-
16th February 2009, 01:57 PM
#1
Senior Member
Seasoned Hubber
Tit Bits
உலகிலேயே மிகவும் கடினமான காரியம் எது
என்று நினைக்கிறீர்கள்? மனிதர்களைக்
கையாள்வதுதான்.
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பிறரின்
மனம் கோணாமல் பழகுவது, அவர்களிடம்
வேலை வாங்குவது, அவர்களை நிர்வகிப்ப
துதான் உலகிலேயே மிக மிகக் கடினமான
பணி. அதுவும் பலரின் ஒத்துழைப்புத் தேவைப்படும்
தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்கள் எடுப்
பது போன்ற வேலைகளில் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக
மிக அவசியம். அத்தகைய கடினமான பணியை மிக எளிதா
கச் செய்து முடித்து விடுகிறார் ஓர் இளம்
பெண்.
அவர் சுமித்ரா. ஒரு காட்சி ஊடகத்
துறையில் அவர் ஒரு தயாரிப்பு நிர்வாகி.
லேகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
தொலைக்காட்சி தொடர்களுக்கும், விளம்ப
ரப் படங்களுக்கும் தயாரிப்பு நிர்வாகியாகப்
பணிபுரியும் அவரை அவருடைய அலுவல
கத்தில் சந்தித்துப் பேசினோம்.
""திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்
கள், விளம்பரப் படம் போன்ற காட்சி ஊட
கத்தில் தயாரிப்பு நிர்வாகம் என்பது மிகக் கடி
னமான பணி. அதிலும் ஒரு பெண் அந்த
வேலையைச் செய்வது மிகச் சிரமம்.
அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை சிலநாட்க
ளில் வேலை இருக்கும். ஆர்ட்டிஸ்ட்கள் கரெக்டாக வருகிறார்
களா என்று பார்ப்பதிலிருந்து ஷூட்டிங் முடிந்து லைட் பாய்
போன்றவர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வது வரை ஒரு
தயாரிப்பு நிர்வாகியின் வேலையாக இருக்கும். ஒரு தொலைக்
காட்சித் தொடர் எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 100
பேருக்கும் மேல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அவர்களை
எல்லாம் நிர்வகிப்பது சாதாரண காரியம் அல்ல.
எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தென்னிந்திய திரைப்ப
டத் தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில் பதிவு செய்து கொண்ட
ஒரே பெண் தயாரிப்பு நிர்வாகியாக நான் மட்டும்தான் இருப்
பேன் என்று நினைக்கிறேன். 1992 ஆம் ஆண்டு அந்தச் சங்கத்
தில் பதிவு செய்து கொண்டேன்.
தயாரிப்பு நிர்வாகியாகப் பணி செய்வது எவ்வளவு கடின
மானதோ அவ்வளவு சுவையானதும் கூட.
நான் "நீ எங்கே என் அன்பே' என்ற தொலைக்காட்சித்
தொடருக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தேன். அந்
தத் தொடர் விஜய் டிவியிலும், ராஜ் டிவியிலும் ஒளிபரப்பா
னது. அந்தத் தொடருக்காக 70 நாட்கள் ஏற்காட்டில் படப்பி
டிப்பு நடத்தினோம்.
அப்போது கிடைத்த ஓர் அனுபவம்
ரொம்ப வேடிக்கையானது. அதில் நடித்த
ஒரு நடிகை தங்குவதற்கு ஏஸி ரூம் வேண்
டும் என்று கேட்டார். ஆனால் ஏற்காட்
டில் இரவு நேரங்களில் மிகக் குளிராக
இருக்கும். அதனால் நாங்கள் ஏஸி ரூம்
ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர்
ஏற்காடு வந்தும் நடிக்க வரமாட்டேன்
என்று மறுத்துவிட்டார். அவரைச் சமா
தானம் செய்வதற்குள் போதும்போது
மென்றாகிவிட்டது. இன்று ஒருநாள்
அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
நாளை ஏஸிக்கு ஏற்பாடு செய்கிறோம்
என்று வாக்குறுதி கொடுத்து நடிக்க
வைத்தேன். மறுநாள் அந்த நடிகையே
என்னிடம் வந்து ஏஸி தேவையில்லை என்று சொல்லிவிட்
டார். ஏனென்றால் அங்கே அவ்வளவு குளிர்.
அதுபோல சாப்பாட்டுப் பிரச்னை அங்கே வந்துவிட்டது.
சாப்பாடு பரிமாறும்போது டைரக்டருக்கு ஓர் இடத்திலும்,
அஸிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு வேறு இடத்திலும், பிற
ருக்கும் தனித்தனி இடங்களிலும் சாப்பாடு பரிமாறப்படுவது
வழக்கம். ஆனால் அங்கே சாப்பாடு கொண்டு வந்தவர்கள்
அஸிஸ்டன்ட் டெக்னிஷீயன்ஸ்களுக்கும் லைட் பாய்களுக்
கும் ஒரே இடத்தில் வைத்துப் பரிமாறிவிட்டார்கள். இத
னால் அஸிஸ்டன்ட் டெக்னீμயன்களுக்கு மிகவும் கோபம்.
அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பது
அவர்கள் வருத்தம். அவர்களிடம் பேசி சமாதானம் செய்து
படப்பிடிப்பை நடத்துவதற்குள் அன்று ஒரு மணி நேரம் தாம
தமாகிவிட்டது. இப்படிச் சின்னச் சின்னப் பிரச்னைகள் எல்
லாம் பெரியதாக வந்து நிற்கும்.
நிறையப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய வேலை இது.
டைரக்டர் டென்ஷன் ஆனால் ஷூட்டிங் பாதிக்கும். அத
னால் எந்த வேலையாக இருந்தாலும் முதல்நாளே சம்பந்தப்
பட்டவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டுவிடுவேன். அவர்க
ளும் சேர்ந்து திட்டமிட்ட வேலை என்பதால் அனேகமாக
எந்தப் பிரச்னையும் வராது.
"அஞ்சாதே அஞ்சு' என்ற தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்
பான தொடர். அந்தத் தொடருக்கும் நான்தான் தயாரிப்பு நிர்
வாகி. அந்தத் தொடரில் உதய பிரகாஷ் என்ற ஓர் அருமை
யான நடிகர் நடித்தார். ஆனால் அவரின் ஒரே பலவீனம் குடிப்
பது. இரவு எந்த நேரம் படப்பிடிப்பு முடிந்தாலும் காரில்
ஏற்காடு குளிரில் ஏஸி ரூம்
பிரான்ஸ் உணவுக்
கண்காட்சியில்
சுமித்ரா
கொண்டு போய் ஓர் இடத்தில் இறக்கிவிடச் சொல்வார். பின்
னர் குடித்துவிட்டு எங்கேயாவது போய்த் தங்கிவிடுவார். மறு
நாள் நாம் இறக்கிவிட்ட இடத்துக்குச் சம்பந்தமில்லாத தொலை
தூரமான ஓர் இடத்தில் இருந்து போனில் பேசுவார். காரை
அனுப்புங்கள் என்பார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து
விட்டால் மிக அற்புதமாக நடிப்பார்.
எனது தயாரிப்பு நிர்வாகி வேலை அனுபவத்தில் விளம்பரப்
படங்களில் நடிக்க வந்த நடிகை ஜோதிகா, நடிகை சினேகா
போன்றவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
நடிகை ஜோதிகா போல நேர ஒழுங்கு உள்ள பிறரைக் காண்
பது அரிது. காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் காலை 7.30
மணிக்கே ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார். பிறர் எல்லாம் தயா
ராகிவிட்டார்களா என்றெல்லாம் அவர் கவலைப்படமாட்
டார். சரியாக 9 மணிக்கு மேக் அப் போட்டுவிட்டு ஷூட்டிங்
ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். யாருக்காவது எஸ்எம்எஸ் அனுப்
புவதற்கு டைப் பண்ணிக் கொண்டிருப்பார். அந்த நேரம்
டைரக்டர் ஷாட் ரெடி என்று சொன்னால் உடனே அந்த எஸ்
எம்எஸ்ûஸ அனுப்பாமல் அப்படியே வைத்துவிட்டு நடிக்க
வந்துவிடுவார். அதுபோல இரவு 9 மணிக்குப் போக வேண்டும்
என்றால் முதலிலேயே சொல்லிவிடுவார். டாண் என்று 9 மணி
யானவுடன் கிளம்பிவிடுவார்.
நடிகை சினேகா செட்டில் எல்லாருடனும் ஜாலியாகப் பழகு
வார். எல்லாரிடமிருந்தும் தெரிய வேண்டிய விஷயங்களை
எடுத்துக் கொள்வார். யார் எது சொன்னாலும் மிகக் கூர்மையா
கக் கவனிப்பார்.
சமிக்ஷா என்ற நடிகையுடனான எனது அனுபவம் மிக வித்தி
யாசமானது. அவருக்கு காலை ஆறு மணிக்கே பாவ்பாஜி
வேண்டும். காலையில் எல்லாம் கிடைக்காது, சாயங்காலம்
வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அவரை நடிக்க வைக்க
வேண்டும். ஆனால் நடிக்க ஆரம்பித்தார் என்றால் அந்த கேரக்
டராகவே மாறிவிடுவார்.
எந்த ஒரு தயாரிப்பு நிர்வாகியும் எல்லா வேலைகளையும்
அவர் ஒருவரே செய்துவிட முடியாது. அதனால் எனக்குக் கீழே
மூவரை வெவ்வேறு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுத்து அவர்க
ளிடம் வேலைகளை ஒப்படைத்துவிடுவேன். அவர்கள் அந்த
வேலைகளைச் சரியாக, குறித்த நேரத்தில் முடித்துவிட்டார்
களா என்று கண்காணித்துக் கொண்டே இருப்பேன். அப்போ
துதான் வேலைகளை எளிதாக முடிக்க முடியும்.
நாங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பயன்படும் வகை
யில் ஓர் எடிட்டிங் ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்று முடிவெ
டுத்த போது அதற்கான நவீனத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து
கொள்ள ஜெர்மனியில் ஃப்ராங்க்பர்ட் நகரில் நடந்த "ஃபோட்டோ
கீனா' என்ற வீடியோ, ஆடியோ கண்காட்சிக்கு 1992 இல் போயிருந்
தேன். ஏழுநாள் அங்கேயே தங்கியிருந்தும் அந்தக் கண்காட்சி முழு
லதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எங்களுக்குத் தேவை
யான தகவல்களை மட்டும் தெரிந்து கொண்டு வந்தேன்.
விளம்பரப் படங்களில் உணவு வகைகளை நன்றாக அலங்க
ரித்துக் காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு அலங்கா
ரம் செய்ய நிறையச் செலவாகும். நாங்கள் தயாரிக்கும் விளம்ப
ரப் படங்களில் காட்டப்படுகிற உணவு வகைகளை நானே
அலங்காரம் செய்துவிடுவேன். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்
றுக் கொள்ள பிரான்சில் நடந்த உணவுக் கண்காட்சிக்கும்
போயிருக்கிறேன்.
இதுதவிர கோலம் போடுவதில் எனக்குச் சிறுவயதில்
இருந்தே ரொம்ப ஆர்வம். பிறருக்குக் கோலம் போடக் கற்றுத்
தரும் நோக்கத்தோடு "கோலம் - கோலாகலம்' என்ற புத்தகத்
தைத் தயாரித்திருக்கிறேன். அது விரைவில் வெளிவர இருக்கி
றது'' என்றார். ■
http://www.dinamani.com/Kadhir/1522009/25.pdf[/tscii]
-
16th February 2009 01:57 PM
# ADS
Circuit advertisement
Bookmarks