-
30th August 2016, 01:49 PM
#11
Junior Member
Devoted Hubber
முத்துராமலிங்கம்
http://cinema.dinamalar.com/tamil-ne...-rajadurai.htm
http://cinema.dinamalar.com/tamil-ne...ngam-movie.htm
"மேலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் கெளதம் கார்த்தியின் ஓப்பனிங் பாடலுக்கான டியூனை உருவாக்கியதும், அந்த பாடலை யாரை வைத்து எழுதலாம் என்றபோது, இந்த சூழலுக்கு பஞ்சு அண்ணன்தான் சரியாக எழுதுவார். என்னை அன்னக்கிளி படத்தில் அறிமுகம் செய்த அவர், என் இசையில் பாடல் எழுதி 14 ஆண்டுகளாகி விட்டது என்று சொல்லி அவரை அழைத்து முதல் பாடலை எழுத வைத்தார். அந்த பாடலை தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா -என்று தொடங்கி ஒரு மணிநேரத்தில் அற்புதமாக எழுதிக்கொடுத்தார் பஞ்சு அருணாசலம் சார். அடுத்து அந்த பாடலை யாரை வைத்து பாட வைக்கலாம் என்றபோது நான் எஸ்.பி.பியின் பெயரை சொன்னேன். ஆனால் இளையராஜாவோ, இன்னொருத்தர் இருக்கிறார் அவர் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி கமல் சாரை சொன்னார். அதேபோல் அவரும் வந்து ஒரே மணி நேரத்தில் அந்த பாடலை பாடிக்கொடுத்தார். மேலும், இந்த முத்துராமலிங்கம் படத்தின் 5 பாடல்களையுமே பஞ்சு அருணாசலம் சார்தான் எழுதியிருக்கிறார். அது இந்த படத்தின் சிறப்பாகும்.
ஆக, மிகச்சிறந்த கலைஞர்களின் கூட்டணியில் இந்த முத்துராமலிங்கம் படம் சிறப்பாக வந்திருக்கிறது. வருகிற வியாழக்கிழமை முதல் இறுதிகட்ட பணிகள் தொடங்குகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஆடியோ வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் ராஜதுரை"
-
30th August 2016 01:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks