Dha paarunga, unga kaal vazhiya pugundha goal. Idha vuttu paraaku paathirttirundheengale...
Source: Indiaglitz
முறியடிக்க முடியாத நிலையில் கத்தியின் கேரள சாதனை
சமீபகாலமாக அண்டை மாநிலமான கேரளாவில் தமிழ்ப்படங்கள் நல்ல வசூலை பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கின்றது. முன்பு ஹீரோக்கள் தெலுங்கு உரிமையைத்தான் பெரிதாக கருதுவார்கள். ஆனால் தெலுங்கு மொழிக்கு சரிசமமாக இல்லாவிடினும் கேரளாவில் ஸ்டார்களின் படங்கள் நல்ல வசூலை தயாரிப்பாளர்களுக்கு பெற்று கொடுத்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் சமீபத்தில் வெளியான தமிழ்ப்படங்கள், முதல் நாளில் வசூல் செய்த டாப் 3 படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலின்படி ஜில்லா முதலிடத்தில் உள்ளது. ஜில்லா 207 திரையரங்களில் வெளியாகி ரூ.2.60 கோடி முதல் நாளில் வசூல் செய்துள்ளது. அடுத்ததாக 'கத்தி' திரைப்படம் 168 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி ரூ.2.25 கோடியும், ரஜினியின் லிங்கா 214 திரையரங்குகளில் வெளியாகி ரூ.1.68 கோடியும் முதல் நாளில் வசூல் செய்துள்ளது.
ரஜினியின் லிங்கா, கத்தி மற்றும் ஜில்லாவை விட அதிக தியேட்டர்களில் வெளியானபோதிலும், அந்த இரு படங்களின் வசூலை எட்டிப்பிடிக்க முடியவில்லை. 'ஜில்லா' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இருந்ததால் அதிக வசூல் பெற்றது என்று எண்ணிக்கொண்டாலும், லிங்காவின் வசூல் கத்தியின் வசூலையாவது எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கத்தியின் வசூலைவிட லிங்கா சுமார் ரூ.60 லட்சம் குறைவாகத்தான் வசூல் செய்துள்ளது. அடுத்து வெளிவர இருக்கும் 'ஐ' மற்றும் 'என்னை அறிந்தால்' படங்களாவது கேரளாவில் புதிய சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Bookmarks