Page 117 of 400 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 3995

Thread: Makkal Thilagam MGR Part 8

  1. #1161
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    AS FAR AS WORLD CINEMA IS CONCERNED OUR BELOVED GOD's "AYIRATHTHIL ORUVAN" HAS CREATED TWO GREAT RECORDS

    1. A MOVIE RELEASED ABOUT 50 YEARS AGO, WAS RE-RELEASED IN 120 THEATRES AT A TIME, BY NOW.

    2. A DIGITALISED AUDIO SYSTEM IS USED FOR THE SONGS IN "AYIRATHTHIL ORUVAN" AND THE CDs WERE ALSO RELEASED.

    By not digesting the above ACHIEVEMENTS of our Beloved GOD M.G.R., in the other Thread, it was stated lunatically about our Film. Who asked him to compare with Errol Flynn's Captain Blood. Our beloved God M.G.R. had his own styles which still liked by the people. Out of 115 films acted as HERO, our beloved GOD M.G.R;s movis, numbering more than 100, are being screened every now and then, without any time gap.

    Out of 288 movies, acted by V.C. GANESAN, 72 films are still in the Box, sleeping (not at all coming out for 2nd release)

    Out of the Rest (216 movies) about 150 films were re-released only one or two times.

    This itself shows that the Crowd Pulling Capacity is always there only for our beloved God MGR's films alone.

    But one thing here is to be appreciated for acceptance of - Never Again Phenomenon takes place for the film released on 16-03-2012.

    WHEREVER, WHENEVER, WHATSOEVER, THE EVERGREEN HERO IS ONLY OUR BELOVED GOD M.G.R.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1162
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி. பேராசிரியர் செல்வகுமார்.சார்.

    திரு. ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு..
    மக்கள் திலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளை நாகரீகம் கருதி இங்கே பதிவிட வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். வசூல் சக்ரவர்த்தி என்பவர் யார் என்பது உலகறிந்த விஷயம். அதற்கேன் தேவையில்லாத சர்ச்சை. வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து இன்னும் வெளிவந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் படங்கள்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. இயற்கை நடிகர் என்று நாங்கள் சொல்ல தேவையில்லை. அப்போதைய திரை விமர்சனங்களைப் பார்த்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம். நன்கு சண்டை வித்தை தெரிந்தவர் ஒரு ஆள் பத்து ஆளை அடிப்பது ஒன்றும் பெரிதல்ல. அதில் கையாள்கிற வித்தை நுணுக்கங்கள்தான் முக்கியம். அதைத்தான் மக்கள் திலகம் கையாண்டிருப்பார். இப்போது வருவது போல 50 பேர், 100 பேரை ஒரே ஆள் அடிப்பது போல அவர் என்றும் நடித்ததில்லை. நடிப்பில் உள்ள பரிணாமங்களான காதல், வீரம், சோகம், நகைச்சுவை சண்டை, நடனம், விளையாட்டுகள் என அனைத்தையும் திறம்படக்கற்று அதை திரையில் பிரதிபலித்தவர் புரட்சி நடிகர். எனவே அவரை குறை கூறுவதை இத்துடன் நிறுத்தினால் நீங்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் ஆவீர்கள் என நம்புகிறேன். மேலும், நடிகர் திலகம் சிறந்த நடிகர் என்பதை மக்கள் திலகமே பலமுறை கூறிவிட்டார். அதனால் அதில் தர்க்கமே தேவையில்லை.
    இனிமேல் இந்த தர்க்கங்களை இந்த திரியில் பதிவிடாமல் இருப்பது நலம் என்றே கருதுகிறேன்.


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  4. #1163
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!:

  5. #1164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy -yuvakrishna- net

    “வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

    அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட் இருக்கிறது.

    ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முதலில் நின்றிருந்தோம். ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

    அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.

    நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

    கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

    இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

    பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

    இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.

    சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.

  6. #1165
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் – புதிய பார்வை


    சொல்லிக்கொள்ளும்படி ஒரு பெரிய படமும் இந்த வாரம் வெளியாகதால் ஆயிரத்தில் ஒருவனை நோக்கியே பெரும்பாலான சினிமா ரசிகர்களின் பார்வை இருந்ததென சொல்லலாம். மெருகேற்றப்பட்ட கர்ணன் 2012 இல் அபார வெற்றி பெற்றாலும் எதிர்பார்த்த அளவை விட மிக சுமாராகவே டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளி அமைப்பு செய்யப்பட்டு இருந்தது ஏமாற்றமாக இருந்தது. இந்த படைப்பாவது அக்குறையை போக்கியதா என பார்க்கலாம்.

    ஒலி/ஒளி அமைப்பு சிறப்பாக இருக்கும் தியேட்டரில் இப்படத்தை பார்க்க வேண்டும் என எண்ணியபோது எஸ்கேப்(சத்யம்) வளாகத்தில் உள்ள ஸ்ட்ரீக் திரையரங்கம்தான் சரியான தேர்வாக பட்டது. முதல் நாள் இரவுக்காட்சியில் கணிசமான ரசிகர்கள் இருந்தது அங்கிருந்தவர்களுக்கே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி என்பது முகங்களில் தெரிந்தது. டைட்டில் கார்டை புதுப்பொலிவுடன் போட்டதே முதல் சிறப்பு. பின்னணி பாடகர்கள், இயக்குனர் என முக்கிய கலைஞர்களின் படங்களுடன் கம்பீரமாக ஒலித்தது பின்னணி இசை.

    35 mm படத்தை சினிமாஸ்கோப்பில் மாற்றியது எவ்விதத்திலும் கண்களை உறுத்தவில்லை. கர்ணன் திரைப்படத்தை டிஜிட்டல் செய்யும் வேளையில் ப்ரசாத் EFX தொழில்நுட்ப குழு ஈடுபட்ட போது 18 ரீல்களை சற்று சிரமப்பட்டு மெருகேற்றிவிடலாம். ஆனால் மூன்று ரீல்கள் கடுமையாக சேதம் அடைந்து இருப்பதால் அதை சரி செய்வது கடினம் என்று சொன்னார்களாம். ஆனால் ஆயிரத்தில் ஒருவனில் ரீல்கள் அனைத்தும் கடும் சேதம் அடைந்திருப்பதால் அவற்றை சரி செய்வது லேசுப்பட்ட காரியமல்ல என முதலில் சொன்னாலும் அதன் பிறகு இரண்டாண்டுகள் பெரும் சிரத்தை எடுத்து எடுத்த காரியத்தை முடித்துள்ளார்கள்.

    கிடைத்த பலன் என்ன தெரியுமா? கர்ணன் திரைப்படத்தை விட ஆயிரத்தில் ஒருவன் மிக பிரமாதமாக திரையில் மிளிர்ந்தது. அதற்காக க்யூப் மற்றும் ப்ரசாத் EFX அணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கிட்டத்தட்ட 95% காட்சிகள் பளிச்செனவும், ஒலி அமைப்பு தெளிவாகவும் இருந்தது இவர்களின் அபார உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என சொல்லலாம்.

    1965 ஆம் ஆண்டு வெளிவந்த இக்காவியத்தை திரையில் பார்ப்பது பண்டிகை கொண்டாட்டத்திற்கு சமம் என்பதை ரசிகர்களின் உற்சாக துள்ளல் வெளிப்படுத்தியது. நம்பியாரின் என்ட்ரிக்கும் விசிலடித்து ஆரவாரம் செய்கிறார்கள் மக்கள். ‘அதோ அதன் பறவை போல’ பாடல் துவங்கி முடியும் வரை கைதட்டி மகிழ்கிறார்கள். ஓடும் மேகங்களே, நாணமோ, ஆடாமல் ஆடுகிறேன், பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, உன்னை நான் சந்தித்தேன் என ஒவ்வொரு பாடலும் தேன் மழை.

    ஊர் மக்களை சந்தித்து இட்லி மாவுக்குள் ஒளித்து வைத்திருக்கும் பொற்காசுகளை தர நாகேஷ் செல்லும்போது மண்டை ஓட்டை கண்டு ரகளை செய்யும் காட்சியை மட்டும் வெட்டி இருப்பது வருத்தம். பெண்களை ஏலம் விடும்போது ‘ஆடாமல் ஆடுகிறேன்’ பாடலில் ஜெயலலிதாவையே சாட்டையால் அடிக்கும் கேரக்டரில் நடிக்கும் அந்த தாடிக்கார துணை நடிகர் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என எண்ணத்தோன்றுகிறது. நாகேஷின் நகைச்சுவை, கடல் சார்ந்த காட்சிகள் என பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் இப்படம். முக்கியமாக நம்பியார் – எம்.ஜி.ஆர். மோதும் வாள் சண்டை மெய் சிலிர்க்க வைக்கிறது. டூப் போடுவது, க்ராபிக்ஸ் என போலியான ஹீரோயிசம் காட்டிய நாயகர்களுக்கு இவ்விருவரின் அசல் கத்திச்சண்டை ஒரு பாடம்.

    சிறந்த வசனங்கள், கலையமைப்பு, ஆடைத்தேர்வு, நகைச்சுவை, சண்டை என ஜனரஞ்சக சினிமாவிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நேர்த்தியாக உள்ளடக்கி இருக்கும் இந்த நவீன ஆயிரத்தில் ஒருவனை தவற விடாதீர்கள் சினிமா ரசிகர்களே.
    Last edited by esvee; 20th March 2014 at 03:50 PM.

  7. #1166
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #1167
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like


    ஆயிரத்தில் ஒருவன் ​ - இன்றைக்கும் பொருந்தும் வசனங்கள்...!

    சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு திரையிடப்பட்ட எம்ஜிஆர் நடித்த ''ஆயிரத்தில் ஒருவன்'' திரைப்படம் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரை மறந்துவிட்ட அதிமுகவினர்களுக்கும், ஜெயலலிதாவிற்கும் தேர்தல் வரும் போது தான் எம்ஜிஆர் நினைவுக்கு வருவார். ஓட்டுக்காகத் தான் இந்த படம் இப்போது திரையிடப்பட்டிருக்கிறது.
    இந்தப்படம் என் குழந்தைப்பருவத்தில் வெளிவந்த படமாக இருந்தாலும், அந்த காலத்தில் பல முறை திரையரங்குகளில் திரையிட்டிருக்கிறார்கள். ஒரு முறை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்திருக்கிறேன். அந்த படத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும், வசனங்களும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
    அந்த திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் யாவும் எப்போதும் போல் எம்ஜிஆரின் அரசியலுக்கு ஏற்றார் போல் பொருத்தமாக எழுதப்பட்டிருக்கும். அதேப்போல் அந்தப் படத்தில் கதாநாயகி ஜெயலலிதா கன்னித்தீவின் இளவரசியாகவும், அவரது வளர்ப்புத்தந்தையாக நடித்திருக்கும் நடிகர் இராமதாஸ் அத்தீவின் மன்னராகவும் கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போது ஒரு பாடலின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பார்கள். அந்தப் பாடல் முடிந்தவுடன் தந்தை இராமதாஸ் ஜெயலலிதாவை நோக்கி வந்து ''பூங்கொடி...! நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாக வாழவேண்டும்'' என்று வாயார வாழ்த்துவார்.
    அதேப்போல் இன்னொரு இடத்தில், இராமதாஸ் ஜெயலலிதாவிடம் ''நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்'' என்றும் சொல்லுவார். இந்த வசனங்கள் இன்றைக்கும் நினைவிலிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களும் அன்றைக்கே ஜெயலலிதாவிற்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கும். அந்த இரு வசனங்களின் ''பொருளைப்'' புரிந்துகொண்டால், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பொருத்தமாக தெரியும். அன்றைக்கே அந்த வசனங்கள் அவருக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.
    இடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 3/15/2014 06:21:00 முற்பகல்

  9. #1168
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)

    இன்ட்ரோ
    1960ஸ் மூவி ஒன்றை பெரிய திரையில் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தக்கால "பெருசுகள்" இந்தக்கால படங்களை வெறுப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. "எவர்க்ரீன்" எம்ஜியார், கருத்துள்ள பாடல்கள், உண்மையிலேயே "அழகான" ஹீரோயின், ஆக்க்ஷன், ரோமென்ஸ், சிறப்பான இசை, சுஜாதாவின் "வசந்த்" டைப் காமெடி என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் எண்டர்டெயினர். ரீஸ்டோரேஷன் என்ற பெயரில் "நினைத்தாலே கசக்கும்" அனுபவத்தை மறந்து விட்டு படம் பார்க்க சென்ற எனக்கு கிடைத்தது பரவச அனுபவம். பாடல் காட்சிகளிலும் பின்னணியிலும் தெளிவான ஒலியமைப்பு. இந்தக் காலத்து க்வாலிட்டி இல்லையென்றாலும் சிறப்பான விஷுவல் என கொடுத்த காசுக்கு ஏற்ற பணியாரம்..!




    கதை
    கலகக்காரர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த குற்றத்திற்காக சர்வாதிகார மன்னனால் (மனோகர்) கைது செய்யப்பட்டு அடிமைகளோடு அடிமையாய் நெய்தல் நாட்டிலிருந்து கன்னித்தீவிற்கு அனுப்பப்படும் மருத்துவர் மணிமாறனை(எம்ஜியார்) டைம் வேஸ்ட் பண்ணாமல் "லவ் அட் பர்ஸ்ட் சைட்" முறையில் லவ்வும் அந்த நாட்டு இளவரசி பூங்கொடி (ஜெயலலிதா). அந்தக் காதலை மறுத்து தன் கூட்டத்தாரின் விடுதலைக்காக போராடும் மணிமாறன் ஒரு கட்டத்தில் மன்னனின் வஞ்சக வார்த்தையை நம்பி கடல் கொள்ளையர்களுடன் (நம்பியார்) போராடி நாட்டை மீட்கிறார். பின்னர் மன்னனின் சூழ்ச்சி தெரிந்து அங்கிருந்து கொள்ளையர்கள் உதவியுடன் தப்பிக்கிறார்.

    காப்பாற்றுவது போல் நாடகமாடி மணிமாறனையும் கூட்டத்தையும் தன் தீவிற்கு அழைத்து வந்து அவர்களையும் கொள்ளையடிக்க பணிக்கிறான். மணிமாறன் முதலில் மறுத்தாலும் தன்னுடன் வந்தவர்கள் உயிருக்கு ஊறு ஏற்படாமலிருக்க வேண்டி கொள்ளைகள் செய்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில் இளவரசி பூங்கொடியை சந்திக்கிறார். அவரையும் அந்த தீவுக்கு அழைத்து வருகிறார். கொள்ளையடித்த பொருள்கள் அரசுக்கு சொந்தம், எனக் கூறி இளவரசி மேல் மையல் கொள்ளும் கொள்ளையர் தலைவன் ஏலத்தில் விடுகிறான்,

    ஏலத்தில் காப்பாற்றிய மணிமாறனை முதலில் தவறாக புரிந்து கொள்ளும் பூங்கொடி பின் உண்மை உணர்ந்து ஆசை கொள்கிறாள். பூங்கொடியை அடையத் திட்டமிடும் கொள்ளைத் தலைவன் அடுத்த கொள்ளைக்கு மணிமாறனை அனுப்பி கொல்லத் திட்டமிடுகிறான். இதை அறிந்த மணிமாறன் கொள்ளையர் தலைவனுடன் சண்டையிட்டு வென்று பின் அவனை நண்பனாக்குகிறான். பின் இருவரும் சேர்ந்து படையுடன் சென்று சர்வாதிகாரி மன்னனின் கப்பலை தாக்குகின்றனர். அதில் காயமடையும் சர்வாதிகாரியை தன் மருத்துவ திறமையால் காப்பாற்றுகிறார். திருந்திய மன்னன் நாட்டை ஆட்சி செய்ய அழைக்க அதை மறுத்து மக்களுக்கு நல்லது செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தன் மனைவியுடன் மருத்துவ தொழிலுக்கே செல்கிறார்.
    ஆக்க்ஷன்

    படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் "வாட் எ மேன்" என்று ஒரு வசனம் பேசுவார். அதற்கு பொருத்தமான நடிகர் எம்ஜியாராக தான் இருக்க முடியும். "கொஞ்சம் பொறு கண்ணே, விளையாடிவிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு நம்பியாருடன் வாள் வீசுவதாகட்டும், "உங்கள் அதிகாரமென்ன, சிலப்பதிகாரமா? நிலைத்து நிற்க" என்று சர்வாதிகார மன்னனை எதிர்த்து நக்கலாக கேள்வி கேட்பதாகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவை விருந்து படைப்பதாகட்டும் 'வாத்தியார்' கலக்குகிறார். சூப்பர்ஸ்டாரின் வெற்றி பார்முலா இவரிடமிருந்தே உருவப்பட்டிருப்பதாய் தெரிகிறது. நாயகி ஜெயலலிதா, இரண்டாவது படம் நடிக்கும் புதுமுகம் என்பதற்கான அடையாளம் கொஞ்சமும் தெரியவில்லை.. அந்தக்கால "நஸ்ரியா" போல் அம்சமாக இருக்கிறார்.விஷம் அருந்தியதாக சொல்லி நாடகமாடும் காட்சியில் கலக்கியிருப்பார்.

    நாகேஷ் உடல்மொழிக் கலைஞர், இதில் நிறைய பேசுகிறார். சில சமயம் போர் அடித்தாலும் மொத்தத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அடிமையாய் வேறு தேசத்திற்கு வந்து அங்கே மன்னன் வரிசையில் நிற்கச் சொல்லும்போது இவர் செய்வது லாரல்ஹார்டி டைப் காமெடி. நம்பியார் இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துப் பார்க்க முடியாது. படம் நெடுக ஓவர் கோட்டும், ஒரு துபாய் லுங்கியுமாய் வரும் இவர் "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா" என்று உறுமும் போது தியேட்டரில் அப்ளாஸ். மற்றொரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம் இளவரசியின் தோழியாய் வரும் தேன்மொழி (மாதவி). ஜெயலலிதா திரையில் வராத நேரங்களில் இவர் அழகாக தெரிகிறார். ஆர்.எஸ். மனோகர், செங்கப்பனாக வரும் நடிகர், மாற்றுக் கருத்து கொண்ட குண்டர், ஏலமிடும் நபர் என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.





    இசை-இயக்கம்-தயாரிப்பு
    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்போ மிரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் சூப்பர்ஹிட். பின்னணி இசை அவுட்ஸ்டாண்டிங். காலத்தால் அழியாத "அதோ அந்த பறவை போல்" மாஸ்டர்பீஸ் பாடல். தயாரிப்பு மற்றும் இயக்கம் பி.ஆர். பந்துலு, முதல் முறையாக எம்ஜியாருடன் பணிபுரிந்த படம். கர்ணன் பட இழப்புக்கு பின் பெருவாரியாக ஓடி வெற்றிவாகை சூடி வசூல் தேடித்தந்த படம் இது. "கேப்டன் ப்ளட்" மற்றும் "கிரிம்சன் பைரேட்" ஆகிய ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருந்தது சிறப்பு..

    ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
    எம்ஜியார் வரும் எந்தக் காட்சியுமே கண்கொட்டாமல் பார்க்கும்படி இருந்தது. பதின்வயது நாயகி உடனிருந்த போதும் அவரையே ரசிக்க வைத்தது தான் அவர் ஸ்பெஷாலிட்டி. எல்லாப் பாடல்களுமே பிடித்தாலும் படம் முடிந்த பின்னும் முணுமுணுத்துக் கொண்டே வந்தது "மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் என் கூடு"

    courtesy - Aavee's Comments - Outstanding Oruvan !

  10. #1169
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - net
    1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா?

    இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று.

    நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை.

    சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார் (இவரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்பவரோ.. நாலு பேரைக் கொன்றும், வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட் போட்டதும் தலைவனாகிவிடப் பார்க்கிறார்).

    தொலைகாட்சியில் மட்டுமே பார்த்திருந்த எம்.ஜி.ஆரை பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாது. சமகால அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்றளவும் ‘வாத்யார்’ ஏன் திகழ்கிறார் என்பதற்கான பதிலையும் தியேட்டரில் பெறலாம்.

    எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவிற்கு தமிழில் இது மூன்றாவது படம். அப்பொழுது அவரது வயது பதினேழுதான். கண்டதும் காதலில் விழும் பாத்திரம்தான். அன்று போல் இப்போ எல்லாம் கண்டதும் காதலில் நாயகிகள் விழாவிட்டாலும்.. காதலிக்கப்படவும் பாடலில் நடனம் புரிய மட்டுமே நாயகிகள் என்ற நிலைமை இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.

    படத்தில் அனைவரும் அழகாகத் தோன்றுகிறார்கள். முக்கியமாக நாயகன் நாயகிக்கு நிகராக ஜொலிக்கிறார் எம்.என்.நம்பியார். அவர் நாயகியை முதல் முறை பார்க்கும் பொழுது தரும் ரியாக்ஷனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அதைக் காணவே எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். ஒரு காட்சியில், “நஞ்சப்பா.. சந்தோஷத்தில் உன்னை உதைக்க வேண்டும் போலிருக்கிறது” எனச் சொல்லி ரசிக்க வைக்கிறார். புதுமண ஜோடியான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும், “நல்லா வாழுங்க” என ஆசிர்வதிக்கும் இடத்தில் அவர் முகத்தில் காட்டும் வெறுப்பபும் ஏமாற்றமும் ரசிக்க வைக்கிறது. இப்படி நம்பியார் திரையில் தோன்றினாலே சுவாரசியம் களைகட்டுகிறது. நம்பியார் அளவுக்கு சர்வதிகாரியாக நடிக்கும் ஆர்.எஸ். மனோகருக்கு படத்தில் அதிக வேலையில்லாமல் போய்விட்டது.

    “ஆமாண்ணே.. நீங்க சொல்வது சரிதான். திருடன்கிட்டயே திருடுறதுதான் சரி” என அழகனாக நடிக்கும் நாகேஷ், மணிமாறன் பாத்திரத்தை பிரமோட் செய்வதையும் மீறி நகைச்சுவையில் கலக்குகிறார். நாயகியின் தந்தை செங்கப்பராக நடிக்கும் ராமதாசும் சிறப்பாக நடித்திருப்பார். அவரது அறிமுகக் காட்சியில் தனது மகளைப் பார்த்துச் சொல்லுவார், “நீ 1000 அடிமைகளுக்கு சொந்தக்காரியாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதுதான் என் ஆசை” எனச் சொல்வார்.

    இந்தப் படத்தின் இறவாப் புகழுக்கு பாடல்களும் மிக முக்கியக் காரணம். ஏழு பாடல்களுமே செம ஹிட். “அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும்..” என்ற பாடலை ரசிக்காதவர் எவரேனும் உண்டா? ஏனோ இந்தப் படத்தோடு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணை பிரிந்தது தமிழ் சினிமாவின் கெட்ட நேரம் என்றே சொல்ல வேண்டும்.

    சேதமடைந்துவிட்ட பிக்சர் நெகட்டிவை, இரண்டு வருட கடும் உழைப்பின் மூலமாக டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் மூலம் தரம் குறையாமல் படத்தை நவீனமயமாக்கியுள்ளனர். திவ்யா பிலிம்ஸின் இந்த மகத்தான முயற்சியை நன்றியுடன் நாம் வாழ்த்தியே தீர வேண்டும். எம்.ஜி.ஆர். இல்லா விட்டாலும் அவரது படத்திற்கான தொழில்நுட்ப வேலைகள், அவரது மேற்பார்வையில் நடந்ததுபோலவே சிறப்பாக நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Last edited by esvee; 20th March 2014 at 04:43 PM.

  11. #1170
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. ரவி கிரண் சூர்யா வுக்கு,[/size]

    தங்களுக்கு எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை.

    எங்கள் மக்கள் திலகம் திரியில், அவரது புகழ் பாடி கருத்துக்களை தெரிவித்து வருகிறோம். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இங்கு நுழைந்து விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.

    உங்கள் அபிமான நடிகர் சாதனைகள் ஏதேனும் புரிந்திருந்தால் அதை அதற்கென்று இருக்கும் திரியில் பதிவிட்டு சந்தோஷம் அடையுங்கள். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். அதை விடுத்து இங்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, உண்மைக்கு மாறான கருத்துக்களையும் பதிவிட்டு, பின் வீண் சர்ச்சைகள் வேண்டாமே என்று வேறு ஒரு பதிவு. இது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் இருக்கிறது.

    தங்களுக்கும் எத்தனை முறைதான் கூறுவது என்றே தெரியவில்லை. உண்மைக்கு மாறான கருத்தை எதுவும் நான் கூறவில்லை. பிறகு ஒரு விஷயம் நீங்கள் எல்லாரும் கூறுவது உண்மை நாங்கள் கூறினால் அது உண்மைக்கு மாறான செய்தி என்ற உங்களின் வாதம் அல்லது பிடிவாதம் அல்லது விதண்டாவாதம் எக்காலத்திலும் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்..!



    விழுப்புரம் சின்னையா கணேசனை வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்று தாங்கள் மட்டுமே விளித்திருப்பது பெரும் நகைச்சுவை தான் போங்கள்.


    உங்கள் நகைச்சுவை உணர்வு என்னைவிட அதிக அளவில் மெச்சத்தகுந்தது போங்கள் ! உங்கள் நகைச்சுவை விட என் நகைச்சுவை பெரிது என்று இப்போதாவது நீங்களும் நகைச்சுவை செய்ததை ஒத்துகொண்டீர்களே ! உங்கள் பெருந்தன்மைக்கு எனது வணக்கங்கள் ! உங்களைபோன்றவர்களுக்கு அவர் வெறும் விழுப்புரம் சின்னையா கணேசன் தான் ! ஒத்துகொள்கிறேன் !
    அனால் தமிழ் திரையுலகை பொருத்தவரை VC STANDS FOR வசூல் சக்ரவர்த்தி !!! NO POINT IN FUMING OVER THE NATURALLY VOUCHING INITIALS !!


    1956 முதல் வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நிரந்தரமாக தக்க வைத்திருப்பது எங்கள் மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
    இதை அன்றைய - இன்றைய திரைப்பட விநியோகஸ்தர்களை கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.


    எதையும் நான் உறுதி படுத்திக்கொள்ள தேவை இல்லை காரணம் எனக்கு எனது உரையின் மீது எள்ளளவும் சந்தேகம் இல்லை. சந்தேகம் இருப்பவர்கள் தகுந்த நடுநிலயாலர்களிடம் கேட்டு, ஆதாரங்கள் பார்த்து உண்மையை உணர்ந்து மனம் இருந்தால் எனது statement ஐ மனதளவில் கொள்ளலாம், even though i dont expect it !


    இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் ஒன்று உரைப்பீர்கள். அதனை, நான் உட்பட இத்திரி அன்பர்கள் எவரும் பொருட்படுத்தப் போவதுமில்லை.


    :-d அதை பற்றி நான் கவனத்தில்கொள்ளவும் போவதில்லை...கருத்தில்கொள்ளவும் போவதில்லை...கவலைப்படவும் போவதில்லை !


    rks
    Last edited by RavikiranSurya; 20th March 2014 at 05:01 PM.

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •