Results 1 to 10 of 88

Thread: TAMILAR' GOD RAMA

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    KRISHNA

    கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன் பாமரத்தனம்
    இந்த வார விகடனில் "ஹாய் மதன்" பகுதியில் இப்படி ஒரு கேள்வி பதில்.

    கிருஷ்ணர் கடவுளா, அரசரா?
    என்.பிரபாகர், ஆ.புதூர்.

    மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு«க்ஷத்திரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதி-நிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்-துரைக்க மட்டுமேகிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில்சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில்துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'

    ஹாய் மதன் அனைத்தும் அறிந்த ஒரு அறிஞர் என்று அவரிடம் கேள்வி கேட்பவர்கள் உட்பட யாருமே எண்ணுவதில்லை.

    இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கூமுட்டைத் தனமான பதிலைப் பார்க்கையில், மகாபாரதம் போன்ற நன்கறியப் பட்ட விஷயத்தில் கூட ஒரு குறைந்த பட்ச ஹோம் ஒர்க், புரிதல், உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவரே என்ணுவதாகத் தெரிகிறது.

    இது பற்றி இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட திரு. ஹரிகிருஷ்ணன் (அனுமன் வார்ப்பும் வனப்பும் நூலின் ஆசிரியர்) அவர்களிடம் மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டபோது அவர் அனுப்பிய பதில் மூலம் ஹாய் மதனிடம் தொடுக்கும் கேள்விகள் -

    1) முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் பதிப்பு இப்போது யாரால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கே கிடைக்கும்?

    2) கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே இல்லை. அவன் ஒருபோதும் அரசனாகவே இருந்ததில்லை என்பதுதான் வியாச பாரதத்தின் தற்போதைய மொழிபெயர்ப்புகள் சொல்வது. பாகதவமும் இதையே சொல்கிறது. சிசுபாலன் கிருஷ்ணனை நிந்திக்கும்போது சொல்வனவற்றில் இதுவும் ஒன்று:

    O Bhishma, if one like thee, possessed of virtue and morality acteth from motives of interest, he is deserving of censure among the honest and the wise. How doth he of the Dasarha race, who is not even a king, accept worship before these kings and how is it that he hath been worshipped by ye? O bull of the Kuru race, if thou regardest Krishna as the oldest in age, here is Vasudeva, and how can his son be said so in his presence?

    ஆகவே, கிருஷ்ணனை யாதவ அரசன் என்று சொல்லும் முதலில் எழுதப்பட்ட வியாச பாரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. எனவே தயவுசெய்து எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்ட புத்தகத்தைத் தாங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எம்போன்ற எளிய வாசகர்களுக்குப் பெரிய உபகாரமாக இருக்கும்.

    3) ஆனால் பாரதமும் பாகவதமும் கிருஷ்ணனைப் பரம்பொருள் என்று மிகப் பல இடங்களில் குறிக்கின்றன. பீஷ்மர் தன்னுடைய உடலை விடுவதற்கு முன்னால் மிகத் தெளிவாகவே இதைச் சொல்கிறார். யுத்த சமயத்தில் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை வதைப்பதற்காகக் கண்ணன் விரையும்போதும், கூப்பிய கரங்களோடு 'வா கண்ணா, உன் கையால் எனக்கு விடுதலை கிடைக்கட்டும்' என்று துதிக்கிறார்.

    இவையெல்லாம் வங்காளிகளுடைய பிற்சேர்க்கை என்பதை நிறுவுவதற்காகத் தாங்கள் எங்களுக்கு அருள்கூர்ந்து இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்.

    இவை ஒரு அறிஞர் கேட்கும் கேள்விகள்.

    எனக்கும் சில சாதாரணமான கேள்விகள் தோன்றுகின்றன -

    பொது சகாப்தம் (Common Era, CE) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த *தமிழர்* இளங்கோ அடிகள் *மகாபாரத* கண்ணனை நாராயணனாகவே கண்டு பாடுகிறாரே -

    மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
    கடந்தானை நூற்றுபவர் பால் நாற்றிசையும் போற்ற
    படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
    நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
    நாராயணா என்னா நாவென்ன நாவே

    சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்களே? இதற்கும் முந்தைய சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளனவே? இது எல்லாம் "மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாடு" இல்லையா?

    அப்போ சிலம்புக்கும், பரிபாடலுக்கும் முற்பட்ட ஏதாவது வங்காளி நூல் கிருஷ்ணனைக் கடவுள் என்று ஆக்கியதா? அதை மதன் படித்திருக்கிறாரா? அல்லது இளங்கோ அடிகளும் அதைப் படித்துத் தான் கண்ணன் கடவுள் என்று தெரிந்து கொண்டாரா?

    ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாப்ரபு 16-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் தோன்றுவதற்கு ஒரு 800-900 ஆண்டுகள் முன்பே ஆண்டாள் திருப்பாவையும், "கண்ணன் எம்பெருமான்" என்று கசிந்துருகிப் பாடிய திருவாய்மொழியும் தோன்றி விட்டதே! திருக்கண்ணபுரம் என்று தமிழகத்தில் திவ்யதேசமே இருந்ததே!

    இப்படி ஆகத் தொன்மையான சங்கத் தமிழ் நூல்களே கண்ணனைக் கடவுளாகப் போற்றுகின்றன என்னும்போது இந்தக் கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்த காலமே "மிகப் பிற்பட்ட காலமா"? அப்போ நீங்கள் சொல்லும் அந்த "கண்ணன் கடவுள் ஆகாத" மிக மிக முற்பட்ட காலத்திற்கு சான்றுகள் எங்கே? எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?

    கோடிக்கணக்கான இந்துக்கள் போற்றும் தெய்வ அவதாரமான ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி இப்படி ஏனோதானோ என்று போகிற போக்கில் ஒரு பதில் கொடுத்து விட்டுப் போகிறீர்களே மதன்? இது நியாயமா?
    http://jataayu.blogspot.com/2007/10/blog-post_26.html

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Shri Rama Jaya Mangalam - Lyrics of this PS Song
    By Sundar Krishnan in forum Indian Classical Music
    Replies: 3
    Last Post: 18th January 2012, 10:38 AM
  2. Replies: 2497
    Last Post: 2nd January 2012, 02:13 PM
  3. Padmashree Dr. Kamal Haasan's Rama Shyama Bhama
    By alwarpet_andavan in forum Indian Films
    Replies: 38
    Last Post: 2nd February 2006, 09:07 AM
  4. Bombay Jayashree's RAMA album
    By Umesh in forum Indian Classical Music
    Replies: 0
    Last Post: 13th March 2005, 07:58 AM
  5. SIVAN + RAMA = SEEVA HAREE
    By kandiban in forum Current Topics
    Replies: 1
    Last Post: 30th January 2005, 04:11 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •