Results 1 to 10 of 555

Thread: THIRUKKURALH

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: Thirukkuralh - Why H at the end....

    .

    . வலி - வளி - வழி.!


    Quote Originally Posted by bis_mala
    Quote Originally Posted by jaaze
    what's with the H at the end? numerology ah?
    ஒரு வேளை "ள்" என்று உச்சரிக்கவேண்டும், "ல்" அன்று என்று தெரிவிக்கவோ? எனக்கும் புரியவில்லையே!
    சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு... இந்த இழையை நான் துவக்கியபோதே... நீங்கள் கேட்ட இதே கேள்வியை தமிழ் இலக்கிய-அன்பர் திரு ஹரிகிருஷ்ணன் கேட்டிருந்தார்..

    அவருக்கு விவரமாக விளக்கம் அளித்திருக்கிறேன். முடிந்தால் புரட்டி பாருங்கள்.

    ..இருப்பினும் சுருக்கமாக மீண்டும் விளக்குகிறேன்..

    தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தாக்கம் (Transliterate) செய்கையிலே. திருக்குறள்... என்னும் சொல்லில்... "குரலுக்கும்" "குறளுக்கும்" .. வித்தியாசம் காட்டவே இவ்வாறு "H" என்னும் எழுத்தைப்
    பயன்படுத்துவது... சுமார் 500 ஆண்டுகளாக... 1940-ஆம் ஆண்டுக்கு முந்தைய கால மதுரை தமிழ்ச்சங்க மரபு....

    [ஆனால் வேறு முறைகளும்... ஆங்கிலேயர்களால் புதிதாக உண்டாக்கப்பட்டு புகுத்தப்பட்டன... என்பது தனிச்செய்தி.]

    மதுரை தமிழ்ச்சங்கம் வகுத்த முறையில்... தற்காலத்தைய புதிய மரபு போல... ஆங்கில தலைப்பு-எழுத்து வகைகளான R, L, A, E, U, I, O போன்றவை... ஏனைய எழுத்துக்களினின்றும் அதிக
    முக்கியத்துவம் கொண்டு கொட்டை கொட்டையாக நம் கண்களை உறுத்தும் வகையில்... பயன்படுத்தப்படுவது 1940-ஆம் ஆண்டுக்கு முன்பு, அக்காலத்தில் இல்லை....

    உதாரணமாக ஒரு வாக்கியம்:---.... "ஓடி வந்த கள்ளழகரிடம்... ராஜாராமன் ஏக்கத்துடன் சொன்னார்... "கற்றது கை-மண் அளவே" என்று.

    New Style:--- Odi vantha kaLLazakaritam... rAjArAman, Ekkathutan sonnAr... "kaRRathu kai-maN aLavE"... enRu.

    Traditional Tamil-Sangam Style:--- Oadi vandha Kalhlhazhaharidam... Raajaaraaman yaekkaththudan sonnaar... "katradhu Kai-manh Alhavae" yenrhu.

    வட-இந்திய மொழிகளில்... தலை, தளை, தழை.. போன்ற சொற்கள் கிடையா.. எல்லாம் ஒரே உச்சரிப்பு தான் "தலை" என்று மட்டுமே.

    ஆனால் தமிழில்... வலிக்கும், வளிக்கும், வழிக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.... மேலும் ... கொல்லை-கொள்ளை,...குளம்பு-குழம்பு... வலம்-வளம்...

    எனவே தான்... தமிழ்-மொழிக்கு சிறப்பு- தேவைகளான... "ழ" = "ZHA"... ... "ற" = RHA .... "ள" = LHA.... என்று நெறி வகுக்கப்பட்டது.

    ஆகவே தான் ஆங்கிலேயர் காலத்திலேயே... சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கண்ட தமிழ்ச்சங்க எழுத்தாக்கம் (Transliterate) முறை கடைப்பிடிக்கப்பட்டு... முற்கால தமிழ் இலக்கியங்கள் யாவும்... திருக்குறள், கம்ப-ராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவை ஆங்கில-எழுத்து வடிவில் மூல-நூல்கள் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலகு எங்கும் புத்தகங்கள் வெளி வந்தன.

    ஆகவே அவ்வகையிலே... திருக்குறள் = THIRUK-KURHALH.... என எழுத்தாக்கம் (Transliterate)் செய்யப்படுகிறது.

    தமிழிலும் ஆங்கில-மொழியிலும் மெத்தவும் புலமை கொண்ட முற்காலத்து வல்லுனர்களான... பேராசிரியர் திரு ரா.பி. சேதுப்பிள்ளை,... பேராசிரியர் திரு. அ. சீனிவாச ராகவன் போன்ற பேரறிஞர்கள்
    கையாண்ட முறையும் இதுவே.... நானும் கடைப்பிடிப்பது...

    ...தற்கால "திருதிரு உறுத்தல்" எழுத்தாக்க முறை உங்களுக்கு மனம் ஒப்புகிறதா.?
    ..
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •