-
2nd April 2014, 09:58 PM
#2531
Junior Member
Regular Hubber

Originally Posted by
saileshbasu
எம்.ஜி.ஆர் 97 "சிறப்பு விருந்தினர்" மற்றும் மலேசியா சுற்றுப் பயணம் முடிந்து தாயகம் திருபி இருக்கும்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. Bsr அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
தர்மத்தின் வாழ்வு தன்னை சுத்து கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்த தலைவர் வழியில் நடக்கும் "உண்மையான தகுதி வாய்ந்த" எம்.ஜி.ஆர் பக்தர்கள்.
எம்.ஜி.ஆர் 97 "சிறப்பு விருந்தினர்" மற்றும் மலேசியா சுற்றுப் பயணம் முடிந்து தாயகம் திருபி இருக்கும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு. Bsr அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
இச் செய்தியை பார்த்ததுடன் அண்ணன் பி .எஸ்.ராஜு அவர்களுக்கு அலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கூறினேன் .நன்றி saileshbasu SIR.
Last edited by boominathanandavar; 2nd April 2014 at 10:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014 09:58 PM
# ADS
Circuit advertisement
-
2nd April 2014, 10:01 PM
#2532
Junior Member
Regular Hubber
`சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.
குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.1968-ல் ஏவி.எம். தயாரிப்பான "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிவாஜியின் மகன் வேடம். உயிரே போனாலும் பொய் சொல்லாத ஒரு அப்பாவி இளைஞனாக நடித்தேன்.
ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, "பூலரங்குடு'' என்ற தெலுங்குப்படத்தைப் போட்டுக் காட்டினார். அப்படத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும், சோபன்பாபு இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.
சோபன்பாபு வேடத்தை எனக்குத் தருவதாக எம்.ஜி.ஆர். சொன்னார்."உயர்ந்த மனிதன்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd April 2014, 10:55 PM
#2533
Junior Member
Regular Hubber
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.
'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.
அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!
பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.
'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.
பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-
'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.
'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.
Last edited by boominathanandavar; 2nd April 2014 at 10:59 PM.
-
3rd April 2014, 12:13 AM
#2534
Junior Member
Diamond Hubber

Originally Posted by
boominathanandavar
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.
'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.
அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!
பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.
'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.
பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-
'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.
'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.
This shows the greatness of NT - "True Qualified" devotee of Super Cosmic Power
-
3rd April 2014, 04:32 AM
#2535
Junior Member
Platinum Hubber
தென்னகம் பத்திரிகை வெளியிட்ட அதிமுக மூன்றாவது ஆண்டு சிறப்பு மலர் .
-
3rd April 2014, 04:38 AM
#2536
Junior Member
Platinum Hubber
மக்கள் வெள்ளத்தை பார்த்து மக்கள் திலகம் சிரித்த முகத்துடன் கையை உயர்த்தி வணக்கம் கூறும் போது மக்கள்
அனைவரும் சிரித்த முகத்துடன் ஆரவாரம் இந்த சிறப்பான படத்தை பார்த்தால் தெரியும் .இதுதான் மக்கள் சக்தி .
-
3rd April 2014, 04:57 AM
#2537
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 3rd April 2014 at 04:59 AM.
-
3rd April 2014, 05:02 AM
#2538
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 3rd April 2014 at 05:04 AM.
-
3rd April 2014, 05:09 AM
#2539
Junior Member
Platinum Hubber
அதிமுக இயக்கத்தின் தலைவரும் அவர் உருவாக்கிய தளபதிகளும் ......

-
3rd April 2014, 05:12 AM
#2540
Junior Member
Platinum Hubber
Bookmarks