-
19th August 2011, 01:05 PM
#11
Senior Member
Diamond Hubber

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் மகன் கோபி தயாரித்து கே.சங்கர் இயக்கிய ‘மங்கள வாத்தியம்’ படத்தின் செட்டில் எடுத்த படம்’’ என்றார் இந்த புகைப்படத்தை நமக்குத் தந்த ஞானம். வருடம் 1979. கமலுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. இதுபற்றி மேலும் பேசினார் கமலின் மூத்த சகோதரர் சாருஹாசன்.
‘‘கருப்பு வெள்ளை காலத்தில் நான் நடிக்கவே வரவில்லை. (சிரிக்கிறார்) எம்.எஸ்.வி. எனக்கு நீண்ட கால ஆத்ம நண்பர் என்ற முறையில் அவர் சம்பந்தப்பட்ட பட செட் களுக்கு வருவது வழக்கம்! மனம்விட்டுப் பேசுவோம். என்னை வைத்து நிறைய ஜோக்கடிப்பார். அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி. மெல்லிசைக் கச்சேரிகளில் கமலை மறக்காமல் பாட அழைப்பார். அதேபோல இளையராஜா இசையமைப்பாளரானதற்கு முன்பே மேடைக் கச்சேரிகளில் கமலைப் பாடச் சொல்லியிருக்கார்.
இந்த சமயத்தில் சுவாரஸ்யமான ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வரது. இளையராஜாவோட முதல் பட பூஜை.கமல் அப்போ வெளியூரிலிருந்ததால், என்னை விழாவில் கலந்து கொள்ளும்படி சொன்னார். நான் பரமக்குடியிலிருந்து இதற்காகவே என் காரை நானே ஓட்டிக்கிட்டு சென்னை வர்றேன். முதல் சந்திப்பின்போது இளையராஜாவை சுத் தமாக அடையாளம் தெரியாமல் அந்த செட்டிலிருந்த கங்கையமரனை கை குலுக்கி வாழ்த்து சொல்றேன். அவரோ பயங்கரமா சிரிக்கிறார். இரண்டு மாசம்வரை அவர்தான் இளையராஜான்னே நினைச்சுட்டு இருக்கேன். அப்புறம்தான் ஒரு சந்திப்பில் உண்மை தெரிஞ்சுது. நான் அனுப்பிய பல பேரை இளையராஜா பாட வைத்திருக்கிறார். சம்பளத் தொகைகூட எனக்காக பலரிடம் கம்மியாகவே வாங்கியிருக்கார். எம்.எஸ்.வி. போல ராஜாவின் நெருக்கமும் இன்றுவரை தொடர்கிறது...’’ என்றார் சாருஹாசன்!.
-
19th August 2011 01:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks