-
17th May 2015, 11:20 AM
#11
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆர். திரையில் செய்த பிரச்சாரங்கள்
முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ' அரசகட்டளை ' என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி - புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ' தேனும் பாலும் ஓடும் ' என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.
குறிப்பாக, அனல் பறக்க " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா.." என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.
" தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே - நீ பகை வென்று
முடிசூட வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ - அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) "
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன.
*************
நன்றி - திண்ணை
-
17th May 2015 11:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks