-
14th March 2014, 11:11 PM
#11
Junior Member
Seasoned Hubber
NSK :
சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்
TR ராஜகுமாரி :
விழி அழகி
மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
what you give is what you get
முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்
பத்மினி :
பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது
கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்
இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்
ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்
-
14th March 2014 11:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks