எம்ஜிஆர் என்ற பெயருக்கு அப்படி என்ன காந்த சக்தி உள்ளதோ தெரியவில்லை, அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. முகத்தை பார்த்த உடனே வசீகரிக்கும் ஆற்றலை கொண்டவர் எம்ஜிஆர். அவர் நடித்து வெளியான திரைப்படங்களும், முதல்வராக அவரது ஆட்சி முறையும் இணைந்து எம்ஜிஆருக்கு மலைபோன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொடுத்துள்ளன. அதிலும் உலகமெங்கும் வாழும் கோடிகணக்கான ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் எம்ஜிஆர்தான் நிறைந்துள்ளார்.
Hats off makkal thilagam and makkal thilagam mgr fans.