கள் ரசிகர்கள்.

    நவீனகால கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை வாரிக்குவிக்கும் இவர்கள்தான் பெரும்பாலான தியேட்டர்காரர்களுக்கு அட்சய பாத்திரம். சமீபத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைப்படம், 100 வது நாளை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த கலெக்ஷன் ருசி செய்திருக்கும் மகத்தான சாதனை என்ன தெரியுமா? சிவாஜியின் பழைய படங்களை தூசு தட்டி எடுப்பதுதான். அதை மறுபடியும் டிஜிட்டல் முறையில் நேர்த்தியாக்கி ரிலீஸ் செய்ய துடிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    அந்த வரிசையில் பாசமலர் படத்தை வெளியிட இருக்கிறார்கள். சிவாஜி-சாவித்ரி நடித்த அந்த படம் இப்போதும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும். 1961 ல் வெளிவந்து சுமார் 51 ஆண்டுகள் கழித்து வெளிவரும் இப்படத்தில் இடம்பெற்ற 'மலர்ந்தும் மலராத' என்ற பாடல் இந்த நூற்றாண்டின் அருமை பெருமைகளில் ஒன்று. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை சிவாஜியின் தீவிர ரசிகரான பூமிநாதன் என்பவரே வெளியிடுகிறார் என்பதுதான் முக்கியமான நியூஸ்


    Courtesy: Tamil Cinema website

  10. #519
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1973 ஜனவரி மாதம்னு நினைக்கிறேன். ரொம்ப நாளைக்குப்பிறகு சிவாஜி அண்ணாவை நடிகர் சங்க விழாவில் சந்தித்தேன். "என்னம்மா, எப்படியிருக்கே" என்று விசாரித்தார். சிறிய ப*டங்களில் சிறு சிறு வேடங்களிலும், நடனக்காட்சிகளிலும் நடிப்பதாக சொன்ன நான் "அண்ணே.. 'எங்கிருந்தோ வந்தாள்' படத்துக்குப்பிறகு உங்களோடு நடிக்க வாய்ப்பே கிடைக்கலியேண்ணே" என்றேன். அதற்கு அவர் "அம்மாடி நீ இப்ப சொன்னதை (அவர் நெஞ்சைத் தொட்டுக்காட்டி) இங்கே வச்சிருக்கேம்மா. கூடிய சீக்கிரமே உனக்கு வாய்ப்பு வரும்" என்றார். அந்த நேரத்தில் சகுந்தலா அக்காதான் (சி.ஐ.டி.சகுந்தலா) அவருடைய படங்களில் அதிகம் நடித்து வந்தார்.

    ஒரு மூன்று நான்கு நாள் கழித்து சுந்தரம் அண்ணன் (வியட்நாம் வீடு சுந்தரம்) போன் செய்து அவருடைய ஆஃபீஸுக்கு வரச்சொன்னார். போனேன்.என்னைக்கணடதும் சுந்தரம் அண்ணன் "வாம்மா, உனக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. சிவாஜி சாருடைய புதுப்படம் 'கௌரவம்' படத்துல நடிக்க சான்ஸ் வந்திருக்கு. உனக்கு சம்மதம்தானே" என்றார். எனக்கு சந்தோஷத்தில் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. "என்னண்ணே இப்படி கேட்கிறீங்க?. எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேன்" என்றதும் அவர் சொன்னார் "நேத்து சாயந்திரம் அவருடன் 'கௌரவம்' கதை பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தபோது "அந்த காக்கா வலிப்பு டான்ஸ்காரி ரோலுக்கு யாரைப் போட்டிக்கே"ன்னு கேட்டார். நான் "நம்ம சகுந்தலாவைத்தான் போட்டிருக்கேன்"னு சொன்னேன். "வேண்டாம். அவளை மாத்திட்டு ஜெய்குமாரியைப்போடு" என்றார். "ஏண்ணே?" என்று கேட்டேன் "சகுந்தலாவுக்கு நிறைய படம் இருக்கு. பாவம் இந்த பொண்ணுக்கு படமே இல்லையாம். நான் சொல்றேன் போடுறா" என்று அதட்டினார். நானும் போட்டுட்டேன். அது மட்டுமல்ல உனக்கு சம்பளத்தையும் சொல்லிட்டார்" என்று சொல்லி ஒரு தொகையைச் சொன்னார். நான் அசந்துட்டேன். நான் நடிக்க வந்து இதுவரை வாங்காத தொகை அது.

    உடனே சிவாஜி அண்ணா வீட்டுக்கு போன் செய்து அண்ணன் இருக்கிறாரா என்று கேட்டேன். ஸ்டுடியோ பெயரைச்சொல்லி ஷூட்டிங் போயிருப்பதாக சொன்னார்கள். டாக்ஸி பிடித்துக்கொண்டு ஸ்டுடியோவுக்கு ஓடினேன் (அப்போது என்னிடம் காரெல்லாம் கிடையாது). அங்கே 'ராஜபார்ட் ரங்கதுரை' ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஓடிப்போய் அண்ணன் காலில் 'பொத்தென்று' விழுந்தேன். பதறிப்போன அவர் "அடடே எழுந்திரும்மா, இந்தாம்மா அவளைத்தூக்கிவிடு" என்று சொல்ல நடிகை ஜெயா என்னைத் தூக்கி விட்டாங்க. எனக்குப் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.

    அதில் என்னுடைய ரோல் வெறுமனே 'காபரே' ஆடுவது மட்டுமல்ல, அந்த காக்காவலிப்பு ரோல் மக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. கதையில் முக்கிய திருப்பமான ரோலாகவும், கதையின் பின்பகுதி என்னுடைய கொலையைச் சுற்றியே வருவதாகவும் அமைந்திருந்தது. நான் சொன்ன ஒரு வார்த்தையை மனதில் வைத்து உடனடியாக வாய்ப்பு தந்த அண்ணனை நான் எப்போதும் மறக்க முடியாது".

    நடிகை ஜெய்குமாரி இந்த சம்பவத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவருடைய படங்கள் மட்டுமல்ல. அவர் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் கூட உணர்ச்சி மயமானவைதான்.
    Last edited by ragulram11; 29th June 2012 at 05:38 PM.

  11. #520
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Excellent Rahul.We are all proud of you.(As a fellow neyvelian,I am more so)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •