நகைச்சுவை சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கவுண்டமணி பொதுவாக யாருக்கும் பேட்டி கொடுத்ததில்லை. பல வருடங்களுக்கு முன்பு எப்படியோ விகடன் அவரிடம் பேட்டி வாங்கிவிட்டது. அதை இப்போது வெளியிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதி இது:
“நடிக்க வந்தது எப்படி…?”
“நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு! வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் ‘டாக்கீஸ்’ பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா… அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது!”
“பதினாறு வயதினிலே’ படத்தில் கண்ணெல்லாம் சுருங்கிப்போய், கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக்கிட்டு இருக்கும் உங்களுக்கு! அதாவது, வறுமை..?!”
(சட்டென்று இடைமறித்து) “அதெல்லாம் சும்மா! வறுமையாவது ஒண்ணாவது..! சினிமாவுக்கு முன்னாடிதான் நாடகத்துல இருந்தேன்னு சொல்றேனே… வேளாவேளைக்குச் சோறு; அதிகம் இல்லாட்டியும் பொழுதைத் தள்றதுக்குக் காசு கிடைச்சுக்கிட்டுதான் இருந்தது! வளர்ந்து பெரிய ஆளான பிறகு, ‘ஒரு காலத்துல பணத்துக்கு லாட்டரி அடிச்சேன்; துண்டு பீடிதான் பிடிச்சேன்’னு சொல்றது, இப்ப ஒரு ஃபாஷனாப் போச்சு! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்!”
நன்றி: விகடன்
Bookmarks