-
15th May 2018, 09:13 AM
#11
Senior Member
Devoted Hubber
வணக்கம் தோழர்களே....
நடிகர் திலகம் நடித்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று 'பெண்ணின் பெருமை'
1953ல் வெளியான திரும்பிப்பார் சேலத்திலும்,
1954 ல் வெளியான மனோகரா சென்னைக்கு வெளியே பல ஊர்களிலும்,
கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி சேலம், மற்றும் திருச்சியிலும்,...
தூக்குதூக்கி சேலத்திலும்,
எதிர்பாராதது சேலம் மற்றும் திருச்சியிலும்
1955 ல் வெளியான காவேரி வேலூரிலும்
மங்கையர்திலகம் சேலத்திலும்
நூறு நாட்களைக் கடந்தன.
இன்றைய நாட்களைப் போலவே அன்றைக்கும் வசூலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படங்கள் திரையிடப்பட்டு வந்தன. நூறு நாட்கள் ஓடினால்தான் கௌரவம் என்ற போலி சம்பிரதாயங்கள் இல்லை. வசூல் குறையும்போதோ, அல்லது புதுப் படங்கள் வரும்போதோ ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் உடனே மாற்றப்பட்டுள்ளன.
அந்த விதிகளையெல்லாம் மீறி, 1956 பிப்ரவரியில் வெளியான பெண்ணின் பெருமை சென்னையில் மாபெரும் வெற்றி பெற்று வசூலின் சிகரத்தை எட்டிப் பிடித்தது.
courtesy vaannila f book
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th May 2018 09:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks