-
23rd January 2012, 10:30 AM
#11
Senior Member
Diamond Hubber
ஆதிசொக்கா - ரீதா குரலின் ஏற்ற இறக்கத்தில் தெம்மாங்குப் பாடலின் அழகு நன்றாக வெளிப்பட்டிருக்கு! அழுத்தம் திருத்தமாக சரியான உச்சரிப்பு! 
யாத்தே - இனிமை. தேனில் நனைத்த பலாச்சுளை. பவா - ஸ்ரீராம் பார்த்தசாரதி இருவருக்குமே சரியான வாய்ப்பு! போட்டி போட்டுக்கொண்டு பாடியிருக்காங்க!
துக்கமென்ன துயரமென்ன - ராஜாவுக்கு மட்டுமே இப்படிப்பட்ட மெட்டெல்லாம் கைவந்தக் கலை. போற போக்குல ட்யுனை போட்டு முடிச்சிருப்பார் போல. சரணங்கள் ஒவ்வொன்றும் தெளிந்த நீரோடை போல சீரான வேகத்துல பயணித்து பல்லவியோடு ஐக்கியமாகுது. ஸ்ரீராமின் குரல் நாளுக்கு நாள் மெருகேறுகிறது.
ஸ்ரீராம் அடுத்த தளத்திற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
என்ன குத்தம் - ராஜாவின் குரலில் மற்றுமொரு துயரப் பாடல். தமிழ்த் திரையுலகில் ஏசுதாஸ் குரலுக்கென்றே சோக கீதங்கள் நிறைய. அது ஒரு தளம் என்றால் ராஜாவின் துயரப் பாடல்கள் வேறொரு தளம். இப்போதைக்கு ஈர்க்கவில்லை. எதோ இல்லை என்பது போன்ற உணர்வு. போகப் போகத்தான் பார்க்கணும.
மயிலுவைப் பொறுத்தவரை எனது வரிசை இதுவே!
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
23rd January 2012 10:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks