-
22nd September 2013, 05:57 PM
#381
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Karikalen
It is good that he avoided MK considering the problems he faced this year. He has praised MK in so many platforms before this. One cannot deny MK's influence in Kamal considering his eloquent Tamil.
Finally both Rajini and Kamal got it (TN politics!) .... Good for them.
-
22nd September 2013 05:57 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2013, 06:04 PM
#382
Junior Member
Devoted Hubber
kamal's trimmed look is mind blowing at his age.
Expecting good graphics in V2.
Any updates on release date?
-
22nd September 2013, 07:43 PM
#383
Junior Member
Devoted Hubber
-
23rd September 2013, 09:04 AM
#384
Senior Member
Veteran Hubber

Originally Posted by
bill4u
Finally both Rajini and Kamal got it (TN politics!) .... Good for them.
+ 1. It is better to avoid praising MK while Jaya in the Stage. One more thing, they have not praised much about Jaya either..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
23rd September 2013, 10:07 AM
#385
Junior Member
Devoted Hubber
வரலாறு படைத்த தமிழ் சினிமாக்கள்

(தினத்தந்தி)
-
23rd September 2013, 10:43 AM
#386
Junior Member
Seasoned Hubber
thanks ganse. xlnt article
-
23rd September 2013, 11:20 AM
#387
Junior Member
Regular Hubber
ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம்: கமல் பெருமிதம்

திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமாத் துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம் என, கன்னட திரைப்படத் துறையினர் முன்பு நடிகர் கமல் பேசினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை(செப்.22) கன்னடத் திரைப்படத் துறையினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:
""தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து திரைப்பட விழாக்களும் தனித் தனி அல்ல; அனைத்தும் ஒன்றுதான். திரைப்பட கலைஞர்களாகிய நாம், சினிமா துறை என்ற ஒரே கூரையின் கீழ் வாழும் ஒரே குடும்பம். நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அதில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
நான் இந்த கன்னட திரைப்பட விழாவுக்கு வந்ததற்கு சிலர் நன்றி கூறினர். இந்த விழாவிற்கு என்னை நீங்கள் வரவேற்றதற்கு நான்தான் நன்றி கூற வேண்டும். நீங்கள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் கண்டிப்பாக நான் இதில் கலந்து கொள்வேன். ஏனென்றால் இந்த சினிமா நூற்றாண்டு விழா கலைஞர்களாகிய நம் விழா என்றார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த நிகழ்ச்சியில் "லோகேஷன்' என்ற 100 ஆண்டு கன்னட சினிமா தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தையும் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
கர்நாடக அமைச்சர்கள் பங்கேற்பு: முன்னதாக கர்நாடக பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ, கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜெ.ஜார்ஜ் ஆகியோர் விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
பழம்பெரும் தயாரிப்பாளர் ஆறுமுகம், முன்னாள் கன்னட திரைப்பட வர்த்தகத்துறையின் தலைவர் ஜெயமாலா,பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, லீலாவதி, ஹேமா செüத்ரி, பாரதி விஷ்ணுவர்தன், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான வசந்த் குமார் பாட்டீல், "துளு' மொழி திரைப்பட தயாரிப்பாளர் கே.என்.டெய்லர், தயாரிப்பாளர்கள் குருதத் முஷ்ரி, வி.என்.கங்காதர், பார்கவா, ராஜாராம், தர்ஷன், பெத்தன்னா, நவீன்கிருஷ்ணன்,
நடிகர்கள் ராஜேஷ், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீநாத், சிவராம், உமேஷ், முரளி, ஒய்.ஆர்.சாமி, பங்கஜ், வினோத் ராஜ், யோகேஷ், நடிகைககள் அனு பிரபாகர், ஜெயந்தி, ராகினி, ஹர்ஷிதா, லைலா, பாவனா பாடலாசிரியர் அம்சலேகா, நடனக் கலைஞர் மூகூர் சுந்தரம், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற கன்னடத் திரைத்துறையினர் 67 பேருக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
கன்னடத் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தயாரிப்பாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் ராக்லின் வெங்கடேஷ், தாரா கோவிந்து, செயலாளர் கணேஷ், கன்னட நடிகர் சங்கத் தலைவர் அம்ரீஷ், செயலாளர் விஜய ராகவேந்திரா, கன்னட திரைப்படத் தொழிலாளர் சங்கத் தலைவர் அசோக் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
23rd September 2013, 05:24 PM
#388
Junior Member
Devoted Hubber
Only One Star who made it to all the functions of 100 years of Cinema Celebrations is our Padmashree Dr.Kamal Haasan he was present during the celebrations of Malayalam film industry in honoring MR. Madhu, Legend from Malayalam Film Industry.
-
24th September 2013, 07:30 AM
#389
Junior Member
Regular Hubber

Originally Posted by
ganse
Only One Star who made it to all the functions of 100 years of Cinema Celebrations is our Padmashree Dr.Kamal Haasan he was present during the celebrations of Malayalam film industry in honoring MR. Madhu, Legend from Malayalam Film Industry.

சினிமா நூற்றாண்டு 3-வது நாள் விழாவில் கேரள பாரம்பரிய நடனங்களுடன் மலையாள பட கலை நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்
சினிமா நூற்றாண்டு 3-வது நாள் விழாவை நேற்று காலை மலையாள பட உலகம் கொண்டாடியது. அதில், கேரள பாரம்பரிய நடனங்களுடன், மலையாள பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நூற்றாண்டு விழா
இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி தமிழக அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 21-ந் தேதி நடந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கி வைத்தார்.
திரையுலகில் 50 ஆண்டுகள் சேவை செய்த 56 கலைஞர்களுக்கு அவர் விருதுகளையும் வழங்கினார்.
2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கமல்ஹாசன்
3-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மலையாள திரையுலகினரின் விழா நடந்தது. இந்த விழாவை மத்திய மந்திரி வயலார் ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேரள மந்திரி கே.சி.ஜோசப் முன்னிலை வகித்தார். விழாவில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மத்திய மந்திரி வயலார் ரவி பேசும்போது, ‘‘நான் சிறுவனாக இருந்தபோது டூரிங் தியேட்டரில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர். போல் மலையாள சினிமாவில் பிரேம் நசீர், சத்யன், மது ஆகியோர் இருந்தார்கள். மலையாள பட உலகில் வர்த்தக படங்கள் வெற்றி பெற்றது போல், சோகமான கதையம்சம் கொண்ட படங்களும் வெற்றி பெற்றுள்ளன’’ என்றார். கமல்ஹாசன் பேசும்போது, ‘‘மது சேட்டன் படத்தில் நான் டெக்னீசியனாக வேலை செய்து இருக்கிறேன். என் திரையுலக வளர்ச்சிக்கு மலையாள சினிமா கலைஞர்களும் உதவியிருக்கிறார்கள். இந்த இடத்தில் நான் நிற்பதற்கு அவர்களும் ஒரு காரணம்’’ என்று கூறினார்.
மம்முட்டி-மோகன்லால்
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண் வரவேற்று பேசினார். துணைத்தலைவர்கள் எம்.பாலசுப்பிரமணியம், எடிட்டர் மோகன், பொன் தேவராஜ், தாமஸ் டிசவுசா, செயலாளர்கள் எல்.சுரேஷ், ரவி கொட்டாரக்கரா, பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.ஜி.தியாகராஜன், டைரக்டர் கே.பாலசந்தர், மலையாள நடிகர்கள் மது, மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மனோஜ் கே.ஜெயன், நடிகைகள் ஷீலா, சாரதா, லிசி பிரியதர்ஷன், சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், அம்பிகா, ஊர்வசி, ரேகா, ரோகிணி, கார்த்திகா, அபிராமி, லட்சுமி ராமகிருஷ்ணா, பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.
டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘பெப்சி’ செயலாளர் ஜி.சிவா, டைரக் டர்கள் பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், செய்யார் ரவி, ‘மங்கை’ ஹரிராஜன் ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தார்கள்.
கலைநிகழ்ச்சிகள்
கேரள பாரம்பரிய நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பழைய மலையாள சினிமா பாடல்களுக்கு நடிகைகள் நஸ்ரியா, ரம்யா நம்பீசன், மீராநந்தன், ஸ்வேதா மேனன் ஆகியோர் நடனம் ஆடினார்கள்.
விழா மேடையில், நடிகர் மதுவின் 80-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மாலை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார். விழாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமய்யா, கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
-
24th September 2013, 09:23 AM
#390
Senior Member
Veteran Hubber

Originally Posted by
ganse
Only One Star who made it to all the functions of 100 years of Cinema Celebrations is our Padmashree Dr.Kamal Haasan he was present during the celebrations of Malayalam film industry in honoring MR. Madhu, Legend from Malayalam Film Industry.
Probably he is the lone star acted many films in each of these south Indian languages... There is no surprise he actively participated in all these celebrations..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
Bookmarks