-
6th August 2007, 01:57 PM
#1
Senior Member
Seasoned Hubber
Jodi No. 1 - season 2!!!!!
``ஜோடி நம்பர் ஒன்''நிகழ்ச்சியின் மூலம், கடந்த ஆண்டு தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பரபரப்பை தக்க வைத்துக் கொண்டது, விஜய் டி.வி.
சின்னத்திரை நட்சத்திரங்களான விஜய் ஆதிராஜ்- ரச்னா, சேத்தன்-தேவதர்ஷினி, ராகவ்-பிரீத்தா, ராஜ்கமல்-லதாராவ், தீபக் -தாரிகா, பிரேம்-பூஜா, ரிஷி-பூஜா, பரத்கல்யாண்-ஷில்பா ஆகிய ரியல் -ஜோடிகள் மற்றும் ரீல் ஜோடிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரபல நடன இயக்குனர்கள் மூலம் நடன பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில் ரீல் ஜோடிகளான பிரேம்-பூஜா வெற்றி பெற்று பத்து லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டிச் சென்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஜோடி நம்பர் ஒன்- சீஸன் 2'' நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய நிகழ்ச்சியில் 8 பிரபல சின்னத்திரை ஜோடிகள் தங்கள் நடனத்திறமையை நிரூபிக்க வருகின்றனர். கலைச்செல்வன் டிங்க்கு-பிரீத்தி, யுகேந்திரன்- ஹேமமாலினி, ஸ்ரீ-கிருத்திகா, பிரித்விராஜ்-உமா ரியாஸ்கான், அர்விந்த்-லக்ஷ்மி, இர்பான்-மோனிஷா, வெங்கட்-நிஷா, தேவ்-ஐஸ்வர்யா ஆகியோர்.
கலைச்செல்வன்- பிரீத்தி: டிங்கு, `ஜப்பானில் கல்யாண ராமன்', `அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இயல்பிலேயே நகைச்சுவையுணர்வு அதிகம் கொண்ட இவர் தற்போது மெகா தொடர்களிலும் பிரபலம். பிரீத்தி, விஜய் டி.வி.யில் `மீண்டும் ஒரு காதல் கதை'யில் நடித்துள்ளார்.
யுகேந்திரன்- ஹேமமாலினி: நிஜ தம்பதியான இவர்களுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் பின்னணிப் பாடகர், சின்னத்திரையில் மெகா தொடர்களிலும் நடித்து வருகிறார். ஹேமமாலினி `ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
ஸ்ரீ-கிருத்திகா: ஸ்ரீ பிரபல இசைக் குடும்பத்தை சேர்ந்தவர். சின்னத்திரை மெகா தொடர்களில் வலம் வரும் சிறந்த நடிகர், கிருத்திகா, வளர்ந்து வரும் நட்சத்திரம். இவர் நடனத்தில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
பிரித்விராஜ் - உமா ரியாஸ்கான்: `பப்லு' என்று அழைக்கப்படும் இவருக்கும் உமா ரியாஸ்கானுக்கு அதிக அறிமுகம் தேவையிருக்காது. இருவருமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள். உமா ரியாஸ்கான் விஜய் டி.வி.யின் `கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் நடுவர். அதோடு சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்.
அர்விந்த்- லக்ஷ்மி: அர்விந்த் `காதலர் தினம்' திரைப்படத்தில் நடித்தவர். சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். லக்ஷ்மி, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்' போன்ற திரைப்படங்களிலும், சின்னத்திரையில் பல தொடர்களிலும் நடித்துள்ளார்.
இர்பான்- மோனிஷா: சின்னத்திரை பார்க்கும் அனைவருக்கும் இவர்கள் நிச்சயம் அறிமுகமானவர்கள். விஜய் டி.வி.யின் `கனா காணும் காலங்கள்' தொடரின், வினீத் மற்றும் சங்கவிதான் இந்த ஜோடி. தங்களின் நடனத் திறனை வெளிப்படுத்த தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
வெங்கட்- நிஷா: நிஜ ஜோடியான இவர்களில் வெங்கட் பல மெகா தொடர்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நிஷா பரத நாட்டியக் கலைஞர். இருவரும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.
தேவ்- ஐஸ்வர்யா: தேவ், பாரதிராஜாவின் `தாஜ்மகால்' திரைப்படத்தில் அறிமுகமானவர். ஐஸ்வர்யா தன் நெருங்கிய தோழியான பூஜாவை உற்சாகப்டுத்த, நிகழ்ச்சியில் அடிக்கடி தோன்றியவர். சின்னத்திரையில் மிகப் பிரபலமான இந்த ஜோடி தங்கள் நடனத்திறனைக்காட்ட வருகின்றனர்.
ஜோடி நம்பர் ஒன் சீஸன் 2' நிகழ்ச்சியில் பல புதுமையான நகைச்சுவை - நடனச்சுற்று, இமிடேஷன் ரவுண்ட் போன்ற வேறுபட்ட சுற்றுக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் கலந்து கொள்ளவிருக்கும் நடுவர்கள் யார் என்பதை இநëநிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் விஜய் டி.வி.வெளிப்படுத்துவதோடு இந்த நடனப் போட்டியில் வெல்லும் ஜோடிக்கு ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்குகின்றது.
புத்தம் புது ஜோடிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் இன்று இரவு 8 மணிக்கு காணலா..
-
6th August 2007 01:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks