-
24th October 2013, 03:26 PM
#11
Senior Member
Veteran Hubber
8 கோடிக்கு வாங்கி 17 கோடிக்கு விற்ற 'வம்பு' படம்! - vikatan
சின்னப் பசங்கள வெச்சி தன்னோட முதல் படத்தை எடுத்த இயக்குநர் அவர். இயக்குநரா மட்டுமில்லாம, நல்ல படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார்.
தற்போது வம்பு நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செஞ்சிருக்கார். வம்பு இந்தப் படத்துக்கு ஓ.கே. சொல்லிட்டார், ஆனா,வம்பு ஏற்கெனவே நடிச்சுட்டு இருக்குற ரெண்டு படங்களோட ஷூட்டிங்கும் எப்போ முடியும்னு தெரியலை.
இப்போ, வம்பு நடிக்கப் போற புதுப்படத்துல தான் வள்ளுவர் எழுதுன பாட்டுக்கு அரசன் பெயரைக் கொண்ட வம்புவோட தம்பி, இசை அமைப்பாளரா அறிமுகம் ஆகப் போறார்.
இந்தப் படத்தை இயக்குநரே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில 8 கோடி ரூபாய்க்கு தயாரிச்சித் தர்றேன்னு சொல்லிட்டாராம்.
'வெட்டி அரங்கம்' நிகழ்ச்சி மூலமா தனக்கும், சூரிய டி.வி.க்கும் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சேனல் உரிமை மற்றும் தமிழ்நாடு விநியோக உரிமை ரெண்டையும் சேர்த்து 17 கோடிக்கு வித்துட்டாராம் வம்புவோட அப்பா.
ஷூட்டிங்கே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதுக்குள்ள வியாபாரத்தை பெரிசா முடிச்சிட்டாரே என வம்பு அப்பாவின் தந்திரத்தை நினைத்து வியக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள்
-
24th October 2013 03:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks