-
30th November 2015, 07:17 AM
#11
Senior Member
Seasoned Hubber
நண்பர்களே,
கடந்த காலங்களில் நடந்தவற்றை இனிமேலும் விவாதிக்க வேண்டாம். எந்த உண்மையாக இருந்தாலும் அது ஒரு நாள் வெளியே வந்து சேரும்.
அரசியலால் வரக்கூடிய வெற்றியோ, தோல்வியோ, புகழோ இழுக்கோ, நிரந்தரமானது அல்ல. சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே தங்கள் ரசிகர்களை, அவர்களின் சக்தியை, நல்ல வழியில் தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். இருவருமே அரசியலில் வெவ்வேறு பாதையில் சென்றாலும் ரசிகர்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை, இவற்றையெல்லாம் விதைத்துத் தான் சென்றிருக்கிறார்கள். இருவரின் சக்தியையுமே அவர்களுடைய கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விட்டன.
இவ்வாறு பல ஒற்றுமைகள் அவர்களிடையே நிலவி வந்தாலும். சில சுயநல சக்திகளின் தந்திரத்தால் இவர்கள் இருவருக்குமிடையே இருந்த தொழில் போட்டியைப் பகைமையாகத் தூண்டி விட முயற்சிகள் நடந்தன. இதையெல்லாம் தாண்டி இருவருமே தங்களுடைய பரஸ்பர நட்பைப் பாராட்டியே வந்துள்ளார்கள்.
கடந்து போன காலங்களில் நடைபெற்ற சில கசப்பான விஷயங்களை மீண்டும் கிளறுவதில் பயனேதுமில்லை.
சிவாஜியாகட்டும், எம்.ஜி.ஆராகட்டும், இவர்களின் புகழ் சினிமாவின் மூலமாக மட்டுமே நிரந்தரமாக நிற்க வல்லது. அரசியலால் வரக்கூடிய புகழும் பெருமையும் நிலையானதல்ல. காலமாற்றங்களில் அறிவியலின் துணையில் நிர்வாகம் இயந்திரமயமாக, கணினி மயமாக வெல்லாம் மாறக் கூடிய நிலைவந்தால் அதன் மூலம் நிர்வாகம் சீரான நிலைக்குத் திரும்பினால், அப்போது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் மறக்கடிக்கப்புட்டு விடுவார்கள்.
ஆனால் கலை மூலம் பெற்ற புகழ் சாகாவரம் பெற்றது. இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகள் கழித்து சிவாஜி எம்.ஜி.ஆரும். இருப்பார்கள். அவர்கள் பெயரை அவர்களுடைய திரைப்படங்கள் சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த அரசியல்வாதியின் பெயரும் மக்கள் மனதில் நிலைத்திருக்காது.
இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரின் புகழையும் திரைப்படங்களில் இவர்களின் பங்களிப்பை சொல்வதன் மூலம் நாம் அடுத்தடுத்த பல தலைமுறைகளுக்கு வரலாற்றை சரியான முறையில் கொண்டு செல்லமுடியும்.,
இந்த அடிப்படையிலேயே நம் அணுகுமுறையை நாம் பின்பற்றுவோமே..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th November 2015 07:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks