Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சிரிப்பு பாதி அழுகை பாதி…

    (திடீர் தொடர் கட்டுரை..- திடீர் என்று நின்றாலும் நிற்கும்!)

    அத்தியாயம் ஒன்று..

    *
    நடிகர் திலகமும், டைரக்டர் ஸ்ரீதரும் அந்த அறையில் அமர்ந்திருந்தனர்..

    சீனப் போருக்கான நிதிக்காக ஸ்டார் நைட் ஏற்பாடு பண்ண கவர்ன்மெண்ட் நம்மளைக் கேட்டிருக்கு சார்.. என்ன செய்யலாம்..

    ஸ்ரீதர் ந.தி யைக் கேட்க நடிகர் திலகம்..”ஒங்கூட ஒரு பையன் இருப்பானே..சிவப்பா ஒல்லியா வெடவெடன்னு..”

    “கோபுவா”

    “ஆமாம் அவனைக் கூப்பிடு”

    கோபு வந்தான்.. சிவாஜியையும் பார்த்தவுடன் கொஞ்சம் படபடப்பு கூடியது அவனிடம்..

    சிவாஜிக்கு சலாம் வைத்து ஸ்ரீதரிடம் “சொல்லுங்க்ணா”

    ஸ்ரீதர் சிவாஜியைப் பார்க்க, ந.தி..

    “இந்தாப்பா கோபு.. ஸ்டார் நைட் நடத்தப் போறோம்.. நிறைய நட்சத்திரங்கள் கலந்துக்குவாங்க..ச்சும்மா இண்ட்ரோ பண்ணினால்லாம் நல்லா இருக்காது.. நீ என்ன பண்றே.. ஒரு ஒண்ணவர் டிராமாவா எழுதிக்கிட்டு வா.. எல்லாருக்கும் ஸ்கோப் இருக்கறா மாதிரி”

    ” தல..இப்படிச் சொல்றீங்களே.. நானா.. ஒண்ணவர் டிராமா வித் நிறைய கேரக்டர்ஸா.. என்னால முடியுமா”

    ”இந்த பாரு..ஒன்னால முடியும்..ஒன் திறமை உனக்குத் தெரியாது.. நீ ஆஞ்சநேயர் மாதிரி… நீ என்ன பண்ற.. நேர ஒன்னோட திருவல்லிக் கேணி வீட்டுக்குப் போ..மொட்டை மாடியில லைட் போட்டு டேபிள்ளாம் இருக்கோன்னோ.. அங்க ஒக்காந்து மேல இருக்கற ஸ்டார்ஸ் பார்த்து எழுது..சரியா… ஸ்ரீ… ஒருமணி நேரம் ப்ரோக்ராம் ரெடி. அப்புறம் மிச்ச டயத்துக்கு பத்மினி டான்ஸ், எம்.எஸ்.வி கச்சேரி..அப்புறம் ஜெமினி சாவித்ரிக்கு ஒரு சின்ன ட்ராமா..கோபு.. அந்த ஒன்னவர் டிராமா எழுதி முடிச்சதும் இந்த சின்ன ட்ராமாவையும் நீயே எழுதிடு..” என்று ந.தி சொல்ல கோபு பே என முழிக்க ஆரம்பித்தான்..

    ஸ்ரீதரும் சிவாஜியும் கவலையே இல்லாமல் வேறு சங்கதிகள் பேச ஆரம்பிக்க கோபு தன் வீட்டு மொட்டை மாடிக்கு வந்து லைட் போட்டு நாற்காலியில் அமர்ந்து யோசித்து பேனாவை எடுத்து உதறினால் கற்பனை வரவில்லை..இங்க் தான் வந்தது..

    சிவாஜி என்ன சொன்னார்..எல்லாரும் நடிக்கணும்..அப்படித் தானே..என்ன செய்யலாம்.. ஒரு அப்பா அம்மா ஒரு ஹீரோ ஹீரோயின்..ம்ம் நாலு பேர் தான் தேறுது… இப்படிச் செஞ்சா என்ன

    ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு நாலு பொண்ணு.. நாலு மாப்பிள்ளைகள்..ஆஹா பத்து பேரு தேறிட்டாங்களே..எப்படி இவங்களை இணைக்கறது..

    யெஸ்.. அந்த அப்பாவுக்கு ஒரு ஆசை ஒரே நாள்ல நாலு பொண்ணுக்கும் ஒரே மேடையில கல்யாணம் செஞ்சு வெக்கணும்..ஹை.. நல்லா இருக்கே..

    கற்பனைப் பஞ்சு மெல்ல மெல்ல நூலாகி.. பல நூற்களாகி அழகான நகைச்சுவை நாடகமாக வடிவெடுக்கும் போது அதிகாலை நான்கு மணி..

    கொஞ்சூண்டு தூங்கி எட்டுமணிக்கு ந.தி ஸ்ரீதரை பார்த்து கதையின் சினாப்சிஸையும் நாடக வசன பேப்பர்களையும் கொடுத்தால்.. இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.. பாத்தியா சொன்னேன்ல என சிவாஜி பெருமிதத்துடன் பார்க்க கோபுவின் மனத்தில் மகிழ்ச்சி அருவி..

    சிவாஜி நாடகத்தை ரசித்து, அவரது நாடக அனுபவம் அதிகம் என்பதால் சக நடிக நடிகைகளை நன்கு வேலை வாங்கி ஒத்திகையில் நடிக்க வைத்தார்…

    பின் அந்த நாடகம் நட்சத்திர இரவில் அரங்கேற்றப் பட.. பார்த்தவர்கள் எல்லாம் கைதட்டிப் பாராட்டினார்கள்..அதே நாடகத்தை கடலூர் திருச்சி சேலம் எனப் போட எங்கும் பாராட்டு மழை தான்..

    ஒரு சுபயோக சுபதினத்தில் கோபுவிடம் சிவாஜி .” ஏண்டாப்பா..இந்த டிராமாவ நம்ம புரொடக்*ஷனே எடுக்கட்டும்.. வேற யாருக்கும் கொடுத்துடாதே..”

    “பெரியவா பேச்சுக்கு மறு பேச்சு சொல்ல முடியமா சார்..”

    ”சரி.. அப்ப என்னபண்ணலாம் நம்ம மாதவனை டைரக்ட் பண்ணச் சொல்லலாம்..என்னாங்கற..

    “சார்..ஒரு சின்ன ஸஜெஷன்..”

    “என்னப்பா”

    “சி.வி ராஜேந்திரனும் நானும் ரெண்டு படம் செஞ்சுருக்கோம்.. ஸோ..இதையும் அவனே டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்னு என் அபிப்ராயம்..திரைக்கதை நானே எழுதறேன்..கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..

    “ஹெல்ப்பா.. நானும் அவர் படம் பார்த்திருக்கேன்..அதுக்கென்ன..அவரே பண்ணட்டும்” என சிவாஜி சொல்லிவிட கோபுவுக்கு மட் மட்..மட்டற்ற மகிழ்ச்சி..

    அப்படி எடுக்கப் பட்ட படம் தான் என்றென்றும் பசுமையான நகைச்சுவை கொண்ட “கலாட்டா கல்யாணம்..”சிவாஜி ஃபிலிம்ஸ் கண்காணிப்பில் ராம்குமார் ஃபிலிம்ஸ் தயாரித்தார்கள்

    (மேற்கண்ட விஷயம் சித்ராலயா கோபு எழுதியிருந்த ஞாபகம் வருதே புத்தகத்தில் வருகிறது..தன்மை ஒருமையில் அவர் எழுதியிருந்ததை காப்பிரைட் ப்ராப்ளம் வரக்கூடாது என்று படர்க்கையில் நான் கொஞ்சம் இட்டுக் கட்டி எழுதியிருக்கிறேன் (ராகுலும் ரவியும் பே என முழிக்கப் போகிறார்கள்!))
    *
    கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,

    ”எவனோ எக்ஸ் அண்ட் கோ மேனஜராம் ஏதோஃப்ராட் பண்ணிட்டானாம் பொறுக்கிப் பய..இடியட் அவனப் போய் நான் பாக்கணுமாம்..ஆமா நீங்க யாரு சார்..” “ நீங்க சொன்னீங்களே அந்த எக்ஸ் அண்ட்கோ மேனேஜர் அது நான் தான்” கேட்டதும் ந.தியின் திரு திரு முழி.. நன்றாக இருக்கும்..

    முரளிசாரின் காப்பிரைட் பாடலான நல்ல இடம் நீவந்த இடம் பாடலில் ரொமான்ஸ் நன்று.. மேலும் இந்தப் படத்தைப் பற்றி நிறைய இங்கு சொல்லியிருப்பார்கள் எனில் நான் அதிகம் சொல்லவில்லை..

    சிவாஜியின் நகைச்சுவைக்கு அடுத்தபடி என்றால் சோ (நீங்க சென்ஸஸா..இன்கம்டாக்ஸ் இல்லயா..இல்ல அவங்க வேற டிபார்ட்மெண்ட்.. அப்ப நீங்க போய் அவங்கள அனுப்புங்க!), நாகேஷ் எனப் போகும்.. ம்ம் உதட்டினில் ஃபிப்டி பாட்டு ஹண்ட்ரட் பெர்சண்ட் காதுகளில் ஒலிக்கும்..

    எனக்கு மிகமிகப் பிடித்த ந.தியின் நகைச்சுவைப் படங்களில் இது ஒன்று..

    *
    அப்பப்பா நான் அப்பனல்லடா வைப் போலவே இன்னொரு ஸோலோ பாட்டு..இன்னொருபடம் அதிலும் ந.தி தான்..
    அது…..

    லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ

    (தொடரும்)

  2. Likes KCSHEKAR, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •