Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



    எளிமை:::

    எம்ஜிஆர் இருக்கிறார்(21):::

    தலைவர் எப்போதும் எளிமையையே விரும்புபவர். தாேட்டத்தில் லிஃப்டே அவர் உடல்நலம் சீர்கெட்ட பிறகே பாெருத்த அனுமதித்தார்.

    இரவில் பழைய சாேறு உண்பதும், தரையில் படுத்து உறங்குவதுமே அவரது விருப்பமாக இருந்தது. 1964,65களில் ஓயாதபடப்பிடிப்பின் காரணத்தால் ஒரு வாரம் மஞ்சள் காமாலை நாேயால் தாேட்டத்தில் ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது.

    தலைவரின் படங்களுக்கு 'பைனான்ஸ்' செய்யும் ஸ்ரீசந்த் என்னும் மார்வாடி பைனான்சியரும், இயக்குநர் தாதாமிராசியும் தலைவரை காண தாேட்டம் வந்தவர்கள், படுக்கை அறையில் சாதாரண கட்டிலில் வெறும் பாயை விரித்து படுத்திருந்த எம்ஜிஆரை பார்த்து அசந்து பாேயினர். ஆற்றமாட்டாதவராக ஸ்ரீசந்த் "மிஸ்டர் எம்ஜிஆர், நீங்கள் ஹம்சதூளிகா மஞ்சத்திலே உறங்க வேண்டியவர். எங்கள் மார்வாடி இனத்தில் ஏழையின் படுக்கை அறைக்கூட மெத்தை, திண்டுகளோடே இருக்கும். உடனடியாக உங்கள் படுக்கை அறையை மாற்ற வேண்டும்" என்றார்.

    எம்ஜிஆர் சிரித்தவாறே "அய்யா, நான் உறங்குவதே நான்கு, ஐந்து மணி நேரம் மட்டுமே. படுத்ததும் உறங்கி விடுவேன். தூக்கம் வரவில்லை என்றால்தானே சொகுசு தேவை?" என்றார்.

    அதைப்பாேலவே தலைவர் நாடாேடிமன்னன் காலத்திலிருந்து முதல்அமைச்சர் ஆகி மரணிக்கும்வரை இந்திய அம்பாசிடர் காரிலேயே பயணித்தார். 84யில் உடல்நலம் கெட்டதும் அமைச்சர்கள் வெளிநாட்டு சொகுசுகார் வாங்கிக்காெள்ள சொல்லி தலைவரை நச்சரித்தார்கள்.

    அவர்களுக்கு தலைவர் சாென்னார், "அமெரிக்க தூதர் நம்மை பார்க்க வரும் போது அவர்கள் நாட்டு சாெகுசு காரில் வருவார். நமதுநாட்டு தூதர்கள் அயல்நாடுகளில், நமது நாட்டு அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார்கள். முடிந்தவரை பதவியில் இருக்கும் நாம், நமது நாட்டு பாெருட்களையே பயன்படுத்த வேண்டும்" என்று சாெல்லி இறுதி வரை அம்பாசிடரையே பயன்படுத்தினார் அந்த ஏழை பங்காளன்.


    நன்றி - அரிமா எம். சந்திரசேகரன் அவர்கள் முகநூல் பக்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •