-
10th April 2012, 07:13 PM
#11
Senior Member
Platinum Hubber

ரஜினி திருமண விருந்தில் ரஜினிக்கும்-கமலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி கமல் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தது உங்களுக்காக...
"ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் எனக்கும்-ரஜினிக்கும் இடையே கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் என்னைப் பார்க்க ரஜினி வந்தார். அவர் வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்து "ஸாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது" - இவ்வாறு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கமல்.
-
10th April 2012 07:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks