Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Brunei Darussalam
    Posts
    0
    Post Thanks / Like
    கமல்ஹாசன் என்னும் சினிமா யானை! #2 (http://www.vikatan.com/news/article.php?aid=53355)

    கமல் 90க்கு பிறகு தன் பாதையை மாற்ற எடுத்த முதல் முயற்சிதான் 'குணா'. குணா மனநிலை பாதிக்கபட்டவன், அவனது தாய் தப்பான தொழில் செய்பவள். இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய பின்புலத்தை இவ்வளவு மோசமாக அமைத்து கொண்டதில்லை. கமல் - இளையராஜா - சந்தானபாரதி என்ற கூட்டணி வெற்றி தராமல் போனாலும், தமிழுக்கு மற்றொரு வாசல் திறந்த படம் குணா. கமல் பேனா பிடித்த படங்களின் திரைக்கதையில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதில் இரண்டாம் படம் தான் குணா. இவ்வளவு மெனக்கெடல் ஒரு படத்துக்கு வேண்டுமா என ரசிகனை பேசவைத்தது. அதுவரை வெறும் 'பைத்தியம்' என்ற உச்சரித்த தமிழ் சினிமா 'மனநிலை பாதிக்கப்பட்டவன்' என்ற சொல்லை உபயோகிக்க காரணமாயிருந்தது குணாதான்.

    அது செல்வராகவன் காதல் கொண்டேன் செய்யுமளவுக்கு வந்து நின்றது. கமல் குணாவாகவே மாறி உலவினார். ஒரு அறைக்குள்ளேயே கமல் சுற்றி சுற்றி வசனம் பேசும்போது தமிழ்சினிமாவும் சுற்றியது. அதுவரை இருந்த ஸ்டேண்டிங் காமிராக்களுக்கு விடுதலை. குணா குகைக்கு (முன்பு டெவில்ஸ் கிச்சன்) போகும் வழி மிகவும் ஆபத்தானது. ஒவ்வொருவராக பாலத்தில் சென்று அந்த இடத்தை அடைவார்களாம். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கமல் அதில் சென்று நடித்தார். ஆனாலும், அது அப்படியொரு இடத்தில் படமாக்கபட்டது ரசிகனுக்கு தெரியாது. கடைசி ரசிகனுக்கும் நியாயம் செய்யவே அப்படி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சிரமத்துடன் நடித்தார். அதனால்தான் ராஜாவின் 'கண்மனி அன்போடு காதலன்'க்கு நியாயம் செய்ய முடிந்தது. இதுதான் எல்லா இளையராஜா ரசிகனின் ப்ளே லிஸ்ட்டிலும் கண்மனி இடம் பிடிக்க காரணம்.

    கமலின் பேனாவுக்கு வைரைக்கல் வைத்த படமென்றால் 'தேவர் மகன்' தான். அன்னை இல்லத்து ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அரிதாரம் பூசியதற்கு அதுவரை அவர் பெறாத சம்பளத்தை கொடுத்தார் கமல். (படையப்பாவில் ரஜினி அதை முறியடித்தார்.) பொதுவாக கமல், ரஜினி நடிக்கும் படங்களில்தான் மற்ற நடிகர்களுக்கு சரியான சம்பளம் கிடைக்கும் என்ற தகவலும் உண்டு. குருதிப்புனலில் இயக்குனர் விஸ்வநாத்துக்கு சம்பளம் ரூ.85 லட்சதுக்கு மேல் கொடுத்தார் என்பது தகவல். கமல் தன்னை சிறந்த தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்திக் கொண்டவர். தேவர் மகன் மூலம் 'ஃபங்க்' ஸ்டைலை அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து நாயகர்களின் ரசிகர்களும் கூட பேதமின்றி 'ஃபங்க்' வைத்துக்கொண்டார்கள். பொதுவாக கமல் ஸ்டைல் செய்யமாட்டார். செய்தால் அது வெகுநாளைக்கு இருக்கும். உதாரணம், 'சத்யா' பட ரிங் இப்போது வரை காலேஜ் பசங்ககிட்ட கூட டிரெண்ட்.

    தமிழ்சினிமாவின் சிறந்த பத்து படங்களை சொன்னால் அதில் தேவர் மகனை சேர்க்காமல் முடியாது. தேவர்மகனில் சிவாஜி இருக்கும் காட்சிகளில் கமல் அடக்கியே வாசித்தார். சிவாஜி என்ற பிதாமகனை வேறொரு கோணத்தில் காட்டி ரசிக்க வைத்தார். தேவர்மகனின் வசனங்கள் இன்றும் பாடமாக படிக்க வேண்டியவை. தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை உள்ளடக்கிய படங்களில் ஒன்று. திரைக்கதை என்ற இலக்கணத்துக்கு சரியான உதாரணம். தெற்கில் இருக்கும் ஜாதி வெறியை, பெரியவர், சின்னவர் என்ற பேதத்தை, சொத்து பிரச்சனையை, அந்த பகுதி மக்களின் வெள்ளந்திதனத்தை கண்ணாடிபோல் காட்டியது திரைக்கதை. சங்கிலி முருகன் அதற்கு உதவினார். சிவாஜியின் 'இன்னைக்கு நான் விதை போடுறேன்' வசனம் மனித வாழ்வில் பாடமாக படிக்க வேண்டிய ஒன்று. 'போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா' என்று சொல்லி தமிழர்களை விழிக்க செய்தார். தலைவாசல் விஜய், வடிவேல் போன்ற திறமையாளர்களை அடையாளம் காட்டினார். எனக்கு பிடித்த கமலின் 'எவர் கிரீன் மூவி' என்றால் அது 'தேவர்மகன்'தான்.

    தேவர் மகனுக்கு பிறகு கமல் மீதான மரியாதை கூடிய படம் 'மகாநதி'. கிருஷ்ணசாமியாக கமல் வாழ்ந்தார். பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களை, அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டிய படம். 'சோனாகாஞ்சி' என்ற வார்த்தையை கடைசி தாய்மாருக்கும் கொண்டு போய் சேர்த்தார். ஒரு தவறான தொழில் செய்யும் பெண்ணின் காலில் விழுந்து அழுது தன்னுடைய நட்சத்திர அந்தஸ்த்தை உடைத்து 'தான் ஒரு நடிகன் மட்டுமே' என்று கமல் ஊருக்கு உணர்த்தினார். சகமனிதனின் கோபம் என்ன செய்யும் என காட்டினார். எனக்கு தெரிந்து பெண்களோடு சேர்ந்து, ஆண்களும் கண்ணீர் சிந்தியபடி பார்த்தபடம் 'மகாநதி' தான். அதில் முதன்முதலில் 'ஆவிட்' எனும் கம்ப்யூட்டர் எடிட்டிங்கை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். புதுமையை தமிழ் சினிமாவில் புகுத்திக்கொண்டேயிருக்க வேண்டும் என விரும்பினார். இந்த யானையை பற்றி எழுதும்போது அன்பே சிவம், ஹேராம் இரண்டையும் எழுதாமல் இருக்க முடியாது. ஆனால் அதை தொட்டால் இந்த கட்டுரைக்குள் அடக்க முடியாது. அதற்கென ஒரு பதிவு எழுதனும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •