இன்னா செய்தாரை ஒறுத்தல் - அவர் நாண நன்னயஞ் செய்து விடல் -
----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த பழமொழிக்கேற்ப நமது பொன்மனச்செம்மல் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் :
சின்ன சின்ன வேடங்களில் நடித்து, எத்தனையோ அவமானங்களை தாங்கி பின்னர் கதாநாயகனாக நடித்த எம்.ஜீ.ஆர்.ஆரம்ப கட்டத்தில் "சாயா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த போது :"குமுதினி" என்ற கதாநாயகியின் மடியீல் தலை வைத்துக்கொண்டு பேசுவது போன்ற காட்சி.
அந்த நடிகையுடன் வந்த அவரது கணவர் ராம்நாத், ஒரு சாதாரண நடிகர் என் துணை மயிலின் மடியில் தலை வைத்து நடிப்பதா? இதனை ஒரு போதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபல்யமான நடிகருடன் நடிக்கச் செய்வதென்றால் ஒத்துக் கொள்வேன். இல்லையென்றால் சாதாரண நடிகருடன் நடிக்க விட மாட்டேன். இப்போதே ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்புகிறோம்" என்று கூறியவர் தன் மனைவி குமுதினியைக் கூட்டிக் கொண்டு சென்று விட்டார்
இந்த நிகழ்வு எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேதனையை தந்தது. அவரைக் காட்டிலும் அப்படத்தின் தயாரிப்பாளர் இதை ஒரு தன்மான பிரச்சினையாக எடுத்துகொண்டார். நமது மக்கள் திலகத்தின் முதுகில் தட்டிக் கொடுத்தவர், "கவலைப்படாதே ராமச்சந்திரா ! உனக்கும் ஒரு காலம் வரும். அப்போது உன் வாசலை தேடி இவர்கள் கண்டிப்பாக வருவார்கள் இனி ஆக வேண்டியதை பார்ப்போம் என்று ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதுவரையில் எம்.ஜி.ஆர். - குமுதினி நடித்த அவ்வளவு பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டு கொளுத்தினார்.
ஆண்டுகள் சில சென்றன. புரட்சி நடிகராகி மக்கள் திலகமாக மலர்ந்து பெரும் புகழும், பேரும் பெற்ற சமயத்தில், நடிகை குமுதினியும், அவரது கணவரும், நமது கொடை வள்ளல் எம்.ஜி. ஆர். இல்லம் தேடி வந்து தாங்கள் அவமானப் படுத்தியதை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது வீடு ஏலம் போகவிருக்கிறது, அவ்வீட்டினை ஏலம் போகாத அளவுக்கு உதவி செய்யமாறு காலில் விழுந்து கெஞ்சினார்கள்.
மன்னிக்க தெரிந்த மாமனிதரின் உள்ளம் :
---------------------------------------------------------------------
மறப்போம், மன்னிப்போம் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையில் ஊறிய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னை அவமனபடுதித்யவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வீடு ஏலம் போகாத அளவுக்கு பொருளுதவி செய்து, வீட்டை மீட்டுக் கொடுத்து, அவர்களின் மானத்தையும் காத்தார்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
Bookmarks