thank you all friends, for the encouragement. தமிழ் சினிமாவின் சாதனைகள் வரலாறு போன்றவற்றை பதிவது நம் கடமை. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களின் கலைஞர்களைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் முழுமையாக ஒரு இணைய தளமே அமைத்து அந்த தகவல்களைப் பதிய வேண்டும். எதிர் காலத்தில் அனைத்து கலைஞர்களைப் பற்றியும் தகவல்களைப் பதிய வேண்டும் என்பதே என் விருப்பம். அதன் ஒரு பகுதியாகவே இந்த தொடர். என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்து தகவல்களை அளிக்க முயல்கிறேன். மற்ற நண்பர்களும் இதே போல் செய்தால் அனைத்துப் படங்களைப் பற்றியும் தகவல்கள் கிடைக்கும்.
வினோத் சார், தங்களுடைய அன்பான வரவேற்புக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து

கிருஷ்ணா பிக்சர்ஸ்
ராஜா தேசிங்கு
1960

நடிகர்களும் பாத்திரங்களும்
எம்.ஜி.ஆர். தேசிங்கு-தாவுத் கான்
லேட் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அகமத் கான்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகபத் கான்
டி.எஸ்.பாலய்யா தோன்ற மல்லன்
கே.ஏ. தங்கவேலு பாண்டி
எம்.ஜி.சக்கரபாணி ஆற்காட்டு நவாப்
ஓ.ஏ.கே.தேவர் சிரோப் சிங்
டி.கே. ராமச்சந்திரன் செஞ்சி தளபதி
எம்.ஆர். சந்தானம் பீம்சிங்
ஆர்.பாலசுப்ரமணியம் டில்லி பாதுஷா
கரிக்கோல் ராஜ் செஞ்சி அமைச்சர்
எம்.என்.கிருஷ்ணன் மற்றும் ஆழ்வார் குப்புசாமி - தோன்ற மல்லன் சிஷ்யர்கள்
திருப்பதி சாமி இப்ராஹிம்
வெங்கடாச்சலம் ராஜ குரு
பி.பானுமதி ராணி பாய்
பத்மினி ஆயிஷா
எம்.என்.ராஜம் செங்கமலம்
டி.ஏ. மதுரம் பீபி
லக்ஷ்மி பிரபா சாந்த் பீபி
எம்.சரோஜா மரகதம்
ருஷ்யேந்திர மணி ராம் பாய்
நடனம் கமலா லட்சுமணன், ராகினி, குசல குமாரி
திரைக்கதை வசனம் கண்ணதாசன், மக்களன்பன்
இசையமைப்பு ஜி.ராமநாதன்
நடன அமைப்பு வழுவூர் ராமய்யா பிள்ளை, பி.எஸ,கோபால கிருஷ்ணன், சின்னி-சம்பத், தங்கராஜ்
ஒளிப்பதிவு எம்.ஏ.ரஹ்மான்
ஒலிப்பதிவு ஏ.வி. பார்த்தசாரதி, கண்ணன்
கலை பி.அங்கமுத்து
ஒப்பனை நவநீதம், தனக்கோடி, ரங்கசாமி
உடை அலங்காரம் எம்.ஜி.நாயுடு, ஜிம்கி கிருஷ்ணமூர்த்தி
எடிட்டிங் வி.பி. நடராஜன்
ஸ்டன்ட் அமைப்பு ஆர்.என்.நம்பியார்
ஸ்டில்ஸ் ஆர்.என்.நாகராஜ ராவ்
விளம்பர டிசைன் ஜி.எச்.ராவ்
விளம்பர நிர்வாகம் எம்.ரங்கநாதன், டி.திருஞான சம்பந்தம்
பிராசஸிங் விஜயா லேபரட்டரி
ஸ்டூடியோ விஜயா வாஹினி
உதவி டைரக்ஷன் டி.ஆர். துரைராஜ், பி.எஸ். ரங்கநாதன்
டைரக்க்ஷன் டி.ஆர். ரகுநாத்
பாடல்கள்
1. வாழ்க எங்கள் பொன்னாடு கண்ணதாசன் பி.லீலா, ஜிக்கி
2. பழநி மலை இடும்பன் குளம் உடுமலை நாராயண கவி பி.லீலா
3. ஆதி கடவுள் ஒன்றே தான் கண்ணதாசன் சீர்காழி கோவிந்த ராஜன்
4. வந்தான் பாரு சலங்கை சத்தம் தஞ்சை ராமய்யா தாஸ் சீர்காழி கோவிந்த ராஜன், பி.லீலா
5. காதலின் பிம்பம் தஞ்சை ராமய்யா தாஸ் பி.சுசீலா
6. வனமேவும் ராஜகுமாரா தஞ்சை ராமய்யா தாஸ் சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், பி.பானுமதி, ஜிக்கி
7. கானாங்குருவி உடுமலை நாராயண கவி சீர்காழி கோவிந்த ராஜன், பி.லீலா
8. சரச ராணி கல்யாணி உடுமலை நாராயண கவி சி.எஸ்.ஜெயராமன், பி.பானுமதி
9. போடப் போறாரு தஞ்சை ராமய்யா தாஸ் பி.லீலா
10. பாற்கடல் அலை மேலே உடுமலை நாராயண கவி எம்.எல். வசந்த குமாரி
11. மன்னவனே செஞ்சி மணி விளக்கே கண்ணதாசன் சீர்காழி கோவிந்த ராஜன்
Bookmarks