Results 1 to 10 of 100

Thread: Post lines or lyrics lingering in mind

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    romba sollarathukku onnum illa....


    உன்னை ஒன்று கேட்பேன்
    உண்மை சொல்ல வேண்டும்
    என்னைப் பாடச் சொன்னால்
    என்ன பாடத் தோன்றும்..



    நான் எப்படிங்க பாடுறது? என்ன தான் பாடுறது! Of all the peopole, என்னப் போயி...... பாட சொன்னா.....என்னதான் பண்றது.

    காதல் பாட்டுப் பாடலாம்...ஆனா எனக்கு காதல் ன்ன என்னன்னே தெரியாதே... அதுக்கான அனுபவமோ நேரமோ இல்ல...

    தாலாட்டுப் பாட 'தாய்மை உணர்வும்' என்னை தாக்கல.



    நிலவிலா வானம் நிரில்லா மேகம்
    பேசாத பெண்மை பாடாது உண்மை

    கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
    பெண்ணை பாட சொன்னால்
    என்ன பாட தோன்றும்




    நிலவு இல்லாத வானம் நான்...ஏன் என்றால் I am not in love காதலும் இல்லை...காதலினால் பெறும் தாய்மை பூரணத்துவமும் பெறல.....

    நீரில்லா மேகம்...I aint complete... அதனால இந்த பெண்மைக்குப் பேச எதுமே இல்ல.... அனுபவம் இல்லாம பாடற பாட்டுல உண்மையும் இருக்காது...


    காதலோ உறவோ பூண்டு பூரணத்துவம் பெறாத என் பெண்மையை நினைச்சு நானே வாடி நிக்கறேன்...என்னப் போய் பாட சொல்றியே....




    தனிமையில் கானம் சபையிலே மௌனம்
    உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்
    அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
    என்னை பாட சொன்னால்
    என்ன பாட தோன்றும்



    இல்லாத காதலையும், உறவின் சுகத்தையும் தனிமையில் மட்டும் நினைச்சு நினைச்சு சந்தோஷ பட்டு ராகம் பாடுறேன்....அதை யெல்லாம் வெளிய சொல்லி பாட முடியுமா?

    உறவுங்கற ராகத்தை, உயிரில் பாசமாய் உருவேத்தி.... உருகிப் போயிருக்கேன்.

    அன்பு நிறைந்த இந்த நெஞ்சுல அனுபவம் இல்லை...அப்படி இல்லாத அனுபவத்தை
    வெச்சு சபைல, எல்லார்க்கும் முன்னாடி...என்னதான் பாடுறது.... புரிஞ்சுக்கோ மாக்கானே!!!

    Last edited by Shakthiprabha; 23rd August 2012 at 01:30 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •