-
27th February 2013, 05:04 AM
#11
Junior Member
Platinum Hubber
நன்றி கரவை திரு பாஸ்கரன்
நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்
உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ
சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக
படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே
பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்
உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்
தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்
-
27th February 2013 05:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks