-
17th June 2011, 07:23 PM
#261
Senior Member
Diamond Hubber
This is the blogpost which tungsten'ed SS!
http://truetamilans.blogspot.com/201...g-post_15.html
கிளைமாக்ஸில் சுப்பு லாரியால் விபத்துக்குள்ளாக்கும் காட்சி உண்மையாக இருந்திருந்து, சம்பத்தும் இறந்து போய் படத்தை முடித்திருந்தால் நிச்சயமாக இந்தப் படம் ஒரு ஸ்பெயின் படத்தின் காப்பி என்று உறுதியாகச் சொல்வேன். இப்போது முழுமையாக இல்லை.. 95 சதவிகிதம் காப்பி என்று மட்டுமே உறுதியுடன் சொல்கிறேன்..!
மூன்றாண்டுகளுக்கு முன்பாக பைலட் தியேட்டரில் உலகத் திரைப்பட விழாவில் பார்த்த அத்திரைப்படத்தின் பெயர்தான் நினைவுக்கு வர மறுக்கிறது..! அந்த ஸ்பெயின் படத்தில் இல்லாமல், காண்டத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா கேரக்டர்கள் காளையனும், கொடுக்காப்புளியும்தான்..!
btw, that camera hair etc, ஒரு காலத்துல விகடன் விமர்சனம் இப்படித்தான் எழுதும். விமர்சனம் எழுதுடான்னா, நான் பெரிய கொட்டாப்புளி கொடுக்காப்புளி என பீற்றிக்கொள்ளவே விமர்சனம் எழுதுவாங்க, சாம்பிள் - "கடைசி காட்சியில் கேமரா கோணம் கொஞ்சம் லெஃப்டில் வைத்து லோ ஆங்கிளை சற்றே தூக்கி அப்படியே கொஞ்சம் ப்ளூ மேட்டியையும் சேர்த்து க்ரிஸ்ப்பாக எடிட் செய்திருக்கலாம், இதெல்லாம் செய்யாததால், கிடைக்க வேண்டிய எஃபெக்ட் கிடைக்கவில்லை"
இப்பெல்லாம் இன்டர்நெட் வந்துவிட்டதால் இதுபோல ஜல்லியடிப்பதில்லை
-
17th June 2011 07:23 PM
# ADS
Circuit advertisement
-
17th June 2011, 07:33 PM
#262
Senior Member
Diamond Hubber
not only that sakala. adhae madhiri tone'la oru rendu moonu padichaen.
similar things were done by some medhavis who review a music album...
-
17th June 2011, 07:48 PM
#263
Senior Member
Diamond Hubber
ப்ளாகர்ஸ் எல்லாம் இப்ப மண்டைல டெம்ப்ளேட் ரெடியா வெச்சிருக்காங்க, பாராட்டவும் திட்டவும் கிட்டதட்ட ஒரே பேட்டர்ன் தான். "அவர் கருத்து புடிக்கலைன்னு சொன்னேன்" அப்படின்னு சொல்லவேண்டிய இடத்துல "எதிர்வினையாற்றினேன்" அப்படிம்பாங்க. இது ஒரு சாம்பிள் தான்! சுவாரஸ்யமா எழுதலைன்னாலும் பரவாயில்லை, லாஜிக்கோட எழுதனும், அது ரொம்ப கம்மியாகிடுச்சி.
எண்பதுகள்ல 'ஆர்ட் ஃபிலிம்' ந்னு ஒரு வகை படம் இருந்தது. ஒருத்தன் பல்லு வெளக்குறதை பொறுமையா ரெண்டு நிமிஷம் காட்டுவாங்க (பாலுமகேந்திரா கூட இந்த கொடுமை எல்லாம் பண்ணிருக்கார்) அப்ப ஒரு பேட்டியி மணிரத்னம் இதைப்பத்தி சரியா சொன்னார் - "தோணுனதையெல்லாம் எடுத்துட்டு, சஹிக்கலைன்னா, ஆர்ட் ஃபிலிம் ன்னுடறாங்க"
இப்ப அறிவுஜீவி பதிவர்கள் அது மாதிரி பண்றாங்க! எல்லாருக்குள்ளயும் ஒரு முட்டாள் இருக்கான், இவிங்களுக்கு உள்ளயும் அப்படித்தான், ஆனா, இவிங்க அதை ஏத்துக்க மாட்டாங்க.
-
17th June 2011, 08:14 PM
#264
Senior Member
Diamond Hubber

Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ப்ளாகர்ஸ் எல்லாம் இப்ப மண்டைல டெம்ப்ளேட் ரெடியா வெச்சிருக்காங்க, பாராட்டவும் திட்டவும் கிட்டதட்ட ஒரே பேட்டர்ன் தான். "அவர் கருத்து புடிக்கலைன்னு சொன்னேன்" அப்படின்னு சொல்லவேண்டிய இடத்துல "எதிர்வினையாற்றினேன்" அப்படிம்பாங்க. இது ஒரு சாம்பிள் தான்! சுவாரஸ்யமா எழுதலைன்னாலும் பரவாயில்லை, லாஜிக்கோட எழுதனும், அது ரொம்ப கம்மியாகிடுச்சி.
எண்பதுகள்ல 'ஆர்ட் ஃபிலிம்' ந்னு ஒரு வகை படம் இருந்தது. ஒருத்தன் பல்லு வெளக்குறதை பொறுமையா ரெண்டு நிமிஷம் காட்டுவாங்க (பாலுமகேந்திரா கூட இந்த கொடுமை எல்லாம் பண்ணிருக்கார்) அப்ப ஒரு பேட்டியி மணிரத்னம் இதைப்பத்தி சரியா சொன்னார் - "தோணுனதையெல்லாம் எடுத்துட்டு, சஹிக்கலைன்னா, ஆர்ட் ஃபிலிம் ன்னுடறாங்க"
இப்ப அறிவுஜீவி பதிவர்கள் அது மாதிரி பண்றாங்க! எல்லாருக்குள்ளயும் ஒரு முட்டாள் இருக்கான், இவிங்களுக்கு உள்ளயும் அப்படித்தான், ஆனா, இவிங்க அதை ஏத்துக்க மாட்டாங்க.
rasikkumpadiyaana padhivu
-
17th June 2011, 09:33 PM
#265
Senior Member
Veteran Hubber
Sakala
I am slowly becoming your fan
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
-
18th June 2011, 11:53 AM
#266
Senior Member
Senior Hubber
My inaugural piece on First Post is on Aaranya Kaandam. Do read and those of you haven't watched the film do watch.
"Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music
-
18th June 2011, 12:39 PM
#267
Senior Member
Diamond Hubber
sathya & aanastu, நன்றிங்க! ஏதோ தெரிஞத எழுதரேன், புடிச்சா சந்தோசம் தான்!
this movie was playing at a theatre very near to my home. weekend polaamnu pona 'that man-this man' pottuttaanga! sari, nandalala, azhagarsaamiyin kuthirai ellaam inge release aagave illai. athukku ithu better!
-
18th June 2011, 01:42 PM
#268
Senior Member
Diamond Hubber
சினிமா விமர்சனம் : ஆரண்ய காண்டம் - ஆனந்த விகடன்
ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலைப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’!
''ஈவு இரக்கம் எவ்ளோ ரேட்டுப்பா?'' எனக் கேட்கிற கேங் லீடர் ஜாக்கி ஷெராஃப். அவரது தளபதி சம்பத், தனியே தொழில் பண்ண நினைக்கிறார். குருவிடம் அனுமதி கேட்க வரும்போது ஈகோ வெடிக்கிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி ஷெராஃப் வலுக் கட்டாயமாக வைத்துக் 'குடும்பம்’ நடத்தும் யாஸ்மினுக்கும் (அறிமுகம்), கும்பலின் 'சப்ப’ ரவிகிருஷ்ணாவுக்கும் காதல். இந்த இரு கதைகளின் முடிவு பதறடிக்கிற க்ளைமாக்ஸ்!
தொடக்கம், முடிவு, விளக்கம் என்ற ஃபார்முலாக்களை உடைத்து, தடதடக்கிற திரைக்கதையை உலகத் தரத்தில் உருவாக்க எடுத்த முயற்சிக்காகவே, அறிமுக இயக்குநர் குமாரராஜா தியாகராஜனை ஆரவாரமாக வரவேற்கலாம்!
சுமோ கும்பல் சேர்க்காமல், வெகு சில மனிதர்களை வைத்துப் பண்ணப்பட்ட நிழல் உலகத்தின் நுணுக்கமான பதிவு அசத்தல். காலையில் அப்போதுதான் குளித்து முடித்து வருகிற யாஸ்மினை, பல் துலக்காமல் படுக்கையில் தள்ளி அறைகிற ஜாக்கியின் குரூரத்தைக் காட்டும்போதே படம் பளிச் என்று டேக் ஆஃப் ஆகிறது. ''வயசாயிருச் சுல்ல வேலைக்காவ மாட்ட...'' என சம்பத் சொல்ல, சட்டென்று பல் இளிப்பதும், ''அவளை எங்கேயாச்சும் வெளியே கூட்டிப் போ'' என ரவிகிருஷ்ணாவிடம் பணம் கொடுத்துவிட்டு, அதில் இருந்து ஒரு நோட்டைப் பிடுங்கிக்கொள்வதுமாக ஜாக்கி ஷெராஃபின் வக்கிரத்தைச் சொன்னதில் அத்தனைக் கச்சிதம்!
முக பாவங்களில் மிரட்டுகிறார் ஜாக்கி. கண்களில் வழியும் வன்மத் தில், அசரடிக்கிற வில்லன். ''அவரைக் கேட்டுத்தானே பண்ணேன்'' எனக் கொந்தளிப்பதில் இருந்து, வெறி பிடித்து ஓடித் திட்ட மிடுவது வரை சம்பத்... அபாரம்.
ஜமீனாக வருகிற சோமசுந்தரம், அவரது பையனாக வரும் வசந்த் இருவரும் யாருப்பா? தமிழ்த் திரைக்குப் பிரமாதமான வரவுகள்! உதட்டில் ரத்தம் கசிய, ''உன்னாலதான் முடியலன்னா... என்னை ஏன் அடிக்கிற'' எனக் குமுறுவதும் ஜாக்கியை நினைத்து வெடவெடப்பதுமாக யாஸ்மினும் நடிக்கத் தெரிந்த நல்வரவு!
படத்தின் பெரிய ப்ளஸ் வசனமும் ஒளிப்பதிவும். ''என்னைப் பொறுத்தவரைக்கும் சப்பயும் ஒரு ஆம்பளதான், ஆம்பளைங்க எல்லாமே சப்பதான்...'' இப்படி எல்லா ஏரியாவிலும் ஷார்ப்பான வசனங்கள். விதவிதமான கோணங்களில் மிரட்டும் பி.எஸ்.வினோத்தின் கேமரா, படத்தை அடுத்த தளத்துக்குத் தூக்கிச் செல்கிறது. ரத்தம் கொப்பளிக்கும் கொலைகளுக்கு மென்மையாகக் கரையும் யுவனின் பின்னணி இசை, படம் முழுக்கவே புதிய அனுபவம். கேங்ஸ்டர் படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட பல விஷயங்கள் இதிலும் இருப்பது அலுப்பு. லீடருக்கு அடுத்த இடத்தில் இருப்பவ னோடு மோதல், ஒரு 'சப்ப’ கேரக்டர் ட்விஸ்ட்டுக் குப் பயன்படுவது, தாதா தன் ஆளையே கோபத்தில் போட்டுத் தள்ளுவது என ஆங்காங்கே க்ளிஷேக் கள். திடுதிப்பென்று சம்பத்துக்கு மட்டும் வாய்ஸ் ஓவர் போடுவதால், கதை யார் கோணத்தில் நடக்கிறது என்ற குழப்பம். படம் முழுக்க ஆடு அறுப்பது மாதிரி கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கிறார்கள்... ஏன் இந்தக் கொலைவெறி?
இருந்தாலும், சொல்வோம்... 'ஆரண்ய காண்டம்’ ஒரு முக்கியமான முயற்சி!
-
18th June 2011, 05:21 PM
#269
Senior Member
Diamond Hubber
சாரு நிவேதிதா...
இதுவரையிலான தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் ஆகச் சிறந்த ஒரு கலைப்படைப்பு. அதில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உலகத் தரம்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th June 2011, 07:58 PM
#270
Moderator
Platinum Hubber
Brilliance.
One of the bestest everest.
Must watch this again.
Want more of this guy Thiagarajan Kumararaja.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks