-
22nd January 2014, 03:52 PM
#11
Junior Member
Regular Hubber
தலை சுற்ற வைக்கும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் பட்ஜெட்
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் பட்ஜெட் இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களிலே அதிகமானதாக இருக்கும் என்கிறார்கள்.
'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய். இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
விஜய்யோடு நடிக்க சமந்தா, சதீஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற இருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் இவர்களது சம்பளத்தினை கணக்கிட்டாலே சுமார் பல கோடிகளைத் தாண்டுகிறதாம்.
சம்பளம் போக, படத்தின் கதை கொல்கத்தா நகரத்தில் நடைபெறுவது போன்று அமைந்திருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்த பல கோடிகளை செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ச்சியாக நடத்தி, படத்தை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். வரும் தீபாவளிக்கு வெளியிட மும்முரமாக பணியாற்ற இருக்கிறார்கள்.
சம்பளம், படப்பிடிப்பு செலவு என மொத்த செலவையும் கணக்கிட்டால், விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக அமையவிருப்பது உறுதி.
இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத இப்படத்தினை தற்போதே சன் டி.வி நிறுவனம் தன்வசமாக்கி இருக்கிறது.
http://tamil.thehindu.com/cinema/tam...cle5605378.ece
-
22nd January 2014 03:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks