-
26th January 2013, 10:18 AM
#11
Junior Member
Veteran Hubber
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
--------------------------------------------------------
42 வருடங்களுக்கு சற்று பின்நோக்கி -
26-01-1971 அன்று (இதே குடியரசு தினத்தில்) வெளிவந்த "குமரிக்கோட்டம்" படத்தினை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு :
மக்கள் திலகத்தின் 109 வது திரைப்படம்.
கே. சி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 2வது வண்ணப்படம்.
சென்னை குளோப் (101 நாட்கள்) , பிராட்வே (101 நாட்கள்) மகாலட்சுமி (78 நாட்கள்) ஆகிய அரங்குகளிலும், சேலம், திருச்சி மற்றும் இதர மாவட்ட நகரங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம்.
சென்னை வானொலி நிலைய - விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் செய்யப்பட்ட படமாக விளங்கியது :
----------------------------------------------------------------------------------------------------------------------
கே. சி. பிலிம்ஸ். பெருமையுடன் அளிக்கும் வெற்றிக் கோட்டம்
புரட்சி நடிகரின் புதுமை நடிப்புக்கோர் இமயக் கோட்டம்
தந்தையை பழித்தவனின் தருக்கினை (அகந்தையை) அழித்து
தத்தை மொழியாளின் செருக்கினையும் (ஆணவத்தையும்) அழித்து
வெற்றி கொள்ளும் வீரனின் காவியம். செந்தமிழ் வண்ண ஓவியம்.
புரட்சி நடிகரின் புது புது வேடங்கள் - புல்லரிக்கும் சண்டைகள்
எழில் மங்கை ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள், இணையற்ற கோலங்கள்
கோவை செழியனின் வெற்றி படைப்பு : குமரிகோட்டம் ! குமரிக்கோட்டம்.
================================================== =================
தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முகப்பு மற்றும் பின் அட்டைகளில் பளிச்சிடும் நம் பொன்மனச்செம்மலின் எழிலான தோற்றம் :


அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th January 2013 10:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks