-
15th September 2012, 09:28 PM
#11
Senior Member
Diamond Hubber
ரூ 85 லட்சம் மோசடி... பவர் ஸ்டார் சீனிவாசன் கைது... புழல் சிறையில் அடைப்பு!
பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 6 மாதத்திற்கு முன் குரோம்பேட்டை கணபதிபுரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த
பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டார். இவர் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். பாலசுப்பிரமணியத்திற்கு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்காக பிரபல அரசு வங்கி ஒன்றில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாக நடிகர் சீனிவாசன் கூறினார். அதற்காக அவரிடம் இருந்து ரூ.65 லட்சம் கமிஷனாக பெற்றார்.அதன் பிறகு 2 மாதமாகியும் கடனும் வாங்கி கொடுக்க வில்லை, கமிஷன் தொகையும் திருப்பி கொடுக்க வில்லை. பின்னர் 2 தடவையாக ரூ.15 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வில்லை.இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகார் பற்றி விசாரிக்குமாறு கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு ஆணையிடப்பட்டது.
அந்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் நடிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவாவை சேர்ந்த வில்சனிடம் ரூ.3 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.15 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாகவும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் ரூ.5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகவும் மேலும் 2 புகார்கள் நடிகர் சீனிவாசன் மீது தெரிவிக்கப்பட்டன.
கடன் வாங்கிக்குடுக்க இவர் என்ன பேன்க் ஏஜெண்டா?!? இவரிடம் காசு கொடுத்து ஏமாந்தவனுக்கும், ஈமு கோழியின் மேல் காசுபோட்டவனுக்கும் என்ன வித்யாசம்?!?
-
15th September 2012 09:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks