-
1st August 2011, 11:11 PM
#11
Senior Member
Platinum Hubber
வைரமுத்துவின் பாடல் வரிகள்:
பல்லவி:
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஆஹா...
சரணம் 1
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவ குயில்கள்
உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பெளர்ணமியாகும்
சந்தோஷம் உன்னோடு கை வீசும் எந்நாளும்
சரணம் 2
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்
-
1st August 2011 11:11 PM
# ADS
Circuit advertisement
Bookmarks