-
11th February 2013, 10:12 PM
#51
Senior Member
Devoted Hubber
ippolaam yen ippadi tv serials varathilla
Hac in hora.....sine mora
-
11th February 2013 10:12 PM
# ADS
Circuit advertisement
-
3rd August 2013, 10:48 PM
#52
Moderator
Diamond Hubber
கள்ளத்தொடர்பு, வன்முறைகளை ஒளிபரப்பும் டிவி தொடர்களுக்கு சென்சார்... வலுவடையும் கோரிக்கை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினால் குடும்ப உறவுகளில் சிக்கல்கள் ஏற்படுகிறது என்பது பெரும்பாலானவர்களின் புகார். சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாலியல் வன்முறைகள், மது அருந்துவது, கள்ளத்தொடர்பு போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள், உண்மையான வாழ்வில் பிஞ்சு நெஞ்சங்களில் பசுமரத்து ஆணி போல பதிந்து எதிர்காலமே பாழ்படும் அளவுக்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகினறன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு தொலைக்காட்சி பெட்டிகளின் முன் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் உடல்பருமன் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். நடனம் என்ற பெயரில் நாகரீகமற்ற நடனஅசைவுகள், அரைகுறை உடைகளை அணிந்து நடனமாடுவது போன்றவை நிகழ்ச்சிகளில் இடம் பெறுகின்றன. ரியாலிட்டிஷோ என்ற பெயரில் பல்வேறு கொடுமையான நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. எனவே சமூக சீரழிவுக்கு காரணமாக இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்ற கோரிக்கை இன்றைக்கு வலுவடைந்து வருகிறது.
Read more at: http://tamil.oneindia.in/movies/tele...ip-167737.html
-
16th November 2013, 08:21 PM
#53
Moderator
Diamond Hubber
‘பாருக்குள்’ சீரியல்!
சினிமாவில் தான் பெரும்பாலான படங்களில் ‘பார்’ காட்சிகளை பார்க்க முடிகிறது என்றால், சின்னத்திரை யிலும் அது தொடரத் தொடங்கி விட்டது. சமீபத்தில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் நாதஸ்வரம், தெய்வமகள் சீரியல்களை பார்த்தபோது இரண்டிலுமே பார்களில் கதை மாந்தர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக தெய்வமகள் சீரியலில் பாரில் தன் நண்பர்கள் வட்டாரத்துடன் குடித்துக் கொண்டிருக்கும் இளைஞனைத் தேடி கதையின் நாயகியே பாருக்கு வருகிறாள். உடனே அங்கே குடித்துக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டர், ‘பொம்பளைங்க கூட இப்ப நேரடியா பாருக்கே குடிக்க வரத்தொடங்கிட்டாங்க’ என்று பேசவும் செய்கிறார். பாருக்குள் சீரியல். சீரியலுக்குள் வீடுகள்.
-
22nd December 2013, 05:51 AM
#54
Moderator
Diamond Hubber
ஆயிரம் எபிசோடுகளாய் அழும் இளவரசி… தென்றல் துளசி….
இன்றைக்கு திரைப்படங்கள் நூறு நாட்கள் ஓடுகிறதோ இல்லையோ டிவி சேனல்களில் சீரியல்கள் 500, 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகின்றன. டி.ஆர்.பி எனப்படும் மந்திரச்சொல்தான் சீரியலை ஓடவைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை டிவி தொடர்கள் என்றாலே 12 எபிசோடுகள்தான் குறைந்த பட்சம் ஒளிபரப்பானது. தினசரி சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய உடன் நூறு எபிசோடுகள் பிறகு 500 எபிசோடுகள் என உயர்ந்து இன்றைக்கு ஆயிரம் எபிசோடுகள் கூட அநாயாசமாய் கடக்கின்றன.
-
29th July 2016, 10:51 PM
#55
Moderator
Diamond Hubber
தமிழ் தொடர்களில் அதிகரிக்கும் வன்முறையும், கவர்ச்சியும்
திரைப்படங்களை போன்று சின்னத்திரை தொடர்களுக்கும் தணிக்கை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நேரத்தில் தமிழ் தொடர்களில் வன்முறைகளும், கவர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
தொடர்களில் பரபரப்பைகூட்ட வேண்டும் என்பதற்காகவும், பார்வையாளர்களை எப்போதும் ஒருவித பதட்டத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதியே வருந்தும் அளவிற்கு அண்ணிகள், மாமியார்கள் என பலரும்... வில்லிகளாக காட்டப்பட்டு வருகிறார்கள்.
கர்ப்பிணி பெண்ணை எப்படி கரு கலைக்க வைப்பது. வலியே தெரியாமல் எப்படி கொலை செய்வது, கொலை செய்ய அடியாட்களை ஏற்பாடு செய்வது எப்படி? கூடவே இருந்து குழிபறிப்பது எப்படி? பாலில் விஷம் கலப்பது எப்படி, சாப்பாட்டில் விஷம் கலந்து கொல்வது எப்படி? கொலை செய்துவிட்டு தடயத்தை மறைப்பது எப்படி என்பது மாதிரியான காட்சிகள் அதிகம் இடம்பெறுகிறது.
டப்பிங் சீரியல்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் ஒரு பாம்பு சீரியலில் பாம்பு பெண்ணாக மாறும்போது சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் அணியும் ஆடைகளை விட குறைவான ஆடைகள் அணிந்து கவர்ச்சி காட்டுகிறது. இவை எல்லாவற்றையும்விட தற்போது பாலியல் பலாத்கார காட்சிகள்கூட தொடர்களில் வர ஆரம்பித்து விட்டது. இதன் அடுத்த கட்டம் என்ன என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
நன்றி: தினமலர்
Bookmarks