-
24th March 2014, 02:11 PM
#11
Junior Member
Seasoned Hubber
http://tamil.webdunia.com/entertainm...40321041_1.htm
அனேகனில் அறிமுகமாகும் லேனா

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் அனேகன் படத்தில் மலையாள குணச்சிர நடிகை லேனா அறிமுகமாகிறார்.
லேனா 1998ல் ஜெயராஜ் மலையாளத்தில் இயக்கிய ஸ்னேகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு தனது தேர்ந்த நடிப்பால் குணச்சித்திர நடிகையாக உயர்ந்தார். ஸ்னேகவீடு, ட்ராபிஃக், ஸ்பிரிட் போன்ற படங்கள் இவரை முன்னணி குணச்சித்திர நடிகையாக உயர்த்தியது.
மலையாளத்திலிருந்து ஹீரோயின்கள் அதிகளவில் தமிழுக்கு வந்துள்ளார்கள். மம்முட்டி, மோகன்லால் என்று ஹீரோக்களும் கணிசம். ஆனால் குணச்சித்திர நடிகர்கள் ஒன்றிரண்டு பேர் மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர். இது லேனாவின் வரவை முக்கியமாக்குகிறது.
அனேகன் படத்தை கே.வி.ஆனந்த் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.
-
24th March 2014 02:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks