Page 95 of 401 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #941
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி,
    உண்மை. Nt யின் ரசிகர் என்று பெருமையாக சொல்லி கொண்டவர்கள் லிஸ்ட் மற்ற மாநிலத்தில் மிக அதிகம். திலகன், ஹனீபா, கோபி, மது, பிரேம் நசீர்,மம்மூட்டி, மோகன்லால், ராஜ் குமார், விஷ்ணுவர்தன், ரமேஷ் அர்விந்த்,நாகேஷ்வர் ராவ்,ராம ராவ், திலிப் குமார், ராஜ் கபூர், ப்ரித்வி ராஜ் கபூர்,தேவ் ஆனந்த்,அசோக் குமார், அமிதாப் பச்சன்,சஞ்சீவ் குமார்,நானா படேகர்,சத்யஜித் ரே,மன்மோகன் தேசாய்.என்று சொல்லி கொண்டே போகலாம்.
    திலகனின் மறக்க முடியாத படங்கள்-யவனிகா,இரைகள்,பெருந்தச்சன்,யாத்ரா,பஞ்சக்னி,தனியாவர ்தனம்,முத்தி,தோணி, ஜாதகம்.
    (உலக சினிமாக்கள் ரசிகன் என்ற வகையில் நான் மலையாள பட ரசிகன்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #942
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    திலகனின் முக்கியமான படங்களை குறிப்பிட விட்டு விட்டீர்கள். மோகன்லாலுடன் கீரிடம், செங்கோல், ஸ்படிகம், கிலுக்கம், பவித்ரம், நரசிம்மம்,பக்ஷே முதலியவை. மம்மூட்டியுடன் தனியாவர்த்தனம், முக்தி, சங்கம், குட்டேட்டன், "No 1,ஸ்நேக தீரம்,பெங்களூர் நார்த்", The Truth, என்பவற்றை சொல்ல வேண்டும். இதை தவிர மூணாம் பக்கம், God Father, இப்போது அண்மையில் வெளிவந்த உஸ்தாத் ஹோட்டல் என்று அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

    அன்புடன்

  4. #943
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு- பகுதி-2
    வியட்நாம் வீட்டின் கதை ஒன்றும் nerrative surprise கொண்டதல்ல. மிக சாதாரண அடுத்த வீட்டு கதை. Prestige பத்மநாபையர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தகப்பனை சிறு வயதில் இழந்து,தாயாரால் வறுமையில் வளர்க்க பட்டு,அத்தையால் ஆதரிக்க பட்டு ,அத்தை மகளையே மணந்து நல்வாழ்க்கை
    வாழும் ஒரு தனியார் நிறுவன உயர் நிலை ஊதியர்(B.P, இருதய நோய் உண்டு) நல்லொழுக்கம் ,நன்னடத்தை, பேணும்,மற்றோரை பேணும் படி கட்டாய படுத்தும், prestige என்பதை தன மந்திர சொல்லாக கொண்டு வாழ்பவர். அற்புதமான இவர் வாழ்வு, சரியான சேமிப்பில்லாமல், அலுவலகம் இவருக்கு ஓய்வு(retiement )கொடுத்து விட, தயாராய் இல்லாதவர் பிள்ளையை மலை போல் நம்புகிறார். ஆனால் நல்ல வேலையில் உள்ள மூத்தவன் மனைவி பேச்சால் தடம் புரண்டு, அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அளவில் சென்று,குடும்ப பொறுப்பையும் ஏற்க மறுக்க, இளையவன் சரியான படிப்பு இல்லாமல் ,சாதாரண தொழிலாளி வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பில்லா ஊதாரி. மகளோ ,ஒரு காதலில் மூழ்கி,ஓடி போகும் அளவு வரை சென்று ,சரியான நேரத்தில் ,தந்தையால் மீட்க படுகிறாள். இறுதியில் ,ஓரளவு குடும்பத்தில் அமைதி திரும்பி(புயலுக்கு பின்) ,அவர் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேரியும், அலுவலகம் அவரை மீண்டும் உயர் பணிக்கு கூப்பிட,ஆனந்த அதிர்ச்சியில் ,உயிர் துறக்கிறார். சாதாரண மேடை நாடக கதையல்லவா?
    இனி நம் கடவுள் தன் திருவிளையாடலால் இதை ஒரு cult படமாக்கி,பிரம்மாண்ட வெற்றி பெற வைத்த விந்தையை பார்க்கலாம்.
    முதலில் சொன்னால் ,இந்த மாதிரி பாத்திரங்களால்தான், NT , தனது தனித்தன்மையை நிரூபித்து, உலக நடிகர்களிலே முதல்வர் என்று புகழும் அளவு,உயர்ந்து இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் போற்ற படுகிறார்.(கமலும் இந்த பாத்திரத்தை மிக சிலாகிப்பார்).மற்ற நடிகர்கள்,தனது இயல்புடனே சிறிது மாற்றம் செய்து ,ஏற்ற பாத்திரத்தை தன் இயல்புக்கு மாற்றுவர். ஆனால் உலகத்திலேயே , கூடு விட்டு கூடு மாறி ஏற்று கொண்ட பாத்திரத்தில் தன்னை நுழைப்பவர் ,நம் NT ஒருவரே. அதனால் ,அவர் எடுக்கும் ரோல் மாடல்,Proto -type , அந்த genre type இல் ,ஒரு அதீத குண,மன நலன்களுடன், பல்வேறு மிகை இயல்பு கொண்ட பாத்திரங்களின் அசல் கலவையாக, அந்தந்த இனத்தையோ,மதத்தையோ,தொழிலையோ,குடும்ப பிரச்சினைகளையோ,மன-உடல் பிரச்சினைகளையோ பாத்திர வார்ப்பில் பிரதிபலிக்கும் போது அதீத கலவைகளின் வார்ப்பாக(சங்கராசார்யார்,டிவிஎஸ் ) இருக்கும். அதை stylised ஆக அவர் நடிக்கும் போது connoisseurs என்று சொல்ல படுபவர்கள் பரவசப்படுவார்கள் அல்லது சக நடிகர்கள் பாடம் கற்று கொள்வார்கள்.(Actors ' actor ) . இது ஒரே மனிதர் பல்வேறு கதாபாத்திரங்களை நடிக்கும் போது, வேறு பாடு காட்டவும், சிவாஜி என்ற கலைஞன், சிவாஜி என்ற கலைஞனை ஒவ்வொரு முறையும் தாண்டி,வேறு படுத்த மிக மிக அவசியம்.
    இதில் வரும் prestige பத்மநாபன் பாத்திரம் ஒரு wonder . தான் நடித்ததை திரும்ப நடிக்காத ஒரே மேதை NT மட்டுமே.(ஒரே மாதிரி ரோல் ஆக இருந்த போதும்)
    நீங்கள் ஒரு பிராமணரை (வெவ்வேறு வயது கொண்ட)அறுபதுகளில் observe செய்திருக்கீர்களா? செய்யா விட்டாலும் என்னோடு இப்போது பயணியுங்கள். முரண்பாடுகளின் மொத்த மூட்டைதான் அவர்கள். உலகத்திற்காக கிராப், லௌகீகம் காக்க குடுமி, அலுவலம் போக மேல் கோட் ,கீழே லௌகீகம் காக்க பஞ்ச-கச்சம், மேலாதிக்க மனம், ஆனால் பொருளாதாரத்தில் அன்றாடம் காய்ச்சிகள்,வேடிக்கையான சுத்தம், உடலை துடைத்து கொள்ளாமல் ஈரம் உடுத்தி மடி காப்பார்கள்.எல்லோரையும் ஒதுக்கி வைப்பார்கள் ஆசாரத்திற்கு. ஆனால் மிக சிறந்த தனி-மனித நேயம் மிக்கவர்கள்.வித்யாசமான பேச்சு வழக்கு.பேசும் பாணி. எல்லாம் அறிந்தது போல், எல்லாவற்றையும் பேசுவார்கள். வீட்டில் பேசுவது கூட அறிவுரை பாணியிலேயே இருக்கும்.சம்பந்தமில்லாத விருந்தாளியிடமும் அறிவுரை பாணிதான்.பேச்சில் ஒரு assertion , body -language ஒரு கண்டிப்பான ஒரு hand movements , side -on body swings ,வயதுக்கு மீறின ஒரு முதுமை,இயல்பான கோழைத்தனம், பிரச்சினைகளில் புலம்பும் மனம்,மற்றையோரை எல்லார் எதிரிலும்(பிரைவேட் ஆனா விஷயங்களிலும்)கண்டித்து தான் விரும்பியதை சொல்லும் அதீத ஸ்வாதீதம்,ஒரு confined -disciplin இதுதான் நான் பார்த்த பிராமணர்கள்.(தஞ்சாவூர்,திருநெல்வேலி,சென்னை ஆகிய இடங்களில்)
    (தொடரும்)
    Last edited by Gopal.s; 27th September 2012 at 10:38 AM.

  5. #944
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #945
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்களின் திரியில் ரசித்த செப்டம்பர் முத்துக்கள்-

    பம்மலார்-அனைத்து வரலாற்று ஆவணங்கள்,கட்டுரைகள்,செய்திகள்,பிரபலங்கள் கண்ணோட்டத்தில் நடிகர்திலகம்,புகைப்படங்கள்,விளம்பரங்கள்-குறிப்பாக நாசர்,இளங்கோவன்,சம்பத்குமார்,கலாநிகேதன் பாலு,பாலச்சந்தர்,குற்றாலிங்கம் கட்டுரைகள்,உயர்ந்த மனிதன் ,பாவ மன்னிப்பு விளம்பரம்,செவாலியே கட்டுரைகள்,புகைப்படங்கள்-திருவிளையாடல்,உயர்ந்த மனிதன்,உத்தம புத்திரன்,சத்யம் ,பாரதியார்,ராதக்ரிஷ்ணன்,அண்ணா,பெரியாருடன் நடிகர் திலகம்,மன்னவன் வந்தானடி விமரிசனம் ,எதிரொலி ஷூட்டிங் spot - பிறந்த நாள் பதில் பதிவுகள்.

    வாசுதேவன்-நாயகிகள் தொடர்- ஸ்ரீ ரஞ்சனி,லலிதா, சண்டை தொடர்-திருடன், திலகன் பதிவுகள்,ஆசிரியர் தினம்,விநாயக சதுர்த்தி படங்கள்,உயர்ந்த மனிதன் விமரிசன பதிவு,நாகேஸ்வர ராவ்,சிவாஜி நாடகம்,முத்தாரம்,நாடக செட் ,நாணல் பட பின்னணியில் திருவிளையாடல்-

    கார்த்திக் -ஜெயா தொலைக்காட்சி திரும்பி பார்க்கும் கே.பீ. ,சாந்தி திரையரங்க நினைவுகள்,என் பெயர் காப்பாற்றிய பதிவு, உயர்ந்த மனிதன் ஆய்வு தொடர்பான பதிவு,டிஜிட்டல் கர்ணன் நினைவுகள்,.

    ராகவேந்தர்- சூர்யகாந்தி பட பொன்னுஞ்சல் banner , நீலவானம் பட சாந்தி தியேட்டர்,தொலை காட்சியில் பழைய படங்கள்,கர்ணன் ஒரு பின்னோட்டம்,மற்றும் எனக்களித்த சாதுர்ய பதில்.

    எஸ்வி - மிக மிக கடன் பட்டுள்ளோம்.குரூப் படங்கள்,சினி ஆர்டிஸ்ட் award ,உயர்ந்த மனிதன் விளம்பரம்,ஞான ஒளி,ஜல்லிக்கட்டு,அருணோதயம்,சவாலே சமாளி அற்புத தோற்றங்கள்.

    KCS - முகுந்தனுக்கும் உங்களுக்கும் நன்றி முப்பெரும் விழாவிற்கு.அன்னதான விழா அருமை.தொடரட்டும் தொண்டு.
    Last edited by Gopal.s; 28th September 2012 at 07:02 AM.

  7. #946
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Jordan
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post
    WoW...Which film of this pair Lotus?

    The following films are Superhits we all know... Karnan, BalePandiya,Neelavanam,AnnaiIllam,AndavanKattalai etc.,

    Which "normally" film are you referring to ?

    please add further

    "Pavamannippu", the first film of this formidable pair ( Sivaj-Devika) is a super silver jubilee hit movie.

    "Santhi" is a 100 day success movie.

    "Satyam" again is a 100 day movie (outside india)

    "Muradan Muthu" released on the same day as navaratri released though not run 100 days, in many centres crossed 77 days.

    I think "Bandapasam" and "Anbukkarangal" were moderrate 50 days run. May pl.confirm

    But in re-releases Sivaji-Devika films always makes good shows.

    About Karnan, paired by SIVAJI-DEVIKA records are great and need not to be told

  8. #947
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வெகு நாட்களுக்கு பிறகு இன்று ஏவி.எம் sound zone கடைக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே floor in-charge ஆக பணிபுரியும் நண்பர் திரு கருணாகரன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். சுமார் இருபத்தி ஐந்து வயது மதிக்கதகுந்த ஒரு இளைஞர் கடைக்கு வந்திருந்தாராம். நடிகர் திலகம் நடித்த பல படங்கள் குறிப்பாக 50-களில் 60௦-களிலும் வெளியான படங்களைப் பற்றி குறிப்பிட்டு கேட்டு அந்த டிவிடிகளை எல்லாம் வாங்கி கொண்டு போனாராம். அந்த இளைஞர் தூக்கு தூக்கி, அன்னையின் ஆணை போன்ற படங்களை குறிப்பிட்டு கேட்டு வாங்கி சென்றது ஆச்சர்யமாக இருந்தது என்றார் நண்பர். பலப் படங்களைப் பற்றி தகவல்கள் கேட்டார். எனக்கு தெரிந்தவரை சொன்னேன் என்றார். எந்தக் காலக்கட்டத்திலும் எந்த தலைமுறையை சேர்ந்தவர்களாயினும் நடிகர் திலகத்தால் கவரப்படாத சினிமா ரசிகனே இருக்க முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன்.

    முரசு மற்றும் சன் லைப் போன்ற 24 மணி நேரமும் பழைய படங்களின் பாடல்களும் படங்களும் ஒளிப்பரப்பபடும் தொலைகாட்சிகளினால் டிவிடி விற்பனை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற செய்திகள் வந்திருந்தன. அதைப் பற்றி கேட்டபோது சிறிய அளவில் பாதிப்பு இருக்கிறது. ஆனால் நடிகர் திலகத்தின் பட டிவிடி விற்பனையில் தேக்க நிலை எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் இப்போதும் வாடிக்கையாளர் வந்து கேட்கும் படங்களில் முதலிடம் பிடிப்பது கர்ணன், திருவிளையாடல், கெளரவம் போன்றவைதான் என்றார். வாடிக்கையாளர் வந்து கேட்கும் படங்களில் கர்ணன் மற்றும் திருவிளையாடல் அடிக்கடி ஸ்டாக் இல்லாமல் தீர்ந்து போவது வாடிக்கையாய் நடக்கிறது என்று சொன்ன அவர் இன்றைய தினம் கூட கர்ணன் மற்றும் திருவிளையாடல் ஸ்டாக் இல்லை என்றும் இந்த நிலைமை கடந்த மூன்று நாட்களாக இருக்கிறது என்றும் அதன் காரணமாக கிட்டத்தட்ட ஒரு பத்து பேராவது ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அருகே நின்றிருந்த வேறொரு ஊழியர் "பாருங்க இறந்து போய் இவ்வளவு வருஷம் ஆகியும் கூட வருமானத்தை கொடுத்து இன்னும் எத்தனை பேரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்"-னு சொல்ல அவர் சொன்ன அந்த வாக்கின் உண்மை பளிச்சென்று மனதில் உறைத்தது.

    கர்ணன் படம் மெருக்கேற்றப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு 150 நாட்கள் ஓடிய பின்னும் அந்த படத்தின் டிவிடி டிமாண்ட் கொஞ்சம் கூட குறையவில்லை என்றும் சொன்ன அவர் இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் டிவிடி கடைகளிலே அதிக விலை வைத்து விற்கப்படுவது கர்ணன் டிவிடிதான் என்றும், இருந்த போதிலும் விற்பனையில் அதுதான் நம்பர் 1 என்று சொன்னார்.

    மேலும் கர்ணன் டிடிஎஸ் பதிப்பு தியேட்டரில் வெளியான பிறகு அந்த பதிப்பு இருக்கிறதா என்று கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்ற தகவலையும் பகிர்ந்துக் கொண்டார்.

    என்றுமே கர்ணன் வெற்றி வீரன்தானே!

    அன்புடன்

  9. #948
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வசந்த மாளிகை உதய நாள்- 40 வருடங்கள் ஓடின. குறுகிய கால தயாரிப்பு. சிவாஜி படங்கள் ராஜா, பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்கள் ,சிவாஜி படங்களின் commercial பெஞ்ச் மார்க்கை கன்னா பின்னாவென்று உயர்த்தி இருந்தன. 67 இல் இருந்து 74 வரை ,அனேகமாக அனைத்து NT படங்களையும் நான் குடந்தை நகரில் ரிலீஸ் போதும்(அம்மா வழி தாத்தா திருவிடை மருதூரில் செட்டில் ஆகி இருந்தார்),பிறகு கணக்கிலடங்கா முறை நெய்வேலிக்கு (இரண்டு மாதங்கள் கழித்து) கணபதி (70 %) ,அமராவதி திரையரங்குகளில் கண்டு களிப்பேன் .வசந்த மாளிகை ரிலீஸ் போது 10 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தீபாவளிக்கு என்ன படம் என்று யோசித்து மண்டை காய்ந்தோம்.(நமக்கு தீபாவளி ராசி, பொங்கல் விரோதி,குடியரசு தினம் ஓகே) குடந்தை ஜுபிடர் சிவாஜி கோட்டை.இரண்டாம் நாள் தான் நண்பன் உதவியால் டிக்கெட் கிடைத்தது.
    opening காட்சியே களை கட்டி விடும். உண்மையாகவே ஒரு தேவதை வானத்தில் . மிஸ் பண்ண கூடாத மிஸ் அறிமுகம்.NT அலப்பறை முதல் காட்சியிலேயே கொடி. தொடர்ந்து, நீச்சல் குள காட்சி.ஷாட்ஸ்,கண்ணாடியில் அவ்வளவு அழகு தலைவர்.(சிவகாமியின் செல்வனில் எ.வீ.எம்.ராஜன் சொல்வார் பிரம்மா உனக்காகவே ஸ்பெஷல் ஆக இவளை படைச்சிருக்காண்டா.அண்ணி அவ்வளவு பொருத்தம்.) பிறகென்ன ,கிண்ணத்தை ஏந்தி டான்ஸ்.குடிமகனே , கலைமகள், ஆதிவாசி காட்சி, plum கடிக்கும் காட்சி, மயக்கமென்ன, கண்ணதாசன் கொடி நாட்டிய இரண்டு மனம்.
    எனக்கு மிக மிக பிடித்த நடன காட்சிகள்(கிண்ணத்தை,குடிமகனே,ஆதி வாசி டான்ஸ்), என் கணக்கில் ஒன்றாம் இடத்தை பிடித்த தமிழ் டூயட் மயக்கமென்ன? ,எனக்கு மிக மிக பிடித்த erotic காதல் காட்சி(Plum கடிக்கும்) படத்தின் பிரம்மாண்ட வெற்றி முதல் காட்சியிலேயே உறுதி செய்ய பட்டு விட்டது. சிவாஜிக்கு அல்டிமேட் ஜோடி யார் என்பதும் உறுதியாக இறுதி செய்ய பட்டு விட்டது.அண்ணி சிகரெட் பற்ற வைக்கும் ஜீப் காட்சியும் எனக்கு பிடித்த ஒன்று. பிறகு எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கு வைக்க முடியாது. கடைசியாக அலங்காரில் 92 இல் பார்த்த ஞாபகம்.(தியேட்டரில்).
    Last edited by Gopal.s; 29th September 2012 at 07:57 AM.

  10. #949
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Raghavendhar Sir,
    Excellent informations on Vasantha maaligai. Thanks for my favourite scene in Bandha pasam.Kavalaigal kidakkattum also arumaiyaana song scene.niththam niththam ,one of my favourite sirkazhi songs. Excellent combo of Mayava Nathan- viswanathan,ramamoorthy.
    Vasu Sir,
    Commendable and enjoyable work on Vasantha maligai and the comparison with other languages. Sivaji can not be compared with even sivaji. You have increased your fan base by including Anni fans.
    Last edited by Gopal.s; 29th September 2012 at 08:16 PM.

  11. #950
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி-வாணிஸ்ரீ மறக்க முடியுமா?என்ன ஒரு அற்புத ஜோடி-மறக்க முடியாத duets -
    வெள்ளி கிண்ணந்தான்-உயர்ந்த மனிதன்
    கண்ணொரு பக்கம்- நிறைகுடம்
    மயக்கம் என்ன- வசந்த மாளிகை
    இனியவளே- சிவகாமியின் செல்வன்
    மேள தாளம்- சிவகாமியின் செல்வன்
    அலங்காரம் கலையாத- ரோஜாவின் ராஜா
    ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
    சிந்து நதிக்கரை ஓரம்- நல்லொதொரு குடும்பம்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •