-
18th August 2012, 11:47 PM
#11
Senior Member
Diamond Hubber
http://www.inneram.com/announcements...died-5515.html
சென்னை - பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ரா.கி.ரங்கராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
குமுதம் பத்திரிகையில் வெளிவரும் அரசு பதில்களில், ர வுக்கு சொந்தமானவர் ரா.கி.ரங்கராஜன். அண்ணமாலை மற்றும் ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் மற்ற இருவர் ஆவர். 1947 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை குமுதம் பத்திரிகையில் ஆசிரியவர் குழுவில் இவர் பணி புரிந்துள்ளார்.
சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் போன்ற புனைப்பெயர்களில் இவர் எழுதியுள்ளார். 1927 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்த ரா.கி.ர., சக்தி, காலச்சக்கரம் மற்றும் கலகண்டு ஆகிய பத்திரிகைகளிலும் பணி புரிந்துள்ளார். கமலஹாசன் நடித்த மஹாநதி படத்தின் வசனகர்த்தாவாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரா.கி.ரங்கராஜன்,இன்று அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மரணம் அடைந்தார்.
-
18th August 2012 11:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks