-
20th May 2014, 01:16 PM
#11
Administrator
Diamond Hubber
இசைப்பிரியா வாழ்க்கை திரைப்படமாகிறது
இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. ஈழத்தமிழர் விடுதலைக்கான எழுச்சி பாடல்களையும் பாடிவந்தார். இசைப்பிரியாவை இறுதிக் கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக படுகொலை செய்தனர்.
அவரது வாழ்க்கை கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் படமாகிறது. இதில் இசைப்பிரியா வேடத்தில் பிரியா நடிக்கிறார். நாயகனாக பாலாஜி நடிக்கிறார். பிரபாகரன், சுமந்தனி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி கு.கணேசன் இயக்குகிறார்.
இசைப்பிரியாவின் வாழ்க்கை கதை நெஞ்சை உருக்கும் சம்பவங்களுடன் படமாகிறது என்றும் இப்படத்துக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்துள்ளது என்றும் இயக்குனர் கணேசன் கூறினார். இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இளையராஜா, நடிகர்கள் நந்தா, விவேக், டைரக்டர் பேரரசு, ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
20th May 2014 01:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks