-
15th May 2012, 10:51 PM
#11
Senior Member
Diamond Hubber
மகாநதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்!
பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்..
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு..
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு..
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்..
எதை யாரு சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே..
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு..
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...
உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
வீராதி வீரன் நீ என்று உலவு..
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு..
நீ நேருக்கு நேர் நின்று பாரு..
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
15th May 2012 10:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks