-
9th December 2015, 10:54 PM
#11
Junior Member
Platinum Hubber
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பணியில் அயராது ஈடுபட்டு, மதுரை மாநகர
செய்திகள் / புகைப்படங்கள், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பட வெளியீடுகள், வசூல்
சாதனை விவரங்கள், அடுத்து வெளியாகும் படங்கள் பற்றிய முன்னறிவிப்புகள்
போன்ற பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிட உதவிடும் பாசமிகு அன்பு சகோதரர் திரு. எஸ். குமார் அவர்கள்
கடந்த 29/11/2015 அன்று தனது பிறந்த நாளை விமர்சையாக, மதுரையில் கொண்டாடினார்.
ஆனால், இடைவிடாத மழை, மின்சாரம் துண்டிப்பு, கணிணி பழுது, போன்ற பல
காரணங்களால் உடனடியாக பிறந்த நாள் வாழ்த்து கூற இயலவில்லை.
எனவே , கால தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.
ஏறத்தாழ 10 நாட்களுக்கு பின் , தெரிவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை
மதுரை திரு. எஸ். குமார் அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
திரு.எஸ். குமார் அவர்கள் , எல்லா வளமும், நலமும் பெற்று இன்று போல் என்றும்
வாழ்க , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆசி, மற்றும் அருளுடன் பல்லாண்டு வாழ்க
என்று மனமார வாழ்த்துகிறேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் பதிவிடும் அன்பர்கள், அனைவரும் மதுரை
பக்தர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்படி
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சிவகங்கை நகரில் அமைந்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
அணிவித்து , தலைவரின் ஆசி பெற , அவரை வணங்கிடும் திரு. எஸ். குமார் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.

ஆர். லோகநாதன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th December 2015 10:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks