-
1st May 2014, 04:15 PM
#341
Junior Member
Platinum Hubber
கர்நாடகாவில் எம்.ஜி.ஆருக்கு கட்-அவுட்! அடிமைப்பெண் ரிலீசால் ரசிகர்கள் உற்சாகம்!!
கர்நாடகாவில் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் கட்-அவுட் வைத்து கலக்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் அவ்வப்போது எம்.ஜி.ஆர். படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். நினைத்ததை முடிப்பவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வசூலை வாரி குவித்தன.
தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு இன்னமும் மவுசு உள்ளது என்பதை பெங்களூருவில் எம்.ஜி.ஆர். கட் அவுட் வைத்திருப்பதே உணர்த்துகிறது. பெங்களூருவில் சமீபத்தில் எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் படம் 11 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்துக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குடும்பத்தோடு திரண்டு வந்தனர். படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர். கட்அவுட்டுகள், பேனர்களை ரசிகர்கள் வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தனர். ஆயிரம் மாலைகள் அணிவிக்கப்பட்ட பேனரும் வைக்கப்பட்டிருந்தது. பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பிரியாணி விருந்தும் பரிமாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st May 2014 04:15 PM
# ADS
Circuit advertisement
-
1st May 2014, 04:18 PM
#342
Junior Member
Platinum Hubber
புரட்சியார் ரசிகர் நாகை தருமன் உடல் நலம் விசாரிப்பு.
----------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவருடன் நெருங்கி பழகியவரும், தொடர்பு வைத்திருந்தவரும் ,
இட்ட பணிகளை செய்தவரும் ஆகிய திரு.நாகை தருமன் அவர்கள் உடல்நலம்
குன்றி ,சென்னை மைலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகிகள் பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. ஆர். லோகநாதன், திரு. கே.பாபு ஆகியோர் , நமது திரி நண்பர்
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களின் தகவலின்படி திரு.நாகை தருமன்
அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தோம்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக திரு.நாகை தருமனுக்கு
அவர் உடல்நலம் தேற வேண்டி பழங்கள் பரிசளித்தோம்.
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள் அளித்த பணமுடிப்பையும் வழங்கினோம்.
எங்களை பார்த்தவுடன் இருகைகள் கூப்பி வணங்கி வாழ்த்தி வரவேற்றார்.
புரட்சி தலைவர் உடலால் மறைந்து இருக்கிறாரே தவிர , உங்கள் மூலம் என்னை
பார்க்க வந்திருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருடன் இருந்த அந்த
கொஞ்ச நேரத்தில் புரட்சி தலைவருடன் தான் ஆற்றிய பணிகள், அளவளாவியது ,
அவருடைய விளையாட்டுக்கள் , பலம், திறமை,ஆற்றல் பற்றிய செய்திகள்
விவரித்தார்.
உனக்கென்ன வேண்டும் கேள் . செய்கிறேன் . என்றாராம். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே அதுவே போதும் என்பாராம் .திரு. நாகை தருமன்.
பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறீர். அவனவன் காரியத்தில் கண்ணாக இருந்து
தன தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறான். பரவாயில்லை. நீ ஒன்றும் கேட்காவிடிலும் செய்ய வேண்டிய
நேரத்தில் , செய்ய வேண்டியதை நான் நிச்சயம் உனக்கு செய்வேன் என்று
சொன்னாராம்.
நேரமாகிவிட்டதால் ,மீண்டும் தங்கள் இல்லத்தில் சந்திக்கிறோம் , தாங்கள்
பூரண குணம் பெற்று, உடல் நலமடைய புரட்சி தலைவரின் ஆசியும் ,அருளும்
தங்களுக்கு என்றும் உண்டு என்று கூறி விடை பெற்றோம்.
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st May 2014, 04:24 PM
#343
Junior Member
Platinum Hubber
courtesy- thiru senthilkumaran - net
எனக்கு நன்றாக நினைவு தெரிந்த 1987-1998 காலகட்டங்களில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்சன் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,உலக நாயகன் கமல்ஹாசன்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முண்ணனி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டால்,
பஞ்சாயத்து தொலைக்காட்சி இருக்கும் ஊர் மடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.1992 ம் ஆண்டில் கோடை விடுமுறையான மே மாதத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப்பெண்' திரைப்படம் ஒளிபரப்ப இருந்தது.
சரியாக 5 மணிக்கு திரைப்படம் ஒளிபரப்பாகும்.நாங்கள் சிறுவர்கள் விளையாடிவிட்டு படம் பார்ப்பதற்கு மெதுவாக வந்தோம். மடத்தில் வந்து பார்த்தால்,பெண்கள் கூட்டம் அதிகமாகி உட்காருவதற்க்கே இடம் இல்லாமல் போய்விட்டது.நாங்கள் ஓரமாக ஜன்னல் ஓரத்தில் போய் நின்று கொண்டோம்.
அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டியை வெளியே எடுத்து வைப்பதற்கு குறிப்பிட்ட சில பேர் இருப்பார்கள்.அவர்களில் எனது அப்பா,தலைவர்-ராமசாமி நாயக்கர்,ரத்னகுமார்,சோலையப்பன்,வரதராஜ் மாமா,கண்ணன் மாமா போன்றோர்கள்.இவர்கள் படம் போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கருப்பு,வெள்ளை நிறத்தில் ஓடக்கூடிய தொலைக்காட்சியை வெளியே எடுத்து வைப்பார்கள்.
அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்தே இளைஞர்களின் விசில் சத்தம் காதை பிளக்க ஆரம்பித்துவிட்டது.பக்கத்து
ஊரான ஸ்ரீரெங்கராஜபுரத்திலிருந்து வாலிப இளைஞர்கள் ஓடோடி வந்தார்கள்.அவர்கள் வந்தால் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக நின்றோ,அமர்ந்து கொள்வார்கள்.
அடிமைப்பெண் திரைப்படம் ஒளிபரப்ப ஆரம்பமாகி,படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களெல்லாம் போட்டு முடித்து படம் ஓடத் தொடங்கியது.படத்தின் ஆரம்பக் காட்சிகளே பிரமிப்பை ஏற்படுத்தியது.நடிகர் எம்.ஜி.ஆரு-க்கும்,அசோகனுக்கும் இடையே நடக்கும் வாள் சண்டை உணர்ச்சி பிழம்பாக இருக்கும். சண்டைக்காட்சிகள் முடிந்த பிறகு தந்தை எம்.ஜி.ஆர். வஞ்சமாக கொல்லப்பட்டு,அவருடைய மனைவி கைது செய்யப்பட்டு,மலை நாட்டு இனமக்கள் அனைவருக்கும் அடிமை விலங்கு போடப்பட்டு சிறைக் கைதிகளாக்கப்படுவார்கள்.மகன் எம்.ஜி.ஆர்.வெளி உலகமே தெரியாமல் கைது செய்யப்பட்டு ஒரு குகையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார்.ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வரும்.அடிமை விலங்குகளை உடைத்தெறி
வதற்காக எம்.ஜி.ஆர்.அவருடைய தாயிடம் சபதம் செய்வது,"தாயில்லாமல் நானில்லை" என்ற உணர்ச்சிகரமான பாடல் காட்சி,படத்தின் இறுதியில் சிங்கத்துடன் சண்டை போடும் ஆக்ரோசமான காட்சிகளெல்லாம் என்னை அப்படியே அன்றைய தினம் திக்பிரமை பிடிக்க செய்தது.இருபத்தைந்து தடவைகளுக்கு மேல் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பேன்."தாயில்லாமல் நானில்லை" என்ற காலத்தால் அழியாத பாடலை கேட்கும்போது கண்ணீர்த் துளிகள் நெஞ்சை நனைக்கும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st May 2014, 04:28 PM
#344
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர். , எம்.ஜி.ஆர்தான். அவருக்கு இணையான நடிகர் எவருமில்லை.
அப்போது மட்டுமல்ல இப்போதும் அவர் படங்கள் திரையிடப்பட்டால் அரங்கு நிறைகிறது. விசில் பறக்கிறது.
இளைஞர் கூட்டம் அவரின் போஸ்டருக்கு கையில் கற்பூரம் ஏந்தி காட்டுகிறது. அறிமுக காட்சியில் பூக்கள், காசுகள், ரூபாய் நோட்டுக்கள் வீசப்படுகின்றன.
பாடல்களுக்கு ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு திரையரங்கமும் பாடலை மறுபடியும் காட்டுகிறது. இறந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இத்தனை ரசிகர்கள் இருப்பது அதிசயம்.
எம்.ஜி.ஆருக்கு இத்தகையை வரவேற்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல. ஆந்திராவிலும்தான்.
சமீபத்தில் சிரஞ்சீவி மகன் நடித்து வெளிவந்த படம் மஹதீரா. படம் சூப்பர் ஹிட்.
ரஜினி உட்பட பல பிரபலங்கள் பாராட்டினார்கள் இப்படத்தை.இப்படத்தின் தமிழ் உரிமையை கலைப்புலி தாணு வாங்கியிருக்கிறார். அஜீத் நடிக்கவிருப்பதாக தகவல்.
ஆந்திர மாநிலம் நகரியிலும் இப்படம் திரையிடப்பட்டது. இங்கு வசிக்கும் மக்களில் பலர் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பேசுகிற வழக்கம் உடையவர்கள். அதனால் தமிழ் படங்களும் இங்கே திரையிடப்படுவது வாடிக்கை.
மஹதீரா படத்தின் வசூலை பார்த்த தமிழ் பட விநியோகஸ்தர்கள் தமிழின் முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையிட்டு பார்த்தார்கள். ஈடுகொடுக்க முடியவில்லை. வசூல் பெப்பே காட்டிவிட்டது.
பின்பு விநியோகஸ்தர் இந்திரன் என்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நடித்த அடிமைப்பெண் படத்தை திரையிட்டார். அப்புறம் பாருங்கள் ஆச்சர்யத்தை. மகதீரா திரையிட்ட அரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்துவிட்டது.
அடிமைப்பெண் திரையிட்ட திரையரங்குகளின் அரங்கு நிறைந்தது. வசூலை வாரிக்குவித்தது.
-வடபழனிவாலு
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st May 2014, 04:32 PM
#345
Junior Member
Platinum Hubber
அடிமைப்பெண் பற்றிய சிறப்பு பார்வை.- தொடர்ச்சி.
-----------------------------------------------------------------------------------------
21.சென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் 133 நாட்கள் ஓடியது.
22. மும்பையில் "பிலிம்பேர் " பத்திரிகையின் சிறந்த தமிழ் படம் பரிசு பெற்றது.
23. தமிழக அரசின் சிறந்த படம் பரிசு பெற்றது.
24. புரட்சி நடிகரின் கட்டுடலும் , ராஜா வேடத்தில் இளமை தோற்றமும்
கண்ணுக்கு விருந்து. அவருடைய உடல் வலிமையை காட்டும் காட்சி யில்
அரங்கத்தில் உள்ள அனைவரும் மெய் மறந்து போவது வாடிக்கை.
25. ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள் , தார் பாலைவன ஒட்டக காட்சிகள்
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்ட விதம் அனைத்தும்
ஆங்கில படங்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்தது.
ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st May 2014, 06:09 PM
#346
Junior Member
Veteran Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
அடிமைப்பெண் பற்றிய சிறப்பு பார்வை.- தொடர்ச்சி.
-----------------------------------------------------------------------------------------
21.சென்னை ஸ்ரீ கிருஷ்ணாவில் 133 நாட்கள் ஓடியது.
22. மும்பையில் "பிலிம்பேர் " பத்திரிகையின் சிறந்த தமிழ் படம் பரிசு பெற்றது.
23. தமிழக அரசின் சிறந்த படம் பரிசு பெற்றது.
24. புரட்சி நடிகரின் கட்டுடலும் , ராஜா வேடத்தில் இளமை தோற்றமும்
கண்ணுக்கு விருந்து. அவருடைய உடல் வலிமையை காட்டும் காட்சி யில்
அரங்கத்தில் உள்ள அனைவரும் மெய் மறந்து போவது வாடிக்கை.
25. ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள் , தார் பாலைவன ஒட்டக காட்சிகள்
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் படமாக்கப்பட்ட விதம் அனைத்தும்
ஆங்கில படங்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்தது.
ஆர். லோகநாதன்.
Thank you Loganathan Sir, Vinod Sir and Yukesh Babu.
-
1st May 2014, 06:10 PM
#347
Junior Member
Veteran Hubber

Some of my collections about Adimai Penn.
From original source material.
-
1st May 2014, 06:10 PM
#348
Junior Member
Veteran Hubber
Samaneedhi.
-
1st May 2014, 06:11 PM
#349
Junior Member
Veteran Hubber

Full size ad.
-
1st May 2014, 06:12 PM
#350
Junior Member
Veteran Hubber

Thanks to B.S.Raju and Venkat.
Bookmarks