-
18th August 2016, 08:55 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்திருக்கிறார். சபாநாயகர் தனபாலை ஒருமையில் பேசியுள்ளனர். பேப்பரையும் கர்சீபையும் வீசியுள்ளனர். இவர்களது கலாட்டாவால் போனவாரம் சட்டசபையே ஒத்திவைக்கப்பட்டது. நேற்று ஒரு மணி நேரம் போல பொறுத்துப் பார்த்து அதன்பிறகுதான் அவர்களை சபாநாயகர் வெளியேற்ற சொல்லிஇருக்கிறார். அதிலும் விளம்பர ஆசை. காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்ற வேண்டும் என்று அடம்பிடித்து சபையில் இருந்து வெளியேற மறுத்து பிறகு ஸ்டாலினை சபைக்காவலர்கள் தூக்கி வர அவர் சிரித்துக் கொண்டே அவர்கள் கையில் உட்கார்ந்து வருகிறார். திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒருவாரம் சஸ்பென்ட் செய்திருக்கிறார்.
கொஞ்சமாவது ஒழுக்கம் அறிவு நாணயம் வேண்டாமா? இன்றும் சட்டசபைக்குப் போய் உள்ளே நுழைய முயன்று காவலர்களுடன் ஸ்டாலின் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்த மாதிரி அராஜகம் செய்பவர்களை ஆதரிக்கவும் ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் ஆதரிக்க ஒரு மானம் கெட்ட கூட்டம்.
சபாநாயகர் மதியழகன் இருக்கும்போதே பக்கத்தில் இன்னொரு சேர் போட்டு போட்டி சட்டசபை நடத்தி புரட்சித் தலைவர் மீது செருப்பு வீசிய கூட்டத்துக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதி ஏது?
ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியின் ஆரம்பகால ஊழல்களை விடுவோம். மக்களுக்கு தெரிஞ்ச கதைதானே? விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தார் என்று இந்திரா காந்தி சொல்லியது இருக்கட்டும். இந்த காலத்துக்கு வருவோம். 66 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்தார் என்ற முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு பெரிசா? ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி 2ஜி ஊழல் பெரிசா? அது ஊகம் என்பார்கள். கருணாநிதி டி.வி.க்கு 200 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்த வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி 6 மாதம் சிறையில் இருந்தார். இன்னும் கேஸ் நடக்கிறது. தயாநிதி மாறன் சன் டிவி ஊழலில் சிபிஐயிடம் மாட்டி இருக்கிறார். எந்த ஊழல் பெரிசு? திமுக ஊழல்தான் பெரிசு என்று படிச்சவன் கூட வேண்டாம். ஆப்பம் விற்கும் படிக்காத கிழவிகூட சொல்லும்.
இப்படிப்பட்ட திமுகவை யாராவது ஆதரித்தால் அவர்கள் சொம்பு தூக்கவில்லையா? பக்கெட் தூக்குகிறார்கள் போல இருக்கிறது. திமுகவை ஆதரிப்பவன்தான் தமிழன். மற்றவன் தமிழின விரோதி. உண்மைதான். பதவி ஆசைக்காக இலங்கையில் ஒன்றரை லச்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்தான் பச்சை தமிழன். திமுகவை ஆதரிக்கிறவன்தான் தமிழன். திராவிடனாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நாம்ப எல்லாம் அந்நியன். கபாம், குபீம் என்றுதான் பேசறோம்.
இவர்களைப் பற்றித் தெரிந்துதானே மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்? உடனே கட்சிகள் சிதறியதால் அதிமுக வெற்றி பெற்றது என்பார்கள். தனித்தனியாக நின்றால் ஜெயிக்க முடியாதாம். எல்லாரும் சேர்ந்து நின்றால் அதிமுகவை இவர்கள் ஜெயிப்பார்களாம். பலே!
இதெல்லாம் இங்கே எதுக்கு? அரசியல் எதுக்கு? என்று யாராவது நினைக்கலாம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. இப்போதும் அந்தக் கட்சியின் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். புரட்சித் தலைவரின் அரசியல் விரோதிகள் செய்யும் தவறுகளையும் கடந்த காலங்களில் அவர்கள் எவ்ளவு ஜனநாயக விரோதமாக செயல்பட்டார்கள் என்பதையும் சொல்லத்தான் இந்தப் பதிவு. புரட்சித் தலைவருக்கு தொல்லை கொடுத்து மக்களை ஏமாற்றிய கூட்டம் இன்னும் ஏமாற்றப் பார்க்கிறது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை தேர்தலில் காட்டி விட்டார்கள். ஆகவே, இந்தப் பதிவு புரட்சித் தலைவரோடு சம்பந்தப்பட்ட பதிவுதான். பெயர் வைத்திருக்கும் திரிக்கு சம்பந்தமே இல்லாமல் பதிவிடவில்லை.
Last edited by SUNDARA PANDIYAN; 18th August 2016 at 09:35 PM.
-
18th August 2016 08:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks