மிசஸ்.சின்னத்திரை: விஜய் டி.வியில் புதிய நிகழ்ச்சி
தனது சேனலில் பணியாற்றும் தொகுப்பாளினிகள், தொடரில் நடிக்கும் நடிகைகளை வைத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விதவிதமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதில் விஜய் டி.வி. தனித்து நிற்கும். அந்த வரிசையில் அடுத்து வருகிறது மிசஸ்.சின்னத்திரை.
மிஸ்.இந்தியா, மிஸ் தென்னிந்தியா என்று தலைப்பில் அழகி போட்டிகள் நடத்துவது போன்று இது சின்னத்திரையில் நடிக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திருமதிகளுக்கான அழகிப்போட்டி. ஆனால் இந்தப் போட்டியில் அழகு மட்டுமே பிரதானம் இல்லை. நடிப்பை தாண்டி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அவர்களுக்குள் இருக்கிற சமையல் திறன், ஒவிய திறன், நடனத் திறன், பாடும் திறன் இப்படி என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தலாம். நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண். நேயர்கள் அளிக்கும் ஓட்டு ஆகியவற்றின் அடிப்படையில் மிசஸ்.சின்னத்திரை தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு லட்சக்கணக்கில் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. வருகிற 24ந் தேதி முதல் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தற்போது பிரமாண்ட அரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்




Reply With Quote
Bookmarks