அன்பு தோழர்களே நேற்று மேல்மருவத்தூர் பக்கத்தில்உள்ள
அச்சிறுபாக்கம் என்ற ஊரில் புரட்சித்தலைவர் எம்ஜியார்
பிறந்தநாள்விழா திரு ராஜ்குமார் தலமையில் மிகவும்
சீரும்சிறப்புமாக நடைபெற்றது
விழா ஏற்பாடுகளை திரு ராஜ்குமார்அவர்களும் மற்றும்
அவரின் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து செய்தனர்
வீட்டில் இருந்த பெண்கள் முதல் சிறு
பிள்ளைகள்வரை அனைவரும் விழா ஏற்பாடுகளில்
மிகவும் ஆர்வமுடன் செயல்பட்டனர் இரவு 1 மணிவரை
மழலைகள் வேலை செய்தனர்
விழாவிற்கு வந்த மக்கள் அனைவருக்கும் காலை
மதியம் இரவு என மூன்று வேலையும் உணவு தந்து
முகமலர்ச்சியுடன் உபசரித்தனர்
அதேபோல் விழாவில் இலவசமாக புடவை மற்றும்
இரவு அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது
குழந்தைகள் அனைவருக்கும் தலைவர் பிறந்தநாள்
பரிசாக நோட்டுபுத்தகம் பேனா வழங்கப்பட்டது
விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைத்து VIP களுக்கும்
தலைவரின் புகைப்பட ஷீல்ட் வழங்கப்பட்டது
திரும்பிய இடமெல்லாம் தலைவரின் பேனர்களும்
ப்ளெக்ஸ் போர்டுகளும் கண்கொள்ளாகாட்சியாக இருந்தது
தலைவரின் வீடியோ க்ளிபிங்க்ஸ் மிகவும் அருமை
விழா மிகவும் அருமையாக அமைந்தது சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர் திரு ராஜ்குமார் அவர்களை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்
திரு ராஜ்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளமான பாராட்டுக்கள்
விழாவின் காட்சிகள் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்
Bookmarks