-
5th May 2013, 03:33 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
sakalakalakalaa vallavar
'ஒரு வருடம் வெளியில் விட்டால் மொத்த பணத்தையும் தருவேன்'
- பவர் ஸ்டார்
தற்போது வரிசையாக வழக்குகள் பதிவாகவே... 'பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்' என அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை போலீஸ்.
இதற்கு நடுவே.. ''நான்தான் இன்றைக்கு தமிழில் நம்பர் ஒன் காமெடியன். என்னை ஒரு வருடம் வெளியில் விட்டுப் பாருங்கள்... மோசடி செய்த மொத்த பணத்தையும் திருப்பித் தருவேன்'' என்று போலீஸாருக்கு நடுவே நின்றுகொண்டு சிரித்தபடியே கூறியிருக்கிறார் 'பவர் ஸ்டார்'. கூட நின்றிருந்த போலீஸாரும் விழுந்துவிழுந்து சிரித்துள்ளனர்.
பின்னே... இவருடைய வீட்டை சோதனையிட்ட போலீஸார்... 'அங்கிருந்து பாபா டிரேடிங் கம்பெனி என்கிற லெட்டர் பேடு ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமே எங்களிடம் சிக்கவில்லை' என்று சொல்லியிருப்பதிலிருந்தே அந்த சிரிப்புக்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்!
செம காமெடியா இருக்குல்ல!
சும்மா சொல்லக் கூடாது... காந்த படுக்கை, தேக்கு மரம், பாக்கு மரம், ஈமு கோழி, கோடி கோடியா கடன்னு மாத்தி யோசிச்சு ஏமாத்திட்டேதான் இருக்கானுங்க. நம்ம ஆளுங்களும் ஏமாந்துகிட்டேதான் இருக்காங்க.
power ala mudiyadhadhu edhuvum illa!! :-d
-
5th May 2013 03:33 PM
# ADS
Circuit advertisement
Bookmarks