Chapter 6:

SAANKYA YOGA


Verses 1 TO 10


anaashritha: karmaphalam kaaryam karma karothi yah:
sa sanyaasii cha yogi cha na niraknir na chakriya:

yam sanyaasam ithi praahoor yogam tham vidhi paandava
na hyasanyastha sankalpo yogi bhavathi kashchana

aaroorukshor munEr yogam karma kaaraNam uchyathE
yogaaroodasya thasyaiva sama: kaaraNa muchyathE

yadha hi nendriyaarththeeshu na karmasvanushajjathE
sarva sangkalpa sanyaasi yogaaroodasthadhochyathE

udhdharEdh aathmanaathmaanam na-athmaanam avasaadhayEth
aathmaiva hy aathmano bandhur aathmaiva ripuraathmanah:

bandhur aathmaathmanas thasya yEnaathmaivaatmanaa jithah
anaathmanas thu shathruthvE varththEthathmaiva shaturuvath

jithaathmanah prashanthasya paramaathma samaahitha:
sheethoshNa suka dhukkeshu thathaa maanaapamaanayo

gnaana vignaana thrupathaathama kootastho vijithEndriyah
yuktha ithi-uchyathE yogi samaloshtaasama-kanchana

suhrun mithraari-udhaseena madhyastha dhveeshya bandhushu
saadhushvapi cha paapeshu sama budhdhir vishishyathE

yogi yunjeetha sathatham aathmaanam rahasi sthitha
Ekaaki yatha chithaathma nirasheer aparigraha:




Non-performer of work or a person who does not light the sacrificial fire is not a sanyasin. True sanyasin is the one who works without attachment to the fruits of his work.

Renunciation is uniting oneself with the supreme self. He who cannot renounce sensual pleasures cannot become a yogin.

Work or karma is the means to attain yogic state. When he has become a yogi, then serenity or stopping of performing activities is the way to reach supreme state.

When a person has attained thus the yogic state, he is said to have renounced all material desires or gratification of senses and does not act selfishly to satisfy his senses or does not stay attached to the fruits of work.

Man must lift himself by his own self (i.e. self knowledge) He should rise higher with his mind and not fall down and degrade himself. For self, matured mind or 'self' alone is the friend and 'self' alone is his enemy.

For the one who rules his mind with intellect or his shining atman, the mind or self becomes his best friend, and for him who has not reigned his mind, mind becomes the worst enemy.

For that person who has conquered his self, the supreme state is already perceived, he has mastered serenity. In happiness or sorrow, heat or cold, pleasure or pain, honour or dishonour matters not, and he remains in peace ever. (not that they dont face opposites or dualities, but such situations, even when faced, doesn't matter to such yogins as they perceive them as same)

An ascetic soul is satisfied with self knowledge and realisation. He is stable and unswerving in his attitude, he has mastered his senses and self-controlled. thus he sees everything the same. He sees stones and gold with same vision.

Still more excelling is that person who regards his friends and foes equally. He is equi-minded amongst those who are hateful or pioius. He vision and attitude remains same amidst sinner and saint.

A yogin should constatntly concentrate his mind on the almighty brahman, He should live in solitude, alone and should be carefully controlling his mind. He should rid himself from desires and longings for posessions.





கருமத்தின் பயன் கருதாது செய்யவேண்டிய கடமையைச் செய்பவன் சன்யாசி அல்லது யோகி ஆவான். அக்னி வேள்வியையில் தன் கர்மங்களை விட்டவனோ செயல்களைத் துறந்தவனோ அன்று.

பாண்டவா! எது சன்யாசம் என்று கூறப்படுகிறது அதுவே யோகம் என அறிந்து கொள். புலனின்பங்களைத் துறக்காதவன் யோகி ஆக மாட்டான்.

யோகத்தில் ஏற விழையும் ஞானிக்கு செயலே வழியாகிறது. யோகி ஆகிவிட்டபின்போ அந்த ஞானிக்கு செயலற்ற நிலை சிறந்த சாதமாக அமையும்.

இந்தியங்கள் நாடும் பொருள்களில் பற்று இன்றி, கர்மங்களில் பற்று இன்றி இருப்பவன் யோகத்தை அடைந்து விட்டவன் என்று சொல்லப்படுவான் (கர்மங்களில் = கர்ம பலன்களில்)

மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். தன்னைத் தாழ்த்திக் (தன் செயல்களால், எண்ணங்களால்) கொள்ளக் கூடாது. தானே தனக்கு நண்பன், தானே தனக்கு பகைவனும் ஆகிறான் ( அவன்= அவன் எண்ணங்கள், ஆசைகள், செயல்கள்)

எவன் தன்னை ஜெயித்தானோ அவன் தனக்குத் தானே நண்பன். தன்னையே வெற்றிக்கொள்ளாத ஒருவன், தனக்கே மிகப்பெரிய பகையாளி.

குளிர் வெட்பத்தாலும், இன்ப துன்பத்தாலும், மான அவமானங்களாலும் தன்னை ஜெயித்து அமைதியான உள்ளம் உடையவனுக்கு ஞானம் பிறழாது சமத்துடன் நிற்கிறது.

அறிவிலும் ஆன்மீக ஞானத்திலும் அமைதி கண்டு, புலன்களை வென்றவனுக்கு மண்ணும் கல்லும் பொன்னும் சமப்பார்வையில் அமையும். அவனே யோகி.

அவனை விட சிறந்து நிற்கிறான் நண்பர்களையும் பகைவர்களையும், நல்லவர்களையும் கெட்டவர்களையும், உறவினர்களையும், தன்னை வெறுப்போரையும், ஞானிகளையும் பாபிகளையும், சம நிலையில் காண்பவன். அவன் எல்லோர் நலனும் நாடும் ஸ்தித மனம் பெற்றவன் ஆகிறான்.

யோகி எனப்படுவன் எப்போதும் தனிமையிலும் ஏகாந்தத்திலும் இருந்து தன் உள்ளத்தையும், எண்ணத்தையும் அடக்கியவனாய், ஆசைகளை அகற்றுபவனாய் எதையும் நாடாத மன உறுதியுடன் இருக்க முயலவேண்டும்.