-
13th January 2017, 07:44 PM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் எண்ணி மகிழும் நினைவலைகள் .....
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து திரை அரங்குகளில் பவனி வருகிறது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பல்வேறு அமைப்புகள் இன்னமும் துடிப்புடன் செயல் பட்டு வருகின்றன .
மக்கள் திலகத்தின் பெயரில் பல் வேறு பதிப்புகள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள் .
மக்கள் திலகத்தின் பெயரில் தமிழகம் , கர்நாடகாவில் மாத இதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது .
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழாக்கள் பிரான்ஸ் , மலேசியா , சிங்கப்பூர் ,இலங்கை , லண்டன் , அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடை பெறுகிறது .
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பல்வேறு அமைப்புகள் உள்ளன .
குறிப்பாக மய்யம் - திரியில் 2005ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி கடந்த 12 ஆண்டுகளில் 20 பாகங்களை கடந்து இன்று 21 வது பாகம் தொடர்கிறது .
மய்யம் திரியில் நம் நண்பர்கள் பலரின் அயராத உழைப்பின் மூலம் மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனைகள் , விளம்பர ஆவணங்கள், விடியோக்கள் பதிவாகியுள்ளது . நம்முடைய மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி இதுவரை 79,500 பதிவுகளை கடந்துள்ளது .
கடந்த 12 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை பார்த்துள்ளார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி தவறான எண்ணமும் , எம்ஜிஆரை பற்றி தவறான செய்திகளையும் உடைத்தெறிந்து , மக்கள் திலகத்தின் புகழை செம்மையுடன் பயணிக்க செய்த வரலாற்று சாதனை நம் அனைவருக்கும் உண்டு .
இன்னும் மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடரும் ....
-
13th January 2017 07:44 PM
# ADS
Circuit advertisement
Bookmarks