-
18th March 2011, 11:17 AM
#11
Senior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் பார்த்தசாரதி சார்,
பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.
1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை
1961 : பாவமன்னிப்பு, பாசமலர்
1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்
1983 : நீதிபதி, சந்திப்பு
1985 : முதல் மரியாதை, படிக்காதவன்
1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.
"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.
['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் மற்றும் சாரதா மேடம் அவர்களுக்கு,
"பாலும் பழமும்", "படித்தால் மட்டும் போதுமா" படங்களின் பதிவுகளில், பாடல்களைப் பற்றிக் கூறும்போது, நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்கள் முறையே - "இந்த நாடகம் அந்த மேடையில்" மற்றும் "அண்ணன் காட்டிய வழியம்மா" பாடல்களைப் பற்றியும் சிறிது எழுதித்தான் வைத்திருந்தேன். ஒரு பதிவிற்கு பத்தாயிரம் சொற்களுக்கு மேல் அனுமதியில்லை என்ற காரணத்தால் வேறு வழியின்றி நீக்கி விட வேண்டியதாகி விட்டது. வேறு எந்த செய்தி மற்றும் கருத்தையும், இந்தப் படங்களின் ஆய்விலிருந்து என்னால் நீக்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு விஷயம்கூட சோடை போகாத விஷயம். எதை எடுத்தாலும், கட்டுரையின் வீச்சும் சுவையும் குறைந்து விடும்.
இது எப்படி என்றால், ஐம்பதுகளின் இறுதியில், வட நாட்டின் பிரபல எடிட்டர் மற்றும் இயக்குனர் திரு பிமல் ராய் அவர்கள் "மதுமதி" என்ற காவியத்தை எடுத்து முடித்தவுடன், (இந்தப் படம்தான் 1963 -இல், ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு inspiration ஆனது.), படம் பல்லாயிரக்கணக்கான அடிகள் நீண்டு விட்டதை உணர்ந்தார். அவருக்கு படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்தால் தேவலை என்று தோன்றி என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். அவரே எடிட்டராயும் இருந்தும், எதை வெட்டுவது என்று தெரியவில்லையாம். அந்த அளவிற்கு, ஒவ்வொரு காட்சியும் ஒன்றோடொன்று மிகச்சரியான தொடர்புடையதாயிருந்து சிறப்பாகவும் இருந்ததாம். அந்தப் படத்தின் கதாநாயகன் திலீப் குமார் பிமல் ராயிடம், இதற்கு சரியான தீர்வு, நாம் அனைவரும் தென்னிந்தியாவின் பிரபல பட அதிபரும், இயக்குனரும், எடிட்டருமான திரு எஸ்.எஸ். வாசன் அவர்களை அணுகுவதுதான் என்று கூறி, (அவரும் எஸ்.எஸ். வாசனும் மிக நெருங்கிய நண்பர்கள். அவரது இயக்கத்தில், "இன்சானியத்" மற்றும் "பைகாம்" (தமிழில் இரும்புத்திரை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை.) படங்களில் திலீப் குமார் நடித்துள்ளார்.), எல்லோரும் சென்னை வந்து, திரு எஸ்.எஸ். வாசனை அணுக, அவரும் ஒப்புக் கொண்டு, சில ஆயிரம் அடிகளைக் குறைத்து கொடுத்தார் என்பது வரலாறு. அந்த அளவிற்கு, எடிட்டிங்கில், திரு வாசன் அவர்கள் புலி என்பார்கள்.
ஒரு பேச்சிற்காகத் தான் இதை நினவு கூர்ந்தேன். இதற்காக நான் பிமல் ராயல்ல. மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் தான், நிறைய, தொடர்புள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.
திரு பம்மலார் அவர்களே, இரும்புத் திரையைப் பொறுத்தவரை, அது கோவையில் வெள்ளி விழாக் கொண்டாடியது என்று தான் எல்லா விவரங்களிலும் உள்ளது. மேலும், தெலுங்கில் வெளி வந்த "நிவுரு கப்பின நிப்பு" படமும், வெள்ளி விழா என்று தான் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். தயை கூர்ந்து திரும்பவும் பார்த்து சொல்லுங்கள்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 18th March 2011 at 11:23 AM.
-
18th March 2011 11:17 AM
# ADS
Circuit advertisement
Bookmarks