-
24th September 2016, 11:16 AM
#11
Junior Member
Senior Hubber

என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன் , 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன் ... என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை .... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள் .... இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம் அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன் ( பிப்ரவரி 24 2008 )
3 வயதில் தந்தையை இழந்து ... 22 வயதில் தாயையும் இழந்து ... குடும்பத்தினருக்காக அது வரை உழைத்து பெற்ற சொத்துக்களை எல்லாம் குடும்பத்தினருடன் சேர்த்து இழந்து ... அரசியலில் முட்டி மோதி ... அவமானங்களை எல்லாம் சுமந்து .... தாக்குதலுக்கு உட்பட்டு ... மீறி திமிறி வந்து போராடி ... வழக்குகளை சந்தித்து ..."நான்" என்று சொல்லிக் கொள்ளும் இறுமாப்பை ... ரசிக்கிறேன் .... வாழ்த்துகிறேன் ... ...
தாயின் நினைவாக தனது வீட்டு வாசற்படியை வைத்திருக்கும் செல்வி ஜெயலலிதா இன்றளவும் ... எதற்காகவும் கலங்காத நிலையிலும்... கொஞ்சம் கண்ணீரை சிந்துவது ... தாய் சந்தியாவின் நினைவு வரும் பொழுது மட்டுமே ...
செல்வி ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அம்மையாரும் செல்வி ஜெயலலிதாவும் இணைந்து உருவாக்கிய ட்ரஸ்ட் மூலமாக ஜூலை 15 ம் தேதி 1967 ம் ஆண்டு 1 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செய்யப் பட்ட நிலம் தான் தற்பொழுது போயஸ் தோட்டத்தில் அவர் வசிக்கும் இல்லம் . அதன் பின்னர் அங்கே அவர் வீட்டைக் கட்டத் துவங்கினார்
சந்தியா அம்மையார் அவர்கள் 1971 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்தார் , அப்பொழுது செல்வி ஜெயலலிதாவுக்கு வயது 23 .
போயஸ் தோட்ட இல்லம் நிலத்தை பார்த்து பார்த்து வாங்கியது அவரது தாயார் சந்தியா என்பதனால் , அதே நினைவில் , 1972 ம் ஆண்டு இப்பொழுது இருக்கும் போயஸ் தோட்ட இல்லத்தை கட்டி முடித்தார் ஜெயலலிதா , புது மனை புகு விழா 1972 ம் ஆண்டு மே 15 ம் தேதி நடைபெற்றது , திரைத் துறையினர் அனைவரும் வந்திருந்து வாழ்த்தினார்கள் , இல்லத்திற்கு தனது தாயாரின் நினைவில் , வேதா நிலையம் என்று வைத்தார் ( அவரது தாயாரின் இயற் பெயர் வேதவதி )...
அதாவது அவரது 1996 ம் ஆண்டு சொத்து மதுப்பீட்டில் கிட்டத் தட்ட 40% அவர் 1967-72 காலத்திலேயே ஒரு வீட்டிற்கு நிலம் வாங்கியும் அதில் கட்டிடம் கட்டியும் அதன் மதிப்பீட்டில் சம்பாதித்தது , அப்பொழுது அவர் அரசியலிலும் இல்லை ...
திரைப் படங்களில் நடித்தவர் 9 ஆண்டுகளில் 101 படங்கள் அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 12 படங்கள் நடித்து , தனது 19 வது வயதில் நிலம் வாங்கி தனது 23 வயதில் கட்டிய இல்லம் அழைக்கிறது .... வாருங்கள் அம்மா ...
நன்றி - திரு. கிஸோர் கே.சுவாமி முகநூல் பக்கம்
-
24th September 2016 11:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks