-
21st December 2015, 05:14 PM
#11
Senior Member
Veteran Hubber
’பீப்’ பாடல் எதிரொலி...ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி! - VIKATAN
சிம்புவின் பீப் பாடல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. ஒரு பக்கம் மாதர் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் என கண்டங்களையும் புகார்களையும் கொடுத்து வரும் நிலையில் சிம்புவுக்கு நாங்கள் ஆதரவு என்ற ரீதியிலும் ரசிகர்கள் கொந்தளிக்கத் துவங்கியுள்ளனர்.
சிம்புவின் ஆதரவாளர்களின் கேள்விகள் இதுதான். அவர் சொந்த விஷயத்துக்காக உருவாக்கிய பாடல். அது வேறு யாரோ தெரியாமல் வெளியிட்டுவிட்டனர். மேலும் இது போன்ற பாடல்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லையா.
இதைவிட மோசமான பாடல்கள், வசனங்கள் என வந்துள்ளன. அது ஏன் சிம்புவை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள், என்ற கேள்விகளுடன் #WeSupportSimbu என்ற டேக் இட்ட வார்த்தைகளும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சுற்றலில் உள்ளன.
இந்நிலையில் சிம்புவுக்கு ஆதரவாக வேலுரைச் சேர்ந்த மதன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த கெட்டவன் பிரகாஷ் இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை இப்படியே போனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மீதுள்ள மரியாதை கெடும் என்பதே உண்மை.
-
21st December 2015 05:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks