-
24th December 2014, 03:36 PM
#2931
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
சிரிப்பும் அழுகையும்
1978ம் ஆண்டு ஒரு நாள். தலைவர் முதல்வராக இருந்த நேரம். தோட்டத்துக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சூரியனை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு ஒளிமயமாய் வந்த அவர், என்னை அன்போடு வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அள்ளி அணைத்து ஆசி வழங்கினார். பின்னர், இனியும் என்னால் முடியாது என்ற நிலை வரும்வரை வயிறு புடைக்க அவரே உணவு பரிமாறினார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று கண்களால் அவரை விழுங்கியபடியே கும்பிட்டு விடைபெற்றேன்.
.......... இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பாவிக்கு இல்லை நண்பர்களே. பல நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஒரு மூலையில் நின்றபடி அவரை தரிசித்ததோடு சரி. ஆனாலும், என்னைப் பார்த்து அவர் கையசைத்து சிரித்திருக்கிறார். மேடைக்கு வந்த தலைவரை நோக்கி கையசைத்த ஆயிரக்கணக்கான கரங்களில் எனது கரமும் ஒன்று. பதிலுக்கு மேடையில் மூன்று புறமும் சென்று கூட்டத்தை பார்த்து அவர் சிரித்தபடியே கையசைத்தது எனக்கும் சேர்த்துதானே என்ற மகிழ்ச்சி எனக்கு. அப்போதெல்லாம், தலைவரை நேரில் பார்க்க வேண்டும், அவரது ஆசியைப் பெற வேண்டும் என்று நினைப்பேன். வாய்ப்புகளும் அதைவிட முக்கியமாக சென்னை வந்து அவரை தரிசிக்க அப்போது வசதியும் இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து ஆசி பெறுவேன் என்பதை எனது வாழ்க்கை லட்சியமாகவே வைத்திருந்தேன். அந்த லட்சியம் நொறுங்கிப் போன நாள் 1987 டிசம்பர் 24.
இனி அவரைப் பார்க்கவே முடியாதே. இது என் சாவு வரை என் நெஞ்சிலே உறுத்திக் கொண்டிருக்கும் முள்ளாகவே இருக்கும். தலைவர் இருக்கும்போது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லை. இப்போது, வாய்ப்பும் வசதியும் இருக்கும்போது தலைவர் இல்லை. இதை மனதில் கொண்டுதான் சிரித்து வாழ வேண்டும் விமர்சனத்தில், ‘‘விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு வரும்போது விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது. இந்த எதார்த்தத்தின் பெயர்தான் வாழ்க்கை’’ என்று குறிப்பிட்டிருந்தேன். ‘இதைப் புரிந்து கொண்டு அனைவரும் சிரித்து வாழ வேண்டும்’ என்றும் கூறியிருந்தேன். இதுகூட என்னை நானே தேற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான்.
தலைவர் உடலால் மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், புகழால் மறையவில்லை. 27 என்ன? 27,000 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. அதை உறுதிப்படுத்துவதுபோல, ‘‘அடப் பைத்தியமே, இறப்பெல்லாம் உங்களுக்குத்தான். காலத்தை வென்ற எனக்கு இறப்பேது?’’ என்று சொல்லாமல் சொல்லி, தலைவர் என்னமோ வீட்டில் படமாக சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாலும் தாங்க முடியாமல் நான்தான் அழுது கொண்டிருக்கிறேன்..... இப்போதும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th December 2014 03:36 PM
# ADS
Circuit advertisement
-
24th December 2014, 03:43 PM
#2932
Junior Member
Platinum Hubber
Jayalalithaa pays homage to MGR on his 27th death anniversary
CHENNAI: AIADMK general secretary and former chief minister J Jayalalithaa paid homage to her mentor and former chief minister M G Ramachandran on his 27th death anniversary on Wednesday.
Jayalalithaa paid floral tributes to a photo of MGR, according to a press release issued by the party headquarters.
Chief minister O Panneerselvam led the partymen to the MGR memorial on the Marina Beach and paid homage.
Last edited by esvee; 24th December 2014 at 03:52 PM.
-
24th December 2014, 04:02 PM
#2933
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th December 2014, 04:07 PM
#2934
Junior Member
Platinum Hubber
சென்னை: எம்.ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் எம்.ஜி.ஆரின் 27 வது ஆண்டு நினைவுநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழர்களாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

எம்ஜிஆர் மறைந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அவர் நடித்த படங்கள் வழியாக, அவர் வாயசைத்துப் பாடிய பாடல்கள் வழியாகத் தமிழ்ப் பாட்டாளிகள் சமூகம், எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர்.
இதுதான் எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப்பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதல்வராகவும் உயர்த்தியது. அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றைக்கும் மக்களின் முதல்வராக வாழ்ந்து வருகிறார்.
போயஸ்கார்டனில் அதிமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, போயஸ்கார்டனில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Last edited by esvee; 24th December 2014 at 04:11 PM.
-
24th December 2014, 04:41 PM
#2935
Junior Member
Senior Hubber

Originally Posted by
Yukesh Babu
மதங்களை கடத்து மனித உள்ளத்தைமதித்த மகான் எங்கள் எம்ஜிஆர்

நேற்று போல் இருக்குதையா
நெஞ்சமெல்லாம் வலிக்குதை யா
இன்றும்.
மறைந்து விட்டாய் என
மனம் மறுக்குதையா
நம்ப.
தெய்வம் நீ என்று கொண்டாடும்
தொண்டர்கள்
உன் தொண்டர்கள் நாளும்
உனக்காக
காத்திருப்போம்
எந்நாளும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th December 2014, 04:48 PM
#2936
Junior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
சிரிப்பும் அழுகையும்
1978ம் ஆண்டு ஒரு நாள். தலைவர் முதல்வராக இருந்த நேரம். தோட்டத்துக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சூரியனை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு ஒளிமயமாய் வந்த அவர், என்னை அன்போடு வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அள்ளி அணைத்து ஆசி வழங்கினார். பின்னர், இனியும் என்னால் முடியாது என்ற நிலை வரும்வரை வயிறு புடைக்க அவரே உணவு பரிமாறினார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று கண்களால் அவரை விழுங்கியபடியே கும்பிட்டு விடைபெற்றேன்.
.......... இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பாவிக்கு இல்லை நண்பர்களே. பல நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஒரு மூலையில் நின்றபடி அவரை தரிசித்ததோடு சரி. ஆனாலும், என்னைப் பார்த்து அவர் கையசைத்து சிரித்திருக்கிறார். மேடைக்கு வந்த தலைவரை நோக்கி கையசைத்த ஆயிரக்கணக்கான கரங்களில் எனது கரமும் ஒன்று. பதிலுக்கு மேடையில் மூன்று புறமும் சென்று கூட்டத்தை பார்த்து அவர் சிரித்தபடியே கையசைத்தது எனக்கும் சேர்த்துதானே என்ற மகிழ்ச்சி எனக்கு. அப்போதெல்லாம், தலைவரை நேரில் பார்க்க வேண்டும், அவரது ஆசியைப் பெற வேண்டும் என்று நினைப்பேன். வாய்ப்புகளும் அதைவிட முக்கியமாக சென்னை வந்து அவரை தரிசிக்க அப்போது வசதியும் இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து ஆசி பெறுவேன் என்பதை எனது வாழ்க்கை லட்சியமாகவே வைத்திருந்தேன். அந்த லட்சியம் நொறுங்கிப் போன நாள் 1987 டிசம்பர் 24.
இனி அவரைப் பார்க்கவே முடியாதே. இது என் சாவு வரை என் நெஞ்சிலே உறுத்திக் கொண்டிருக்கும் முள்ளாகவே இருக்கும். தலைவர் இருக்கும்போது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லை. இப்போது, வாய்ப்பும் வசதியும் இருக்கும்போது தலைவர் இல்லை. இதை மனதில் கொண்டுதான் சிரித்து வாழ வேண்டும் விமர்சனத்தில், விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு வரும்போது விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது. இந்த எதார்த்தத்தின் பெயர்தான் வாழ்க்கை என்று குறிப்பிட்டிருந்தேன். இதைப் புரிந்து கொண்டு அனைவரும் சிரித்து வாழ வேண்டும் என்றும் கூறியிருந்தேன். இதுகூட என்னை நானே தேற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான்.
தலைவர் உடலால் மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், புகழால் மறையவில்லை. 27 என்ன? 27,000 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. அதை உறுதிப்படுத்துவதுபோல, அடப் பைத்தியமே, இறப்பெல்லாம் உங்களுக்குத்தான். காலத்தை வென்ற எனக்கு இறப்பேது? என்று சொல்லாமல் சொல்லி, தலைவர் என்னமோ வீட்டில் படமாக சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாலும் தாங்க முடியாமல் நான்தான் அழுது கொண்டிருக்கிறேன்..... இப்போதும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்னைப் போல்
பல பக்தர்களின்
ஆதங்கம்
உங்கள் எழுத்தில்
உண்மையாய்
உள்ளத்தைக் கலங்கடிக்கிறது
தலைவனைக் நேரில்
காணக் கிடைக்காத
.................................................. ...............................
-
24th December 2014, 06:34 PM
#2937
Junior Member
Platinum Hubber
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்திகள்.
------------------------------------------------------------------------------------------------------

-
24th December 2014, 06:34 PM
#2938
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 06:35 PM
#2939
Junior Member
Platinum Hubber
-
24th December 2014, 06:36 PM
#2940
Junior Member
Platinum Hubber
Bookmarks